Friday, August 14, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 11

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 11
by (sujatha&venkatesan)6381369319

47 வது திவ்ய தேசம்.  
🌺 அருள்வேண்டி வழிநிற்கும் அடியவரைத் திருக்கையால் அழைத்தருளும் திருமாலே கூடல் அழகா மங்கலங்கள்!
🌺 அருள்வதற்காய் பாம்பணையில் வீற்றிருந்து காத்தருளும் நெடுமாலே பரமபதநாதா கூடல் அழகா மங்கலங்கள்!
எதிரே தனி சன்னதியில் சக்கரத்த்வார தரிசனம் பண்ணிட்டு மங்கலங்கள் சொல்லிண்டே கோயில் உள்ளே நுழையறோம்.  
ஆபீஸ்ல அப்பாவுக்குத்தர வாங்கிண்ட ஸ்தல் புராண புஸ்தகத்த படிக்கறேன். 

வெற்றி தரும் பெருமாள் : இங்குள்ள உற்சவர் “வியூக சுந்தர்ராஜன்’ என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும்முன்பு, சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால், இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு, இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர்.

முக்கோல முகுந்தன் : அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டதிக் பாலகர்களும், ஓவிய வடிவில் அருளுகின்றனர். இதனால் இந்த சன்னதியை, “ஓவிய மண்டபம்’ என்று அழைக்கிறார்கள். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். இவ்வாறு, பெருமாள் இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவராகர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். மலைக்கோயில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் போல், இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள்.

இந்த கோவில் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் 5 கலசத்துடன் கூடிய 5 நிலை ராஜகோபுரம், 8 எழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் 8 பிரகாரங்களுடன் அமைந்த கோவில் இதுவாகும். ஆண்டாள் சக்கரத் தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார் கள், மணவாள மாமுனிகள், விஸ்வஷேனர், ராமர், கிருஷ்ணன், லட்சுமி நாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோவிலின் சுற்றுச் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புலவர் கூடலழகர் : ஒருமுறை மதுரையில் தொடர்ந்து மழை பெய்யவே, மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். தங்களை மழையிலிருந்து காத்தருளும்படி பெருமாளை வேண்டினர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சுவாமி, நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாக ஒன்று கூடி, மழையிலிருந்து மக்களை காத்தது. இவ்வாறு, நான்கு மேகங்கள் ஒன்று கூடியதால் இத்தலம், “நான்மாடக்கூடல்’ என்றும், கூடல் மாநகர்’ என்றும் பெயர் பெற்றது. சுவாமியும், “கூடலழகர்’ என்று பெயர் பெற்றார். இந்த பெருமாள் “துவரைக் கோமான்’ என்ற பெயரில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் புலவராக அமர்ந்திருந்ததாக பரிபாடல் கூறுகிறது. எனவே இவரை, “புலவர் கூடலழகர்’ என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

மீன் சின்னம் ஏன்? : பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன். இந்த சின்னம் உருவானதற்கு இத்தலத்து பெருமாளே காரணமாவார். முற்காலத்தில் இக்கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடின. இதில் கிருதுமால் நதிசுருங்கி ஓடையாகி விட்டது. பாண்டிய மன்னனான சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை வைத்துக்கொண்டான்

.பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு’ என்ற “திருப்பல்லாண்டு’ பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை. 
அடியோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
~ பெரியாழ்வார்
ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார். உற்சவர் வியூக சுந்தர்ராஜப் பெருமாள்.

தமிழ் இலக்கியங்களில்

சிலப்பதிகாரம் இதனை ‘உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்’ என்று குறிப்பிடுகிறது. இதற்கு உரை எழுதும் ‘அரும்பதவுரை’ இதனை ‘ஸ்ரீ இருந்த வளமுடையார்’ என்று தெரிவிக்கிறது. அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை ‘அந்தர வானத்து எம்பெருமான்’ எனக் குறிப்பிடுகிறார்.

இருந்தையூரில் ‘இருந்தையூர் இருந்த செல்வ’ என்னும் பரிபாடல் தொடருக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதும்போது ‘இது வைகைக்கரைக் கண்ணது’என கூறுகிறார். 
கூடலழகரை தரிசனம் பண்ணிட்டு கள்ளழகரையும் தரிசனம் பண்ணிடலாம்னு பக்கத்து பெரியார்பஸ்ஸ்டாண்ட் போறோம். அங்க புதுசா எதோ பெரிசா கட்டிண்டு இருகரகறதனால அங்க போ இங்க போன்னு அலைக்கழிக்கறா..இருட்இ இனிமே கள்ளழகர் போக முடியாது,பஸ்ஸும் ஒண்ணும் புரியலனுட்டு திருமலை நாயக்கர் மகால் போகலாம்னு ஆட்டோகாரன்ட பேரம் பேசி கொண்டு விட அங்கயும் உள்ள நுழைய டைம் முடிஞ்சிடுத்து ஒலி ஒளி காட்சி உண்டு ..ஆனால் மழை வராப்ல இருப்பதால் வெய்ட் பண்ண சொல்றாங்க.   சொன்னபடி மழையும் வந்துடறது.  
                               தொடரும்.




No comments:

Post a Comment