Friday, July 3, 2020

Why to do Tarpanam for our 3 generations

Why to do Tarpanam for our 3 generations ? Genes theory-- 7 generations concept

7 தலைமுறைகள் !

ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் . 

சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன . 

அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . 

   மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .

தந்தையிடமிருந்து Father 21 அம்சங்கள்; 

பாட்டனிடமிருந்து grand father 15 அம்சங்கள்; 

முப்பாட்டனிடமிருந்து great grandfather 10 அம்சங்கள் -- 

ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை . 

நான்காவது மூதாதையிடமிருந்து 6 அம்சங்களும்; 

ஐந்தாவது மூதாதையிடமிருந்து 3 அம்சங்களும்; 

ஆறாவது மூதாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன . 

எனவே, ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெருகின்றன . 

எனவே தான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .

நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் -- 

இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தில தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம்.

ராம்

No comments:

Post a Comment