இது ஒரு உலக தரிசனம்
வெனிஸ்.
சாலைகளுக்குப் பதிலாக கால்வாய்களையே போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் தண்ணீர் நகரம் வெனிஸ். இத்தாலியில் உள்ள அட்ரியாட்டிக் கடல் ஒட்டிய பகுதியில் காணப்படும் 120 தீவுக்கூட்டங்களின் சேர்க்கையே வெனிஸ் நகரமாகும்.
இத்தாலியின் பெரிய துறைமுக நகரமாகவும் இது விளங்குகிறது. உலகின் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.
பரந்த நீர்ப்பரப்புதான் இத்தாலியில் இருந்து இந்த நகரத்தை பிரித்துள்ளது. தீவுகளை நாட்டின் முதன்மைப் பகுதியுடன் இணைக்கும் சில இடங்களில் சாலைகள் உள்ளன. மற்ற பெரும்பாலான இடங்களில் நீர்ப்போக்குவரத்துதான். 400க்கும் மேற்பட்ட குறுக்குப் பாலங்கள், 1500 வினோத கால்வாய்கள் இங்கு காணப்படுகின்றன.
இங்குள்ள கட்டுமானங்கள் பலவும் மரப்பலகைகள் மேல் எழுப்பப்பட்டவைதான். நெருக்கமாக இணைக்கப்பட்ட பலகைகள் மீது செங்கல் மற்றும் கற்களைக் கொண்டு கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. மணல் - களிமண் கலவை அவற்றை இணைக்கின்றன. சில கட்டிடங்கள் 600 ஆண்டுகளுக்கு மேல்பழமையானவை.
பழங்காலத்தில் வெனிசிய மக்கள் படகுகள், தோணி களையே போக்குவரத்திற்குப் பயன்படுத்தினர். ஒற்றை துடுப்புகளைக் கொண்டு அவற்றை நீரில் செலுத்தினர். தற்போது தோணிகள் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பு வாகனமாக இருக்கிறது. திருமணம், இறுதிச்சடங்கு ஊர் வலம் போன்றவற்றுக்காகவும் தோணிகளை பயன்படுத்து கிறார்கள்.
மோட்டார் மூலம் இயங்கும் கப்பல்போன்ற தோற்றம்கொண்ட தண்ணீர் பஸ்களே துரித போக்குவரத்து வாகனமாக விளங்குகின்றன. இவற்றை வேபரெட்டோஸ் என்றும், வாட்டர் பஸ் என்றும் அழைக்கிறார்கள். இவையே தண்ணீரில் வேகமாக செல்ல உதவுகின்றன.
என்வாழ் நாளிலேயே நான் மிகவும் நேசித்த நாடு...இத்தாலி.🙏💐
நேசித்த நகரம்...வெனிஸ்...
மிதக்கும் நகரம்.😍
இன்பமான வெப்பனிலை,சற்றுக்குளிர்!
சில சலக்கும் அலைகளின் அலைஓசை!
எங்குபார்த்தாலும் அழகுமிகு இல்லங்கள்!
வண்ண உடைகளணிந்த ஆண்பெண்கள்!
பிரம்மாண்ட உயர சிலைகள்!
சால்சியோரம்சின்ன சின்ன. எல்லானாட்டு உணவகங்கள்!
பல்னாட்டு பயணிகள்,அழகுமயில்கள்,
வண்ணவண்ண ஆட்சியணிகலங்கள் அணிந்த பா வை யர் கள்!
நீளபடகில் காதலர் அமர்ந்து
தூரத்தில் குல்லாய்அணிந்த உயரபடகோட்டி.gondola படகுகள்!🥰
பலவிதபாலங்களில் நின்று நான் ரசித்த பொலிவுமிகு காட்சிகள்!💐
உலக சொர்கம்.Venice!💐
I love you, Venice,always!💐🙋♂️
By Dr Umesh...

No comments:
Post a Comment