Friday, July 3, 2020

ஆசனம் மற்றும் பிராணாயாமம் மூச்சு பயிற்சி ஆரம்பிக்கும் முன்

ஆசனம் மற்றும் பிராணாயாமம் மூச்சு பயிற்சி ஆரம்பிக்கும் முன் செய்யவேண்டியது

1. பாய் அல்லது கம்பளி விரித்து அதன் மேல் ஒரு பருத்தி துணி விரியுங்கள் . அல்லது கனமான ஜமுக்காளம் விரியுங்கள் .

2. காற்று ஒட்டமான அரை நல்லது. .Ac ஏசி அரை என்றால் எச்சஸ்ட் (exhaust fan) மூலம் உள் காற்றை அகற்றியபின் பயிற்சிக்கு அமருதல் நல்லது .

3 ஊர்வன பறப்பன தொல்லை இல்லாமல் இருத்தல் நல்லது .

4.கூரைக்கு கீழ் அமருதல் நல்லது . ஆரம்பகாலத்தில் வெட்ட வெளியில் அமர வேண்டாம் . 

5. கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமருதல் வேண்டும் .

6.வெறும் வயிற்றில் பயிற்சி செய்தல் நலம் . தவிர்க்க முடியாவிட்டால் திரவம் அருந்தலாம் .

7. உணவு உண்டால் சுமார் 2 மணி கழித்து பயிற்சி செய்தல் வேண்டும்

8. சம்மணம் கூட்டி நிமிர்ந்து உட்கார்ந்த்தால் போதும் .இது சுகா ஆசனம் . . பயிற்சி உள்ளவர்கள் பத்ம ஆசனம் அல்லது வச்ரா ஆசனத்தில் அமரல் நன்று கீழே உட்காரமுடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்து உட்காரலாம்

9 பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து மதரா மூன்று விரல்களையும் நீட்டி உள்ளங்கை வானை நோக்கி இருக்கும்படி இரண்டு முழங்கால் மீது வைத்துக் கொள்ளுங்கள். இது சின் முத்திரை ..
இதன் பின் மூச்சை கனகிடுகிறோம்.

1 மூச்சை உள்ளே இழுக்கும் போது மனதுள் ஒன்று இரண்டு. என்று எண்ணுங்கள். உங்களால் சிரமம் இன்றி எவவளவு என்ன முடியும் என்பதை குறித்து கொள்ளுங்கள். மூன்று அல்லது நான்கு முறை செய்து அதன் சராசரியை குறித்தல் சிறப்பு .. இதன் பெயர் பூரித்தல். இந்த எண்ணிக்கை பூரித்தல் நேரம்.

2. மூச்சை உள்ளே இளுத்த பின் மூச்சை உள்ளே நிறுத்துங்கள் . அப்பொழுது மனதுள் ஒன்று இரண்டு என்று எண்ணுங்கள் . சிரமம் வரும் வரை எண்ணுங்கள் இது கும்பகம் என்பது இந்த எண்ணிக்கை கும்பக நேரம் .

3 மூச்சை இழுத்து நிரித்தியபின் சிரமம் வரும் போது வெளிவேடுங்கள் . அப்படி வெளியிடும் போது மனதுள். ஒன்று இரண்டு என்று எண்ணுங்கள். . இதன் பெயர் ரேசகம். இந்த எண்ணிக்கை உங்கள் ரேசக நேரம் .

இவற்றை செய்து பார்த்து நேரத்தை குறித்து வையுங்கள்.

இது உங்கள் இன்றைய மூச்சு திறன் . . . வாசி யோகத்தின் 3 வது அங்கம் /ஆசனம்..

No comments:

Post a Comment