கொடிய நோய்கள், குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய்களான புற்று, குஷ்டம், மலட்டுத்தன்மை போன்றவை 48 பிரதோஷ தரிசனத்தால் நீங்கும் என்கிறது அகத்தியர் பெருமான் நாடியில் உரைத்த இந்த அற்புத பாடல்...
வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், கண்டிப்பாக விமோசனம் உண்டு. நாடியும் இதைத்தான் சொல்கிறது:
"பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே."
பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது......
நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறி, நம் சந்ததி முழுக்க சிவன் அருள் கிடைக்க - பிரதோஷ நேர வழிபாடு , நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்பதை சித்தர்கள் உணர்த்தி உள்ளனர்.
என் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு இந்த பிரதோஷ வழிபாடு.....
இன்று பிரதோஷம்
#திருஞானசம்பந்தர்_தேவாரம்
#இரண்டாம்_திருமுறை
#037_திருமறைக்காடு
.
திருச்சிற்றம்பலம்.
#சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட்
டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய்
கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங்
கருத்தாலே. 1.
#சங்கந் தரளம் மவைதான்
கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட்
டுறைமைந்தா
மங்கை யுமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித் தகருத்தே. 2.
#குரவங் குருக்கத் திகள்புன்
னைகண்ஞாழல்
மருவும் பொழில்சூழ் மறைக் காட்
டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித் தலழகே. 3.
#படர்செம் பவளத் தொடுபன் மலர்முத்தம்
மடலம் பொழில்சூழ் மறைக்காட்
டுறைமைந்தா
உடலம் முமைபங் கமதாகியு மென்கொல்
கடனஞ் சமுதா வதுவுண் டகருத்தே. 4.
#வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ் மறைக்காட்
டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத் தவிருந்
தநீயென்கொல்
கானார் கடுவே டுவனா னகருத்தே. 5.
#பலகா லங்கள்வே தங்கள்பா
தங்கள்போற்றி
மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா
உலகே ழுடையாய் கடைதோறு
முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண்
டதுதானே. 6.
#வேலா வலயத் தயலே மிளிர்வெய்தும்
சேலார் திருமா மறைக்காட்
டுறைசெல்வா
மாலோ டயனிந் திரனஞ்
சமுனென்கொல்
காலார் சிலைக்கா மனைக்காய்ந்
தகருத்தே. 7.
#கலங்கொள் கடலோ தமுலாவு
கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும்
மறைக்காடா
இலங்கை யுடையா னடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன் றியருள்
செய்தவாறே. 8.
#கோனென் றுபல்கோ டியுருத்
திரர்போற்றும்
தேனம் பொழில்சூழ் மறைக்காட்
டுறைசெல்வா
ஏனங் கழுகா னவருன்
னைமுனென்கொல்
வானந் தலமண் டியுங்கண் டிலாவாறே. 9.
#வேதம் பலவோ மம்வியந் தடிபோற்ற
ஓதம் முலவும் மறைக்காட் டிலுறைவாய்
ஏதில் சமண்சாக் கியர்வாக்
கிவையென்கொல்
ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே. 10.
#காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமாலை யீரைந்
திவைவல்லார்
வாழி யுலகோர் தொழவா னடைவாரே.11.
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment