ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 8
“ஸித்தியடையறதுக்கு முன்னாடி, ஸ்வாமிகள் அடுத்த பட்டத்தை நெயமிச்சார். அது யாருன்னு தெரியுமோ?…
இந்த எளையவருக்கு அண்ணா ஒர்த்தர் திருவிடைமருதூர்ல மடத்து பூஜை பண்ணிண்டு, முத்ராதிகாரியா இருந்தாரோல்லியோ? அவரோட பிள்ளைதான் அடுத்த பீடாதிபதி!
பால்யத்லேர்ந்தே ரொம்ப தாராளபுத்தி, பாண்டித்யம் ரெண்டுமே அவர்ட்ட இருந்துது. ஏன்னா….. வித்வத் ஸ்ரேஷ்டாளும், தானஸூராளுமான மஹாராஷ்டிராக்காராளோடேயே கொழந்தேலேந்தே வளந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம்…..
பீடத்துக்கு வந்ததுக்கப்றம், புது ஸ்வாமிகளோட வித்வத்தும், தாராள குணமும் அபரிமிதமா பரிமளிச்சுது! பூஜா கல்பங்கள்ள சொன்னபடி, ஸ்வாமிக்கி தெனோமும் புதுஸு புதுஸா த்ரவ்யங்கள்ள உபசாரம் பண்றது; வடக்கத்தி பக்ஷண வகைகள் ஏராளமாப் பண்ணி, நைவேத்யம் பண்ணி, அது எல்லா….த்தையும் ஸமாராதனைல விநியோகம் பண்றது; ஏழபாழேளுக்கு அன்னம்-வஸ்த்ரம் குடுக்கறது; வித்வத் ஸதஸ் கூட்டி, ஶாஸ்த்ர விசாரம் பண்றது, பண்டிதாளை ஸம்மானிக்கறது… இப்டியா பண்ணினார்.
முந்தின ஆச்சார்யாள் மாதிரி ஆஜானுபாஹுவா இல்லேங்கறது தவிர, அவரை மாதிரியே கம்பீரமா இருந்ததால, ஸீக்ரமே…. ஸர்வஜனப்ரியரா ஆய்ட்டார்!
இவர் பட்டத்துக்கு வந்த கொஞ்ச நாள்ளதான், நம்ம மடம் ரெண்டாந்தடவை arrest ஆச்சு!
கைதி பண்ணினது, அதே தஞ்சாவூர் ராஜா அனுப்பின ஸிப்பாய்கள்தான் !
ஆனா, போன தடவை ராஜாவாவே action எடுத்தார். இந்தத் தடவை, அவரை இன்னொர்த்தர் action எடுக்கப் பண்ணினார் !
அவர் யாருன்னா…..ரொம்ப ஆஸ்சர்யமாயிருக்கும்!
நம்ம கதையோட முக்ய புருஷரான எளையவர்தான்…. அது!
போன தடவை…. ஏதோ தஞ்சாவூர் கும்மாணம் ரோடுல மறிச்சான்னா, இப்போ ஸாக்ஷாத் ஸ்ரீமடத்தையே நேரா சுத்தி வளைச்சிண்டு காவல்ல வெச்சுட்டா!
என்ன? ஒங்களோட ஆர்வத்தை நன்…….னா தூண்டியாச்சோல்லியோ!
[சின்னக் குழந்தை மாதிரி ஒரே குதூஹலமான சிரிப்பு]
எதுக்கு ராஜாவை, எளையவர் தூண்டிக் குடுத்தார்?
பொருளோட அருமை தெரிஞ்சவர் இல்லியா? அதுக்கு முன்னாடி…நம்ம மடம் எத்தனை கஷ்ட தசைல இருந்துதுன்னு அவருக்குன்னா தெரியும்! பாத்தார்…! புது ஸ்வாமிகளானா… கணக்கு வழக்கே பாக்காம, தான தர்மம் பண்ணினதுல, நடுவாந்த்ரத்ல சேத்து வெச்ச மடத்து ஸொத்தெல்லாம், செல வர்ஷங்கள்ள கரைஞ்சே போய்டுத்து! முந்தி, தஞ்சாவூர்ல… யானை மேல பவனி வந்ததுக்கு அப்றம், ராஜா மடத்துக்கே ஸமர்ப்பிச்ச அந்த பெரிய்ய அம்பாரியோட வெள்ளியக் கூட பிரிக்கிற ஸ்திதிக்கு போய்டுத்து!
“புது ஸ்வாமிகளுக்கு, தான்…. பூர்வாஶ்ரம சித்தப்பா..ங்கறதாலேயே, ஸாதாரணமா, ஸ்ரீகார்யம் [மடத்தின் ப்ரதம மானேஜர்] பாக்கற ஒத்தர், நன்னா வலுவா எடுத்துச் சொல்ற அளவுக்குக் கூட, தன்னால சொல்லவும் முடியாம “delicacy” குறுக்க நிக்கறது!….
இதையெல்லாம் ஓயாம யோஜனை பண்ணிண்டே இருந்தார்……..
“பேச்சு வார்த்தைன்னா, delicacy வரத்தான் வரும்! அதுனால, துணிஞ்சு மொரட்டுக் கார்யமாவே பண்ணிடணும்….!… நமக்காக பண்ணல! பகவத்பாதாளோட பீடத்துக்காக பண்றோங்கறதால, நாம மர்யாதை தப்பிப் பண்ணினதா கெட்ட பேர் வந்தாக்கூட பரவாயில்ல”ன்னு ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.
‘ஹெஜீப்” இல்லியா? நேரா… ராஜாவுக்கே நிருபம் [செய்தி] அனுப்பினார்…..
என்னன்னு?….
‘மடத்துக்கு ஒரு டஜன் ஸிப்பாய்களை அனுப்பி வெக்கணும்‘-னு அதுல கேட்டுண்டார்.
ராஜாவுக்கு… இவரோட வாக்கு, வேதவாக்குன்னா..! அதுனால, ஏன்?எதுக்கு?-ன்னெல்லாம் கேக்காம, ஒடன்..னே ஸிப்பாய்களை அனுப்பி வெச்சார்…..!
ஸாது ப்ராஹ்மணன் “மிலிட்டரி action ” எடுத்தார்!
[அழகாக சிரித்தார்……தன் ஸாது தாத்தாவின் action-னை நினைத்து]
மடத்தோட பாராக்காராளை போகப் பண்ணிட்டு, அதுக்கு பதிலா, ஸிப்பாய்களை காவலுக்கு போட்டுட்டார்….!
எதுக்கு?……..
ஸன்னிதானத்தோட ‘எளகின’ மனஸை exploit பண்ணிண்டு, யார் வேணாலும், அவர்ட்ட பொய்யோ, மெய்யோ எதையோ சொல்லி, மடத்தோட பணத்தை நன்…னாக் கறந்துண்டு போறதை தடுக்கணும்-ன்னு plan பண்ணினார். ஏன்னா…. ‘யாராயிருந்தாலும் தன்னை நேரா போய்ப் பாத்து பேசி, வேணுங்கறதை வாங்கிண்டு போகலாம்‘-ன்னு, ஸ்வாமிகளே allow பண்ணினதை, நெறையபேர் misuse பண்ணிண்டு, அவரோட தயாள சிந்தையை, expoit பண்ணிண்டிருந்தா!
‘மடத்தோட பாராவை (security) ஸ்வாமிகளோட அபிப்ராயத்துக்கு எதிரா… பண்ணச் சொல்றது மஹா தப்பு! ஆனா…. மடத்தோட நல்லதுக்காக, தான்….ஒத்தர், அந்த பாபத்தை பண்றது போறாதுன்னு, மத்தவாளையும் தூண்டினா, morale-லே [ஸேவா நெறி] கெட்டுப் போய்டும்’ன்னுதான் ராஜ ஸேவகாளை வரவழைச்சார்.
அவாட்ட…. “நா….சொல்றவாளைத் தவிர, வேற யாரையும் உள்ள விடவேணாம்“ன்னு உத்தரவு போட்டுட்டார்!
ஸிப்பாய்கள் காவல்ன்னா…..ஏமாத்தறவா பயந்துண்டு வரமாட்டாளோன்னோ?
இந்த திடீர் action-னை பாத்து, ஊரே கிடுகிடுத்துப் போச்சு!
யௌவன தசைல இருந்த புது ஸ்வாமிகளும், ‘counter challange’-ஜா ஒண்ணு பண்ணினார்.
என்ன தெரியுமோ?……
‘ஸிப்பாய்கள் திரும்பிப் போனாலொழிய, தான், பிக்ஷை பண்றதில்ல’-ன்னு ஸத்யாக்ரஹம் ஆரம்பிச்சுட்டார்!
ஹெஜீபுக்கு மனஸ் கேக்கல! ஒரேயடியா விட்டுக் குடுத்துட்டா, எள-வயஸு ஸ்வாமி “இனிமே நம்ம இஷ்டம்”ன்னு பழையபடி உதாரமாப் பண்ண ஆரம்பிச்சு, பழேபடி, மடம் ஸ்ரமதசைக்கு வந்துடப் போறதே-ன்னு விசாரப்பட்டார்.
மனஸ்ல பெரிய இழுபறி போராட்டம்!
நேரா ஸ்வாமிகள்ட்ட போயி…. “நா…..ஆதில பட்ட கஷ்டத்னால சொல்றேன். நா…. இருந்தாலும், போனாலும் என்னிக்குமே இருக்க வேண்டிய இந்த மடத்துக்கு கஷ்டம் வரக்கூடாது-ங்கற ஒண்ணைத் தவிர, என் ஹ்ருதயத்ல எதுவும் இல்ல…!. கனகாபிஷேக பவுன்ல, பொத்திப் பொத்தி பாக்கி வெச்சிண்டிருக்கேனே, அதையாவுது, permanent-டா மடத்துக்கு வருமானம் வரும்படியா invest பண்றதுக்கு ஒத்துக்கணும்”ன்னு கேட்டார்.
புது ஸ்வாமிகளும் அவரோட கோரிக்கைல இருந்த பரம ஞாயத்தை புரிஞ்சுண்டார்… ஒத்துண்டார்.
எளையவர் மிலிட்டரி action-னை வாபஸ் வாங்கிண்டார்! ஸிப்பாய்கள் திரும்பிப் போனா! பக்தாள்ளாம் “அப்பாடா!”ன்னு நிம்மதியானா..!.”
--------------------------------------------------------------------------------------------------------------------------
*"கோலம் அரிசி மாவாலே தான் போடணும்" - மஹா பெரியவா
சின்ன காஞ்சீபுரத்தில் இருக்கும் போதெல்லாம் வரதராஜபெருமாள் கோவிலில் பிரதஷணம் செய்வது, தவறாத கடமை, பெரியவாளுக்கு.
ஒரு விடியற்காலை பொழுதில், கோவிலில் பிரதஷணம் செய்துவிட்டு, பக்தர்கள் எல்லாம் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்து கொண்டு உடன் வர, தெருவில் நடந்து வந்தார்கள், பெரியவா.
ஒரு வீட்டின் வாசலில், ஒரு பெண் குழந்தை கோலம் போட்டு கொண்டிருந்தது.
பெரியவா நின்றார்கள்.
' கோலம் நன்னாப் போடறியே ! பேஷ் ! ஆனா, கோலம் அரிசி மாவாலே தான் போடணும். அப்போ தான் ஈ, எறும்பு, பட்சியெல்லாம் அரிசி மாவை சாப்பிடும்; கோலம் போட்ட உன்னை சந்தோஷமா பார்க்கும். மொக்குமாவாலே போட்டால் அது எந்த ஜந்துவுக்கும் உபயோகபடாது இல்லையா?'
பெண் குழந்தை அழகாக தலையை ஆட்டிவிட்டு நமஸ்காரம் செய்தது.
பெரியவாளின் இந்த அறிவுரை, அந்த குழந்தைக்கு மட்டும் தானா? இல்லை, எல்லா குழந்தைகளுக்குமா?
தாயார்கள் யோசிக்கட்டும்...
No comments:
Post a Comment