Monday, August 17, 2020

நோய் எதிர்ப்புப் பண்பாட்டு பழக்கம்

நம் முன்னோர்கள் கடைபிடித்த நோய் எதிர்ப்புப் பண்பாட்டு பழக்கம்

எவ்வளவு கொடிய நோய்க் கிருமிகளும் பெரும்பாலும் சுவாசப் பாதையில் அடைப்பை ஏற்படுத்துவது தான் அதன் இயல்பு..

அதனை நம் மூலிகையைக் கொண்டு நோய் தடுத்து ஆரோக்கியம் கண்டு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள்..

இந்த வழிமுறைகள் நம் பழந்தமிழ் நூல்கள் கூறுகிறது..

வேப்பம் இலை / கீழாநெல்லி இவை இரண்டையும் ஒரு கைப்பிடி எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க விட்டு அது அரை லிட்டராக சுண்டும் வரை விட்டுப் பிறகு இறக்கி ஆற விட வேண்டும்..

இந்த நீரில் வாய்க் கொப்பளிக்க வேண்டும்.வாயில் இந்த நீரை ஊற்றி சிறிது நேரம் அப்படியே வைத்திருந்தால் அதன் கலர் மாறும்.. தொண்டையில் படும்படிக் கொப்பளித்து துப்பி விட வேண்டும்..

இதனால் வாயில்.. சுவாசப் பாதையில் நுழைய இருக்கும் கிருமிகள் அழிந்து விடும்.. புதிய கிருமிகளும் அவ்வளவு எளிதில் நுழையாது..

இதனுடன் இருந்தால் ஒருதலை பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்... இல்லையென்றால் தேவையில்லை.

No comments:

Post a Comment