Saturday, August 15, 2020

திரிபலா

திரிபலா
👉திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து. 
👉நெல்லிக்காய், கடுக்காய்  தான்றிக்காய்  மூன்று மூலிகைகளின்
கூட்டுப்பொருள்.
👉 அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

👉திரிபலா பொடியை இரவில் சாப்பிடுவதால் நன்மைகள் ஏராளம்.

👉 முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.

👉இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை
 அதிகரிக்க உதவுகிறது. 
 👉இதயநோய்கள் வராமல் தடுக்கிறது.
 👉புற்றுநோய் செல்களை  எதிர்த்துப் போராடும்.

👉உணவுப் பாதை நச்சுப் பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. 
👉செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. 
👉உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கும் சிறந்த மல மிளக்கியாகவும்  செயல்படுகிறது.

👉வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. 
👉வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

👉வயிற்றுப்புண்ணை ஆற்றும் அல்சரை கட்டுப்படுத்தும்.

👉ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை 
அதிகரிக்கச்செய்கிறது. 
👉ரத்தசோகையை சரிசெய்கிறது.
👉ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

👉கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. 
👉உடலில் குளூகோஸின் அளவை  சமநிலைப்படுத்த உதவுகிறது. 
👉திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

👉உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். 
👉சீரான உடல் எடையைப் பெற உதவுகிறது.
 👉உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

👉ரத்தத்தில் உள்ள நச்சுப்  பொருட்களை சுத்திகரிக்கும். 
👉 ரத்தத்தைச் சுத்தம் செய்யும். 
👉தோல் நோய்கள் & தொற்று    நோய்கள் வராமல் சருமத்தைக் 
   காக்கும். 
  👉சருமத்தைப் பளபளப்பாக்கும்.

👉மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை
 ஏற்படுத்தும். 
👉சைனஸ் நோயைத் தீர்க்கும். 
👉சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.

👉 உடலின் வளர்ச்சிதை   மாற்றத்தை சீராக்கும். 
  👉வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் 
  👉தலைவலியைக் குணப்படுத்தும். 
👉  கண்பார்வைக் கோளாறைச்     சரிசெய்யும்.

No comments:

Post a Comment