Tuesday, August 18, 2020

மஹாளயம் விவரம்-1.

மஹாளயம் விவரம்-1.

மஹாளயம்- தர்ப்பணம்.

இறந்தவர் படத்துக்கு பூ போட்டு, கற்பூரம் காண்பிக்கலாம், நைவேத்யம் செய்யலாம். ஸ்வாமி அலமாரியில், ஸ்வாமி படங்களுடன் சேர்த்து வைக்க கூடாது. பூஜை அறையில் தனியாக வைத்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட குடும்பத்திற்கு தனிப்பட்ட நபருக்கு நன்மைகள் தீமைகள் செய்வதில் தெய்வங்களை விட பித்ருக்களுக்கு அதிக சக்தி உள்ளது எங்கிறது கருட புராணம்.

ஆதலால் முதலில் பித்ருகளுக்கு கர்மாக்களை செய்துவிட்டு பிறகு தெய்வங்களுக்கு கர்மாக்களை செய்ய வேண்டும் எங்கிறது தர்ம சாஸ்திரம்.

அமாவாசை போன்ற நாட்களில் உங்கள் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. அடுக்கு மாடி குடியிருப்பாயின் தெரு வாசலில் கோலம் போடலாம்.

ஆனால் உங்கள் போர்ஷன் நுழை வாயிலில் கோலம் போட வேண்டாம். தர்ப்பணம் அல்லது சிராத்தம் முடிந்த பிறகு கோலம் வேண்டுமானால் போட்டுகொள்ளலாம். 

அமாவாசை தர்ப்பணம் முடியும் வரைபூஜை அறையில் விளக்கேற்ற வேண்டாம். பூஜை அபிஷேகம் செய்ய வேண்டாம்.

 அமாவாசை தர்ப்பணம் முடிந்தபிறகு பூஜை அறையில் விளக்கேற்றலாம்.

பூஜை அபிஷேகம் செய்யலாம். பித்ருக்களுக்கு பிடித்தமான உலோகங்கள் தங்கம், வெள்ளி, செம்பு (தாமிரம்) வெங்கலம், பித்தளை.

மஹாவிஷ்ணு பாதங்கள் பதித்த செப்பு தாம் பாளங்கலில் தர்ப்பணம் செய்யலாம். எவர்சில்வர் வேண்டாம்.

மஹா பாரத யுத்தம் தீர்மானமானவுடன் , யுத்தத்தில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு துரியோதனன் சகாதேவனிடம் 

நல்ல நாள் பார்க்க சொன்னான். சகாதேவனும் அமாவாசை நல்ல நாள் என்று தர்மத்துக்கு கட்டுபட்டு பார்த்து சொன்னான். 

ஸ்ரீகிருஷ்ணர் அமாவாசைக்கு முந்திய நாளில் மூத்தவரான தர்ம புத்ரரை அமாவாசைக்கான பித்ரு தர்ப்பணத்தை செய்ய சொல்கிறார்.

இதை கண்டு ஆச்சரியமடைந்த சூரிய சந்திரர்கள் அமாவாசை தப்பணம் நடக்கும் இடத்திற்கு வந்து நாளை தானே அமாவாசை

இன்று ஏன் தர்ப்பணம் செய்கிறீர்கள் என வினவ,ஸ்ரீக்ருஷ்ணர் நீங்கள் இருவரும் ஒன்றாக இணையும் நாள் தானே அமாவாசை

இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாக தானே இருக்கிறீர்கள். ஆதலால் இப்போது தான் அமாவாசை என்று பதில் சொன்னார்.

சூரியனும், சந்திரனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது முதல் போதாயண அமாவாசை என்று ஆரம்பம் ஆயிற்று. 

அதாவது அமாவாசை இருக்கும் நாளன்று சூரியாஸ்தமனத்திற்கு முன்பு ப்ரதமை திதி இருந்தாலோ , அல்லது அமாவாசைக்கு மறு நாள் ப்ரதமை திதியன்று சூர்யாஸ்த மனத்திற்கு முன்பு த்விதியை திதி வந்தாலோ அப்போது போதாயன ஸூத்ரத்தை சேர்ந்தவர்கள் அமாவாசை தர்ப்பணத்தை அன்று செய்ய வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் அப்போது அங்கிருந்த போதாயணர் மகரிஷியை சூத்ரம் எழுத சொன்னார். 

இதற்கு போதாயணர் ஸுத்ரம் என பெயர் வந்தது. முதல் நாளே எல்லோரும் தர்ப்பண ம்செய்ய ஆரம்பித்தனர். 

துரியோதனின் ஒற்றர்கள் இதை துரியோதன னுக்கு தெரிவிக்க துரியோதனனும் அமாவாசைக்கு முதல் நாளே போர் ஆரம்பித்து தோற்றான்.

தர்ம சிந்து பக்கம் 166 சொல்கிறது. சிறு வயதுள்ள பையனின் தகப்பனார் இறந்து விட்டால் , மூன்று வயதிற்கு மேற்பட்ட

பெற்ற பையன் குழந்தை ஆனாலும், பூணல் போடாவிட்டாலும் வேத மந்திரங்களை சொல்லி தனது பெற்றோருக்கு கர்மா செய்து தான் ஆகவேண்டும். 

பொது விதி உப நயனம் ஆகும் வரை வேத மந்திரம் சொல்ல கூடாது என்பது. ஆனால் பெற்றோருக்கு ஸம்ஸ்காரம் செய்ய நேரிட்டால் 

அந்த பையனுக்கு ஓம் என்று சொல்லி தற்காலிகமாக பூணலை மாட்டி விட்டு வேத மந்திரங்கள் சொல்லி ஸம்ஸ் காரம் செய்ய சொல்லலாம்.

சிராத்தத்திற்கு பதில் அன்ன தானம் செய்வதால் பலன் கிடைக்காது. அன்ன தானம் மூலம் ஒருவர் பசியை யார் வேண்டுமானா லும் போக்கி விடலாம். 

மறைந்த முன்னோர்களுக்கு சிராத்தம் தர்ப்பணம் மூலம் மட்டும் தான் பசி தாகத்தை போக்க முடியும் . 

ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் சிராத்தம், தர்ப்பணம் செய்தாலும் உங்கள் முன்னோர்களுக்கு போய் சேராது என்கிறது கருட புராணம்.

ஆசாரத்துடன் சிறிய அளவில் சிராத்தம் செய்தாலும் போதும். முன்னோர்கள் உங்கள் சிறிய வீட்டிற்கு வர தயங்க மாட்டார்கள். 

தாங்கள் வசிக்கும் வீட்டிலேயே சிராத்தம் செய்ய முயற்சியுங்கள்.

சிராத்த திதி என்று பஞ்சாங்கத்தில் ஒரு காலம் உள்ளது. அதை பார்த்து அன்றைய நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

சிராத்த திதியை சரியாக பார்க்காமல் முன்பாகவே செய்து விட்டால் மறுபடியும் சிராத்த திதியன்று சிராத்தம் செய்ய வேண்டும்.

 சந்தியாவந்தனமும் அதை செய்ய வேண்டிய காலத்திற்கு முன் செய்யக்கூடாது.

வசதி, சூழ் நிலை காரணமாக சில சமயங்களில் சகோதரர்கள் சேர்ந்து சிராத்தம் செய்ய வேன்டிய நிர்பந்த காலங்களில் சேர்ந்து செய்யலாம்.

அதன் பிறகு சேர்ந்து செய்ய வேண்டிய கட்டாயமில்லை. தனி தனியாக செய்வதையே நமது சாஸ்திரம் வற்புறுத்துகிறது.

இறந்து போன ஒருவரை நாம் பித்ருக்களாக பார்க்க வேண்டும். வயது உறவு முறை பார்க்க கூடாது. அண்ணன் தனது தம்பிக்கு செய்யும் சிராத்ததில் பித்ரு சேஷம் சாப்பிடலாம்.

மஹாளயம் என்றால் பல விதமான உலக ங்களில் வசிக்கும் மறைந்த முன்னோர்கள் அனைவரும் ஒன்றாக நாம் வசிக்கும் பூலோ கத்தில் சேரும் நாட்கள் என பொருள் கொள்ள லாம்.

யம லோகத்தில் யம தர்ம ராஜா யம லோ கத்தை சுத்தம் செய்யும் பொருட்டு அனைத்து முன்னோர்களையும் சில காலம்

 பூலோகத்தில் இருக்கும் படி பணிக்கிறார். நமது முன்னோர்களும் அவரவர் குடும்பத்திற்கு ஆசி வழங்க மகிழ்ச்சியுடன் வருகிறார்கள்.

பித்ரு லோகம் சென்ற கர்ணனுக்கு அங்கு பசி எடுத்தது. அங்கு ஆகாரம் கிடைக்க வில்லை. அன்ன தானம் பூலோகத்தில் இருந்த போது செய்ய வில்லை. மற்ற தானங்கள் தான் நிறை செய்தாய். 

ஆதலால் 15 நாட்கள் பூலோகத்தில் சென்று வசித்து அன்ன தானம் செய்து வா என்று யம தர்ம ராஜா கர்ணனை அனுப்பிய நாட்களை மஹாளய பக்ஷம் எங்கின்றனர் என்றும் வரலாறு உள்ளது. 

ஆஷாட மாதம் முதல் ஐந்தாவதாக வரும் கிருஷ்ண பக்ஷம், மஹாளய பக்ஷம் எனப்படுகிறது ; சூரியன் கன்யா ராசியில் இருக்கும் போது நிகழும் மஹாளய பக்ஷம், அதிக மான புண்ணிய பலத்தைதரும்.

06-07-2020 ஆஷாட பகுளம், 21-07-2020 சிராவண சுத்தம், 04-08-2020 சிராவண பகுளம், 19-08-2020 பாத்ரபத சுத்தம், 03-09-2020 முதல் பாத்ரபத பகுளம். = மஹாளய பக்ஷம் ஆரம்பம். 

இதையே ஆஷாட்யா: பஞ்சமாபர பக்ஷே என்று சங்கல்பத்தில் சொல்கிறோம்.

ஒரு பக்ஷம் என்பது 15 நாட்கள் தான். எனினும் வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம்226 உள்ள தேவல மஹரிஷியின் வசனப்படி அன்றும் சந்திரனின் தேய்மானம் தொடர்கிறது

என்பதால் மஹாளய அமாவாசைக்கு மறு நாள் சுக்ல பக்ஷ ப்ரதமையிலும் தர்ப்பணம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். மஹாளய பக்ஷ தர்ப்பணம் செய்பவர்கள். 

திதியின் நாழிகை வ்ருத்தி, திதியின் நாழிகை குறைவு ஆகியவற்றால் 15 நாட்களும் வரும். 16 நாட்களும் வரும். 14 நாட்களும் வரும். ஒரு பக்ஷம் என்பது 15 நாட்கள் தான்.

நிர்ணய சிந்து 110 சொல்கிறது. மஹாளய பக்ஷம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் புண்ணிய நதி ஸ்நானம் , 

பித்ரு தர்ப்பணம், மந்திர ஜபம், தானங்கள் அனைத்தும் ஸோம யாகம் செய்த பலனை தருகிறது என்று. 

ஆதலால் 60 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் மஹாளய பக்ஷம் தர்ப்பணத்தை தினமும் செய்ய முயற்சிக்கலாம்.

மஹாளய தர்ப்பணம் 16 நாட்களும் செய்வதற்கு பக்ஷ மஹாளயம் என்று பெயர்.

மஹாளய பக்ஷத்தில் ஏதோ ஒரு நாள் மட்டும் பித்ருக்களுக்கு ஹிரண்ய சிராத்தம், தர்ப்பணம் செய்வதற்கு ஸக்ருன் மஹாளயம் என்று பெயர். 

பக்ஷ மஹாளயம் செய்பவர் நாள், நக்ஷத்ரம் பார்ர்க்க வேண்டாம். தினமும் 16 நாட்கள் தர்ப்பணம் செய்யலாம்.ஏதோ ஒரு நாள் ஹிரண்ய சிராத்தம் செய்ய வேண்டும்.

ஸக்ருன் மாஹாளயம்:- ஏதோ ஒரு நாள் மட்டும் ஹிரண்ய சிராத்தம், தர்ப்பணம் செய்பவர் நிர்ணய சிந்து 110 படி பஞ்சமிக்கு முன்பும்,

நந்தா திதிகளான ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி ஆகிய திதிகளிலும், சதுர்தசி, அமாவாசை அன்றும், வெள்ளி கிழமைகளிலும்

கர்த்தாவின் ஜன்ம, நக்ஷத்திரதன்றும், கர்த்தாவின் மனைவி மக்களின் ஜன்ம நக்ஷத்திரத்திலும் மஹாளயம் செய்வதால்

தனது குழந்தைகளுக்கும் செல்வத்திற்கும் குறைவு வரும் என்று கூறுவதால் நாள் பார்த்து செய்ய வேண்டும்.

மஹா பரணி, மஹா வ்யதீபாதம், துவாதசி, மத்யாஷ்டமி, கஜசாயை ஆகிய நாட்களில் ஏதோ ஒரு நாளை தேர்ந்தெடுத்து அந்த நாளில் திதி, நக்ஷத்ரம், கிழமை ஆகியவற்றை பொருட் படுத்தாமல் செய்யலாம். இவை விதி விலக்கு நாட்கள் என சாஸ்திரத்தில் கூற பட்டுளது.

மஹாளய பக்ஷத்தில் தினசரி தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் பஞ்சமி அல்லது அஷ்டமி அல்லது தசமீ முதல் ஆரம்பித்து அமாவாசை முடிய தினசரி தர்ப்பணம் செய்யலாம்.

இதுவும் முடியாதவர்கள் மஹாபரணி மத்யாஷ்டமி, மஹா வ்யதீபாதம், கஜச்சாயை ஆகிய 4 நாட்களாவது தர்ப்பணம் செய்யலாம்.

புரட்டாசி மாதம் கிருஷ்ண பக்ஷத்தில் இறந்தவர்களுக்கு இறந்த தினத்தில் சிராத்தம் செய்துவிட்டு அதன் பிறகு தான் ஒரு நாளில் மஹாளய பக்ஷத்திற்குள் மஹாளய சிராத்தம் செய்ய வேண்டும்.

மஹாளய பக்ஷம் 16 நாட்களும் பக்ஷ மஹா ளய தர்ப்பணம் செய்பவர்கள் நடுவில் பெற்றோர் சிராத்தம் வந்தாலும் கூட தின சரி தர்ப்பணம் செய்து கொண்டு வரலாம்.

பெற்றோர் சிராத்ததன்று முதலில் சிராத்தம் செய்துவிட்டு பிறகு மஹாளய தினசரி தர்ப்பணம் செய்யலாம். 

வருடாந்திர சிராத்தம் மஹாளய பக்ஷத்தில் செய்த பிறகு மஹாளயம் சிராத்தம் செய்ய நாள் கிடைக்காவிட்டால் மஹாளய பக்ஷத்தி

ற்குள் (கெளண பக்ஷவிதி) அடுத்த மாதம் வரும் கிருஷ்ண பக்ஷத்தில் அதாவது ஸப்த மாபர பக்ஷத்தில் நாள் பார்த்து மஹாளய த்தை செய்ய வேண்டும்.

மஹாளய பக்ஷத்தில் , அதாவது சூரியன் கன்யா ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் நிகழும் பரணி நக்ஷத்ரம் மஹா பரணி என்று அழைக்க படுகிறது. பரணி நக்ஷத்திரத்தின் அதி தேவதை யமன். 

நிர்ணய சிந்து 114 சொல்கிறது. இந்த பரணி நாளன்று மறைந்த முன்னோர்களுக்கு சிராத்தம் தர்ப்பணம் செய்வதால் கயா சென்று

அங்கு சிராத்தங்கள் செய்து விட்டு வந்தால் என்ன பலனோ அந்த பலனை சுலபமாக அடையலாம் என்று. 

பதி விரதையாக வாழ்ந்து தன் கணவனுக்கு முன்பாகவே சுமங்கலியாக இறந்த தாய், பாட்டி, சகோதரி, அத்தை சின்னம்மா,

முதலான பெண்மணிகளுக்கு மஹாளய பக்ஷத்தில் வரும் நவமி அன்று மஹாளயம் செய்து விட்டு, அத்துடன் சுமங்கலி

பெண்களை தன் வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு புடவை, ரவிக்கை துண்டு, தாம்பூலம், பழம், புஷ்பம், மஞ்சள், குங்குமம்,

தக்ஷிணை, கண்ணாடி, சீப்பு, கண் மை, வளையல் தந்து அவர்களை நமஸ்கரித்து அவர்களின் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும்.

அ விதவா நவமி என்று பெயர்.

தந்தை, தாத்தா, தந்தையின் தாத்தா  இவர்களில் யாராவது ஒருவர் ஸன்யாசம் வாங்கி கொண்டு ஸித்தி அடைந்திருந்தால்

அவர்களுக்கு த்வாதசி அன்று மஹாளயம் செய்ய வேண்டும். ஸன்யஸ்த மஹாளயம் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருப்பர். மற்றவர்களுக்கும் இன்று செய்யலாம்.

இயற்கையாக மரணமடைந்தவர்களுக்கு சதுர்தசி அன்று மஹாளயம் செய்யக்கூடாது. தற்கொலை, விபத்தில் இறத்தல், நெருப்பு,

ஜலம், கொடிய மிருக தாக்குதலினால் இறத்தல் ஆகிய துர் மரணமடைந்தவர்களூக்கு மட்டும் சதுர்தசி அன்று மஹாளயம் செய்ய வேண்டும்.

மஹாளய அமாவாசை அன்று கணவனோ, மகனோ இல்லாத பெண்மணீ ,மஹாளயம் செய்ய வேறு யாரும் இல்லை என்ற

நிலையில் தானே சங்கல்பம் செய்து கொண்டு சங்கல்ப சிராத்தம் செய்யலாம். தனது பெற்றோர், கணவணின் பெற்றோருக்கு செய்யலாம்.

மஹாளய பக்ஷம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்பவர்கள் மஹாளய அமாவாசை அன்று முதலில் அமாவாசை தர்ப்பணம் செய்துவிட்டு

பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும். மஹாளய பக்ஷத்தில் ஒரே ஒரு நாள் தர்ப்பணம் செய்தவர்கள் அமாவாசை தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும்.

ஷண்ணவதி தர்ப்பணம் செய்பவர்கள் மஹா ளய பக்ஷம் 16 நாட்களும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அத்துடன் நடுவில் சம்பவிக்கும் 

வைத்ருதி, யுகாதி, வ்யதீபாதம் ஸம்பவிக்கும் போது முதலில் இந்த தர்ப்பணத்தை தனியாக செய்து விட்டு ,பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தனது தந்தையின் மற்றோர் மனைவிக்கு ஸ பத்னி மாதா என்று பெயர். தன்னை பெற்றெடு க்காவிட்டாலும், அவளும் தனது தாய்க்கு

சமமானவள் என்பதால் , ஸ பத்னி மாதா யாருக்கு உண்டோ, அவர்கள் சிறிய தாயாருக்கு பிள்ளைகள் இருந்தாலும்,

இல்லாவிட்டாலும் , தான் செய்யும் மஹா ளய தர்ப்பணத்தில் தனது தாயுடன் தனது ஸ பத்னி மாதாவையும் கட்டாயம் சேர்த்து கொண்டு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும். 

தனது தாய் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும், தந்தையை இழந்தவர்கள் கட்டாயம் மஹாளயம் செய்ய வேண்டும்.

தந்தை உயிரோடு இருப்பவர்கள், தனது தாயார் இறந்திருந்தாலும் கூட மஹாளயம், அமாவாசை தர்ப்பணம் செய்யக்கூடாது.

தந்தை செய்வதாலேயே இறந்த தாயருக்கும் த்ருப்தி ஏற்பட்டுவிடும்.

தந்தை இறந்த முதல் வருடம் மஹாளயம், தர்ப்பணம், மாத பிறப்பு, ஷண்ணவதி தர்ப்பணங்கள் ,தீர்த்த சிராத்தம், கயா சிராத்தம் 

முதலானவற்றை செய்யக்கூடாது. தந்தை இறந்த முதல் வருடம் மாசிகம், ஸோத கும்பம், அமாவாசை தர்ப்பணம் மட்டும் செய்தால் போதும். 

இரண்டாவது வருடம் முதல் அனைத்தையும் செய்யலாம்.

மஹாளய பக்ஷ தர்ப்பணம் செய்பவர்கள், ஷண்ணவதி தர்ப்பணம் செய்பவர்கள் ஏதோ ஒரு நாளில் மஹாளய பக்ஷத்தின் போது பார்வணமாகவோ, ஹிரண்யமாகவோ சிராத்தம் செய்ய வேண்டும்.

நிர்ணய சிந்து 114 பக்கத்தில் ஜாபாலி மஹரிஷியின் வசனப்படி மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களுக்கு ஹிரண்ய சிராத்தம்

தர்ப்பணம் முதலானவற்றை செய்பவர்களு க்கு பித்ருக்கள் அருளால் குழந்தை செல்வம், நீண்ட ஆயுள், வியாதி அற்ற தன்மை

குறைவற்ற செல்வம், விரும்பிய பலன்கள் ஆகிய அனைத்தும் கிடைக்கும்.பசி தாகம் தீர்வதற்காக உங்கள் வீட்டில் வந்து

காத்திருக்கும் பித்ருக்களுக்கு நாம் ஒரு நாள் கூட மஹாளய பக்ஷத்தின் போது சிராத்தம் செய்யாவிட்டால் ஏமாற்றத்துடன் பித்ருக்கள் 

திரும்பி செல்வார்கள், அவர்கள் விடும் பெருமூச்சு , வருத்தம் நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதிக்கும்.

வரிசை கிரமத்தில் தம்பி இளையவர் மஹா ளயம் செய்த பிறகு அண்ணா மூத்தவர் மஹா ளயம் செய்ய வேண்டும்.

தனி தனியாக மஹாளயம் செய்வதால் காரு ணிய பித்ருக்களான மாமனார், மைத்துனன், மனைவி, குரு, ஆசாரியன், நண்பன், பெண், மாப்பிள்ளை , மருமகள், ஆகியோர் 

சகோதரர் ஒவ்வொருவருக்கும் தனி தனியானவர். ஆதலால் மஹாளயம் தர்ப்பணம், சிராத்தம் ஒவ்வொருவரும் தனி தனியாக செய்தல் வேண்டும்.

  பொதுவாக தர்ப்பணங்களை வீட்டில் செய்வதைவிட நதிக்கரை, குளக்கரை, கடற்கரையில் செய்வது மிக சிறப்பானது.  

வீட்டில் ஸ்நானம் செய்துவிட்டு வீட்டிலி ருந்து ஜலம் எடுத்துக்கொண்டு போய் கடற்கரையில் தர்ப்பணம் செய்யலாம். அமா

வாசை, பெளர்ணமி போன்ற சில நாட்களை தவிற மற்ற நாட்களில் ஸமுத்திரத்தில் குளிக் க கூடாது. சமுத்ர ஜலத்தில் தர்ப்பணம் செய்ய கூடாது. 

  ஒரு  கல்பத்தில் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் உடலிலிருந்து கருப்பு எள்ளூ தோன்றியது. கருப்பு எள் பித்ருக்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது,

 ஆதலால் கருப்பு எள்ளை தர்ப்பணதிலும், சிராத்தத்திலும் உபயோக படுத்துகிறோம்.  கருப்பு எள் தோலை உரித்தால் வெள்ளை எள்.

இது சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், அம்பாளுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. ஆதலால் பல்வேறு ஹோமங்களில் வெள்ளை எள் உபயோகிக்க படுகிறது.

 ஷண்ணவதி தர்ப்பணம் செய்து கொன்டிரு க்கும்போது மாதபிறப்பன்று சிராத்தம் வந்தால் 

சிராத்தத்தை முதலில் முடித்துவிட்டு, பரேஹணி தர்ப்பணம் அப்போதே செய்ய

 வேண்டிய நிர்பந்தம் உள்ளவர்கள் மாத பிறப்பு தர்ப்பணத்தை செய்ய வேண்டும். பிறகு பரேஹணி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

 மாத பிறப்பு தர்ப்பணங்களை காலையில் ஸ் நானம் செய்துவிட்டு, ஸந்தியாவந்தனம்  காயத்திரி ஜபம் செய்துவிட்டு , செய்யலாம். பிறகு மாத்யானிகம் செய்யலாம்.

  பொதுவாக சிராத்தம், அமாவாசை தர்ப்பணம்  போன்றவற்றை மாத்யானிகம் செய்த பிறகு ப்ருஹ்ம யக்யம் செய்வதற்கு முன்னால் செய்ய பட வேண்டும். இந்த கட்டாயம் மாத பிறப்பு தர்ப்பணங்களுக்கு இல்லை.

  போதாயண சூத்திரத்தை சேர்ந்தவர்கள் அமாவாசை முதலான நாட்களில் பித்ரு தர்ப்பணம் செய்யும் போது மற்றவர்களை

 போல அப்பா, அம்மா, தாய் வம்சத்தை சேர்ந்த 12 பேர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு அதன் பிறகு ஆசார்யன், ஆசார்ய

 பத்னி, குரு, குரு பத்னி, ஸகி, ஸகி பத்னி, ஞாதி, ஞாதிபத்னி, அமாத்யான், அமாத்யா:, ஸர்வான், ஸர்வா: என்று 12 பேர்களை சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

 மஹாளய தர்ப்பணம் செய்யும் போது, தந்தை, தாய், தாயார் வர்க்கம், காருணிக பித்ரு, ஆசார்யர் வர்கம் என தர்ப்பணம் செய்ய வேண்டும்.

 மஹாளய சிராத்தம் செய்யும் போதும் ஆசார்யர்களுக்கு என்று ஒரு ப்ராஹ்மணர் அதிக மாக வரிக்க வேண்டும்.

  மஹாளய சிராத்தம் வசதி உள்ளவர்கள் 6 ப்ராஹ்மணர்களை வரச்சொல்லி, அவர்களுக்கு ஒன்பது ஐந்து வேஷ்டி வாங்கி கொடுத்து உங்கள் வீட்டிலேயே எண்ணய் தேய்த்து ஸ் நானம் செய்து வந்த பிறகு பார்வணமாகவோ ஹிரண்யமாகவோ, ஆம சிராத்தமாகவோ செய்யலாம்.

  பித்ரு வர்க்கம்; மாத்ரு வர்க்கம், மாதாமஹ வர்க்கம், காருணீக பித்ரு, விசுவேதேவர், மஹா விஷ்ணு  என ஆவாஹணம் செய்து

 சாப்பாடு போட்டு தக்ஷிணை கொடுத்து அனுப்பலாம். 

 தற்காலத்தில் இதையும் குறைத்து, பித்ரு, மாத்ரு, மாதாமஹ, காருணீக  வர்க்கம் ஒருவர், விசுவேதேவர் ஒருவர் என இருவருக்கு அன்னமளித்து, தக்ஷிணை கொடுத்தும் அனுப்பலாம். வாத்தியார் தக்ஷிணை. 

 சமாராதனை சமையல்.   ஒரு பொரியல், ஒரு கூட்டு, அறைத்து விட்ட சாம்பார், ரசம், மோர், வடை, பாயசம் .

  வைத்தினாத தீக்ஷிதீயம் சிராத்த காண்டம்

இரண்டாம் பாகம் 256ம் பக்கத்தில் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டிய பித்ருக்களின் வரிசை கிரமத்தை சொல்லிய ஶ்லோகம்.

  தைவம் பிதா, ததோ மாதா ஸபத்னீ ஜனனீ ததா. மாதாமஹா: ஸபத்னீகா: பித்ருவ்யா: ப்ராதர: ஸுதா.

  பித்ருஷ்வஸா மாதுலாஸ்ச தத் பகின்யாஸ்ச

ஜாமய: பகினீ துஹிதா பார்யா, ஶ்வஶுர: பாவுக: ஸ்னுஷா ஸ்யாலக: குரு ஆசார்ய: ஸ்வாமீ ஸக்யாதய: க்ரமாத்.

  மஹாளய சிராத்த காண்டத்தில் தர்ப்பண சுலோகத்தில்  மற்றவர்களுக்கு  தர்ப்பணம் சொல்ல படவில்லை.

  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறையும்  தர்ப்பணம் செய்யும் போது 7 அல்லது 8 கறுப்பு எள் உத்தேசமாக எடுத்துகொண்டு,

 ஜலம் ஒவ்வொரு முறையும் உத்தேசமாக 75 முதல் 100 மில்லி வரை எடுத்துக்கொண்டு  கூர்ச்ச நுனியில் கை மறித்து விட வேண்டும்.

  கறுப்பு எள் வைத்திருக்கும் கிண்ணத்தில் ஜலம் இருந்தாலும் பித்ருக்களுக்கு பிடிப்ப தில்லை.

No comments:

Post a Comment