Saturday, December 16, 2023

Pepper Sambar Rice

 Pepper Sambar Rice : மழைக்கு இதமான மிளகு சாம்பார் சாதம்! வித்யாசமான சுவையில் அள்ளும்!

மழைக்கு இதமான மிளகு சாம்பார் சாதம்! வித்யாசமான சுவையில் அள்ளும்!

பருப்பு – அரை கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

குக்கரில் அரிசி, பருப்பு கழுவிவிட்டு சேர்த்து, மஞ்சள் தூள், வெந்தயம், பெருங்காயத்தூள், உப்பு ஆகிய அனைத்தும் சேர்த்து, 6 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக 4 விசில் வரும் வரை விட்டுக்கொள்ள வேண்டும். நன்றாக குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாம்பார் சாதத்துக்கு நன்றாக குழைந்து இருக்க வேண்டும்.

மிளகு சாம்பார் சாதப்பொடி செய்ய தேவையான பொருட்கள்

மிளகு – 50 கிராம் (அல்லது உங்களின் கார அளவுக்கு ஏற்ப அதிகம் அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளலாம்)

வரமல்லி – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன் ‘
துவரம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – அரை டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
சீரகம் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
மிளகு, வரமல்லி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கடைசியாக சீரகம் சேர்த்து இரண்டு பிரட்டு பிரட்டி விட்டு, எடுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

சாம்பார் சாதம் செய்ய தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி
கேரட் – 1 கைப்பிடி (நறுக்கியது)
பீன்ஸ் – 1 கைப்பிடி (நறுக்கியது)
உருளைக்கிழங்கு – 1 கைப்பிடி (நறுக்கியது)
மேலும் முருங்கைக்காய், நுக்கல், முள்ளங்கி, வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளும் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதிக காய்கறிகள் சேர்க்கலாம். இல்லாவிட்டால் இருக்கும் காய்கறிகளை வைத்துக் கொண்டே செய்யலாம்.
புளி – எலுமிச்சை அளவு
(அரை மணி நேரம் சுடு தண்ணீரில் ஊறவைத்து, வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
தக்காளி – 2
எண்ணெய் – தேவையான அளவு
நெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
பூண்டு – 10 பல் (தட்டியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடி

செய்முறை

ஒரு காடயில் எண்ணெய் சூடாக்கி, வெங்காயம், கேரட், பீன்ஸ், உருளை உள்ளட்ட அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து மசித்துக்கொள்ள வேண்டும். பின்ன புளித்தண்ணீர் சேர்த்து அதனுடன் கூடுதலாக தண்ணீர், தேவையான அளவு உப்பு என அனைத்தும் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் பொடித்து வைத்து பொடியையும் தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த தண்ணீரில், குழைவாக வெந்த சாதம் மற்றும் பருப்பை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் இரண்டும் சேர்த்து, கடுகு தாளிக்க வேண்டும். அது பொரிந்தவுடன், கறிவேப்பிலை சேர்த்து கலந்து விடவேண்டும்.

பின்னர் தட்டிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் முந்திரி பருப்பு சேர்தது தாளிக்க வேண்டும்.

இந்த தாளிப்பை மிளகு சாம்பார் சாதத்தில் சேர்க்க வேண்டாம். சூடான மிளகு சாம்பார் சாதம் தொண்டைக்கு இதமாக உள்ளே இறங்கும்.

No comments:

Post a Comment