வசந்த காலம் வருமோ-35
By N Krishnamurthy
நாலரை மணிக்கு சாரங்கன், மைதிலி, ம்ருதுளா, ராஜேஸ்வரி,சங்ர க்ருஷ்ணன் ஆகியோர் சித்தி வினாயகர் கோவிலை அடைந்தனர். ஏற்கனவே சுப்புலக்ஷ்மியும், ராதிகாவும் வந்துவிட்டிருந்தனர்.
ரவீந்திரன் ம்ருதங்கத்துடன் காத்திருந்தார். அம்புஜத்திற்கு ராஜேஸ்வரி,சங்கர க்ருஷ்ணன்,ம்ருதுளா,சுப்புலக்ஷ்மி, ராதிகா ஆகியோரை மைதிலி அறிமுகம் செய்து வைத்தாள்.அம்புஜம் ரவீந்திரனை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைந்தாள்.
கச்சேரி தொடங்கு முன் அம்புஜம் மைக்கை பிடித்து" இங்கு வந்திருக்கும் எல்லோருக்கும் நமஸ்காரம்.நம்ப பஜனை மண்டலி சார்பில் இன்று குமாரி.ம்ருதுளா அவர்கள் ஒரு மணி நேரம் கச்சேரி செய்வார்கள். திரு.ரவீந்திரன் ம்ருதங்கமும், சங்கர க்ருஷ்ணன் வயலினும் வாசிக்கப்போகிறார்கள்.
ம்ருதுளா வேகமாக வளர்ந்து வரும் பாடகி. மிகப்பெரிய சங்கீத விமர்சகர் சுப்புடு அவர்களே இவளது திறமையை பாராட்டி இருக்கிறார்.இதுவே இவரது பெருமைக்கு எடுத்துக்காட்டு.சித்தி வினாயகரின் பரிபூர்ண அருளால் ம்ருதுளா அவர்கள் இசை வானில் மின்னுவார் என்பதில் சந்தேகமில்லை " என்று ஒரு இண்ட்ரோ கொடுத்தாள். கூடியிருந்தோர் கைகளை தட்டினர்.
ஐந்து ஐந்துக்கு கச்சேரி தொடங்கியது. முதலில்பாதி ஹாலே ரொம்பியிருந்த போதிலும், பத்தே நிமிஷத்தில் முழு ஹாலும் ஜனங்களால் நிரம்பியது.
"ப்ரணமாம்யஹம் ஸ்ரீ கௌரி சுதம்" பாடலுடன் கச்சேரியை ஆரம்பித்தவள், பின்னர் கோபல கிருஷ்ண பாரதி,பாப நாசம் சிவன்,முத்து தாண்டவர், மாரி முத்தா பிள்ளை,பாரதியார் ஆகியோரின் தமிழ்பாடல்களை பாட, கூடியிருந்த கூட்டம் வெகுவாக ரசித்தது.
"அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்" என்ற வள்ளளாரின் சாரங்கா ராக பாடல் தான் அன்றைய மாஸ்டர் பீசாக அமைந்தது. ரவீந்திரனும், சங்கர க்ருஷ்ணனும் மிக அனுசரணையாக வாசித்தார்கள். ஆறு பத்துக்கு கச்சேரி முடிந்தது. ம்ருதுளா,ரவீந்திரன்,சங்கர க்ருஷ்ணன் ஆகியோருக்கு அம்புஜம்சால்வை போர்த்தினாள்.
வினாயகருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அவரவர்கள் அவரவர்களது மனோரதம் நிறைவேற வேண்டுமென்று பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டார்கள்.
சுப்புலக்ஷ்மியும், ராதிகாவும் விடைபெற்று சென்றார்கள்.
ராஜேஸ்வரி, சாரங்கன், மைதிலி,ம்ருதுளா ஆகிய மூவரையும் காரில் ட்ராப் செய்வதாக கூறினாள். அப்போது மைதிலி " சரி மாமி.ஆனா ஒரு கண்டிஷன் "என்றாள்.
"என்ன கண்டிஷன்" என்றாள் ராஜேஸ்வரி.
"இன்னிக்கு ராத்திரி நீங்க ரெண்டு பேரும் எங்காத்ல சாப்ட்டு போறதாயிருந்தா நாங்க உங்க கூட கார்ல வறோம்" என்றாள். இதைக்கேட்ட ராஜேஸ்வரி "அப்பாடா. இவ்வளவுதானா.என்னமோ,ஏதோன்னு நெனச்சேன்.சரி.நீங்க கேட்டுண்டபடியே உங்காத்ல சாப்படறோம்" என்றாள் ராஜேஸ்வரி.
No comments:
Post a Comment