பூசணிக்காயில் ரொம்ப ரொம்ப ஈஸியா எப்படி சூப் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்வாங்க.
Equipment 1 அகலமான பாத்திரம்
தேவையான பொருட்கள்
செய்முறை
▢ முதலில் பூசணிக்காயை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
▢ பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது மிகவும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் இடித்து வைத்துள்ள பச்சை மிளகாய், பூண்டைசேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
▢ பிறகு ஒரு கைப்பிடி அளவிற்கு சற்று கூடுதலாக பொடியாக நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளைசேர்த்து நன்றாக வதக்கி நீர் சேர்த்து வேக வைக்கவும். பூசணிக்காய் நன்றாக கையால் நசுக்கினால் மசியும் அளவிற்கு வெந்த பிறகு லேசாக நசுக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
▢ சிறிது பூசணிக்காயை அந்த நீரிலேயே இருக்கும் படி விட்டு முக்கால் அளவிற்கான பூசணிக்காயை எடுத்து ஆற வைத்து விட வேண்டும். பூசணிக்காய் ஆறிய பிறகு அவைகளை மசித்து எடுத்துக் கொள்ளவும்.
▢ இப்பொழுது அடுப்பில் வைத்துள்ள பூசணிக்காய் வேக வைத்த நீரில் மசித்து வைத்துள்ள பூசணிக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். பூசணிக்காய் வேக வைத்த தண்ணீரோடு நன்றாக கலந்து கொதிக்க விடவும். ▢ பூசணிக்காய் சூப் கொதித்து வரும் பொழுது அதில் தேவையான அளவு உப்பு , மிளகு தூள் , கொத்தமல்லி தழைகள் தூவி சூடாக பரிமாறினால் சுவையான ஆரோக்கியமிக்க பூசணிக்காய் சூப் தயார்.
Nutrition Serving: 200g | Calories: 22kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg | Fiber: 2g
No comments:
Post a Comment