Friday, December 15, 2023

சம்மத பத்திரம்

 சம்மத பத்திரம்


தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் 👇

1) சம்மத பத்திரத்தை ஒப்புதல் பத்திரம் என்றும் ஆங்கிலத்தில் concern deed என்றும் Ratification Deed என்றும் சொல்வார்கள்.

2) ஒரு பங்கு பிரிக்க படாத கூட்டு சொத்தை வாரிசு தாரர்கள் அனைவரும் சேர்ந்து விற்பனை செய்து விடுகின்றனர்.

அப்பொழுது ஒரு வாரிசுதார் மட்டும் கையெழுத்து போடாமல் விடுபட்டு விட்டது.

3) உதாரணமாக  பெண் வாரிசுகளிலோ ஒருவர் சிறு வயதிலேயே குடும்பத்திற்கு பிடிக்காதவர்களிடம் அல்லது சாதி மாறியோ திருமணம் செய்து கொண்டு வேறு ஊரில் செட்டில் ஆகிவிடுவர்.

4) சில வாரிசுகள் சின்ன வயதிலேயே ஊரை விட்டு வீட்டை விட்டு ஒடி விடுவார்கள் சிலர் காணாமல் போய்விடுவார்கள்.

அல்லது சில வாரிசுகள் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவராக இருந்து முதல் மனைவி மக்களோடு ஒட்டாமலே இருப்பவர்களும் இருப்பார்கள்.

5) ஈகோ வினால் சண்டையிட்டு கொண்டு பங்கு கிடைக்க கூடாது என்று தனக்கு பிடிக்காத வாரிசுகளை மறைப்பவர்களும் உண்டு. இப்படி பல வகையில் விலகி போனவர்கள் விலக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சொத்தில் உரிமை கூறு உரிமைபங்கு அல்லது ஏதாவது வழி,நீர்பாய்ச்சல்,போன்ற பாத்தியதை இருந்தால் அவரிடம் வாங்க வேண்டிய பத்திரம் சம்மந்த பத்திரம்.

6) பத்திரத்தில் என்ன ஷரத்து இருக்கும் என்றால் சம்மத பத்திரம் எழுதி வாங்கும் நபர் ஏறகனவே சொத்து விவரத்தில் உள்ள இந்த வருடம் இந்த மாதம் இந்த தேதி கிரயம் பெற்றுள்ளார் அதனுடைய ஆவண எண் இது.

7) இந்த ஆவணத்தில் உள்ள சொத்து விவரத்தில் எனக்கு பாத்தியதை இருக்கிறது அன்று தேதியில் நடந்த  கிரயத்தின் போது நான் கையெழுத்து போடவில்லை.அதனால் இன்று அந்த கிரயத்தை ஒப்புகொள்கிறேன்.

என்று சம்மதம் கொடுப்பதே சம்மத பத்திரத்தின் தன்மை ஆகும்.

8) கூட்டு சொத்தோ நிறைய வாரிசுகள் இருக்கும் சொத்தோ எது நீங்கள் வாங்க வேண்டும் என்றாலும் எதிர்காலத்தில் சம்மத பத்திரம் போட கூடாது.அது நமக்கு தேவையற்ற செலவு அலைச்சல் என்று உணரந்து சொத்தின் வாரிசுகளை ஆராய்தல் வேண்டும்.

9) ஆங்கிலத்தில் Ratification Deed என்று சம்மத பத்திரத்தை சொலவார்கள் திருத்த பத்திரத்தை Rectification Deed என்று சொல்வார்கள் . 

Rectification க்கும் Ratification க்கும் வித்யாசம் கொஞ்சம் லேட்டாகாதான் புரியும்

No comments:

Post a Comment