பனீர் பட்டர் மசாலா !
செய்முறை -
அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி , பூண்டு பற்கள் , முந்திரிப்பருப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து ஒரு மூடி போட்டு 5 நிமிடம் வேக வைத்து நன்கு ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் அரைக்கவும்.
அடுப்பில் அதே கடாயை வைத்து பட்டர் போட்டு சூடானதும் பட்டை , கிராம்பு , காஸ்மீரி மிளகாய் தூள் , அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து அதோடு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள் , மல்லித்தூள் , சீரகத்தூள் , கரம் மசாலா , தயிர் , உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பனீர், சீனி , கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மேத்தி இலை , சிறிது பட்டர் சேர்த்து அடுப்பை அணைக்கவும், சுவையான பனீர் பட்டர் மசாலா ரெடி !
No comments:
Post a Comment