வசந்த காலம் வருமோ-31
By N Krishnamurthy
சுப்புலக்ஷ்மியின் கோபத்தை பார்த்து வெலவெலத்துப்போன மைதிலி"சாரி மாமி. நான் அப்படி நெனக்கல. ம்ருது இன்னிக்கு இந்த நெலைமைக்கு வந்ததுக்கு நீங்கதான் காரணம்னு நெனக்கிறேன்.
அதுக்காக இது ஒரு சின்ன காணிக்கை மாதிரி. இதை ஏன் நீங்க தப்பா எடுத்துகறேள்னு புரியல" என்றாள். சிறிது சாந்தமடைந்த சுப்புலக்ஷ்மி " இனிமேல் இது போல நடந்துகாதேங்கோ"என்று கூறி பணத்தை மைதிலியிடமே கொடுத்தாள்.
வீடு திரும்பிய மைதிலி ம்ருதுளாவிடம் விஷயத்தை கூற ம்ருதுளா சுப்புலக்ஷ்மிக்கு போன் செய்தாள்." மாமி அம்மா தெரியாம பண்ணீட்டா.உங்களுக்கு வருத்தம் இல்லையே" என்று கேட்க, சுப்புலக்ஷ்மி " ம்ருது,நான் அத அப்பவே மறந்தூட்டேன்.நீ ஒண்ணு பண்ணு. அம்மாகிட்ட சொல்லி உம் பேருக்கு பேங்க் அகவுண்ட் ஆரம்பிச்சு, இந்த பணத்தை அதல போட சொல்லு. இன்னும் கொஞ்ச வருஷத்ல அது பெரிசா வளரும் " என்றாள்.
சுப்புலக்ஷ்மி வியானன்று மைதிலிக்கு போன் செய்து மறுநாள் சங்கர க்ருஷ்ணன் கச்சேரிக்கு போய் வரலாமா எனக்கேட்டாள். "நான் என் மாமியாரை கேட்டூட்டு சொல்றேன்"என்ற மைதிலி கோமளாவிடம் "நாளைக்கு நாங்க ஒரு கச்சேரிக்கு போலாம்னு இருக்கோம். உங்களுக்கும், அப்பாவுக்கும், இவருக்கும் சப்பாத்தி யும்,தக்காளி சட்னியும் பண்ணி வெச்சூட்டு போயிடறோம்.பரவாயில்லையா" என்று கேட்டாள்." சரிடிம்மா. தாராளமா நீங்க போய்ட்டு வாங்கோ" என்றாள் கோமளா.
வெள்ளிக்கிழமை மூணு மணிக்கு சுப்புலஷ்மி மைதிலி வீட்டுக்கு வந்தாள்."ஏன் மாமி ராதிகா வரலயா" என்றாள்."அவ இன்னிலேந்து வாரம் ஒரு நாள் மறைமலை நகர்ல இருக்ற அனாதை ஆஸ்ரமத்துக்கு போய் அங்கு இருக்கற கொழந்தைகளுக்கு ப்ரீயா பாட்டு சொல்லி தரப்போறா"என்றாள்.
இதைக்கேட்ட மைதிலி"ஏன் மாமி ராதிகாவை நீங்க சபா கச்சேரிக்குதயார் பண்ணல" என்று கேட்டாள். அதற்கு சுப்புலஷ்மி " ராதிகாவுக்கு அதல என்னமோ நாட்டமில்லை. பேரும்,புகழும்,பணமும் ஒரு பொருட்டாவே அவ எப்பவுமே எடுத்துகறதில்ல. நம்ப உசந்த சங்கீதத்தை குரல் நண்ணாயிருக்க கொழந்தைகளுக்கு கத்து குடுக்கணம்றதல அவ குறியா இருக்கா. நானும் அவளுக்கு கல்யாணத்துக்கு வரன் பாத்திண்டிருக்கேன். அவ எண்ணத்துக்கு அனுசரணயா ஒரு பையன் கெடக்கணமேன்னு சர்வேஸ்வரன சாதா வேண்டிண்டிருக்கென்" என்றாள்.இதை கேட்ட மைதிலி " அவ நல்ல எண்ணத்துக்கு உறுதுணையா இருக்கற மாதிரி வரன் நிச்சயம் அமையும் மாமி" என்றாள்.
No comments:
Post a Comment