பூண்டு கார சட்னி | poondu chutney recipe
தேவையான பொருள்கள்
சின்ன வெங்காயம் / small onion - 15
பூண்டு / garlic - 10 பல்
நல்லெண்ணெய் / gingelly oil -6 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் / dry chilli - 8
புளி / Tamarind - நெல்லிக்காய் அளவு
தாளிக்க - கடுகு உளுந்தம் பருப்பு
பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்,பூண்டு ,சின்ன வெங்காயம் ,புளி வதக்கி ஆற வைத்து நைஸ் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
பின் மீதி உள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி கடுகு ,பெருங்காயத்தூள் உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து அரைத்த சட்னி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையான பூண்டு சட்னி ரெடி..
No comments:
Post a Comment