Tuesday, December 12, 2023

சமையல் டிப்ஸ்

 சமையல் டிப்ஸ்

பகிர்வு:

🌟அகல் விளக்கு✨

*💐வாங்கிய தேயிலையை சிறிது நேரம் வெய்யிலில் வைத்து பிறகு டீ தயாரித்தால் அதிக மணம் , அதிக சுவை.*

*💐உருளைக்கிழங்கை பொரிப்பதற்கு முன் சிறிது பயத்தமாவை உருளைக்கிழங்குடன் கலக்கினால் பொரியல் மொரமொரப்பாக இருக்கும்.*

*💐கூழ் வற்றலை மணலில் இட்டு பொரித்தால் மொறுமொறுப்பாகவும் , பெரியதாகவும் இருக்கும்.*

*💐நெய் ஜாடியில் ஒரு அச்சு வெல்லத்தை போட்டு வைத்தால் , நெய் ருசியாகவும் , மணமாகவும் இருக்கும்.*

*💐பழுக்காத தக்காளிகளுடன் ஒரு பழுத்த தக்காளியை போட்டு வைத்தால் மற்றவை சீக்கிரம் பழுத்துவிடும்.*

*💐தோசை மாவு அளவுக்கு அதிகமாக புளித்துவிட்டால் சிறிது சர்க்கரை கலந்தால் சரியாகிவிடும்.*

*💐அடை செய்யும்போது ஒரு கப் காரட் துருவலை சேர்த்துக்கொண்டால் அதன் ருசியே தனி.*

*💐உளுந்துவடை தட்டும்போது வலது கையால் அரிசி மாவை லேசாக தொட்டு தட்டினால் வடை மேலே மொறுமொறுப்பாகவும் , உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.*

*💐கீரை வேக வைத்த தண்ணீரோடு சோறு வடித்த தண்ணீரையும் சிறிது உப்பு மிளகையும் கலந்து குடிக்க சத்தான சூப் தயார்.


No comments:

Post a Comment