Wednesday, December 13, 2023

பிரண்டை ஸ்பெஷல் ரெசிபி

 எலும்புகளையும், நரம்புகளையும் வலுவாக்கும் பிரண்டை ஸ்பெஷல் ரெசிபி

கல்கி டெஸ்க்

Published on: 

13 Dec 2023, 5:57 pm

-வசந்தா மாரிமுத்து

பிரண்டை சட்னி

தேவை;

தோல் நீக்கி நறுக்கிய பிரண்டை துண்டுகள் - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
புளி - நெல்லி அளவு
மிளகு - சிறிது
காய்ந்த மிளகாய் - 4
கறுப்பு எள் - 1 டீஸ்பூன்
உப்பு, நல்லெண்ணெய் -  தேவைக்கு

பிரண்டை சட்னி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரண்டையை நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

எடுத்த பின் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், மிளகு, உளுத்தம் பருப்பு , எள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக தனியாக வறுக்கவும்.

ஆறியதும் வறுத்தவற்றை மிக்ஸியில் கரகப்பாக அரைக்கவும்.

வாணலியில்  அரைத்ததைப் போட்டு புளியைக் கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

பிரண்டை கடைசல்

தேவை;

பிரண்டை - 1 கப்
துவரம்பருப்பு - 1 கைப்பிடி
தக்காளி, வெங்காயம் - தலா - 1
காய்ந்தமிளகாய் - 4
பூண்டு - 4 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
வெந்தயம் -- 1/4 டீஸ்பூன்
கடுகு, சீரகம் - 1 டீஸ் பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை;

பிரண்டையைக் கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மிளகாய்,பூண்டு, வெந்தயம் துவரம்பருப்பு, வெங்காயம்,  தக்காளி சேர்த்து வதக்கவும்.

தனியாக பிரண்டை துண்டுகளை எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும். இல்லையெனில் நாக்கு அரிப்பு ஏற்படும்.

எல்லாம் வதங்கிய பின் ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் புளியை கரைத்து ஊற்றி அதில்

தேவையான உப்பு போட்டு அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து பிரண்டை கடைசலில் சேர்க்கவும். பிரண்டை கடைசல் தயார். இதை சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாய்  இருக்கும்.

பிரண்டை வற்றல்

தேவை;

கணு நீக்கிய பிரண்டை துண்டுகள் - 1 கப்
மோர் - 1/2 கப்
இந்துப்பு -2 ஸ்பூன்

செய்முறை

மோரில் இந்துப்பை போட்டு பிரண்டைத் துண்டுகளை ஊறப் போடவும்.

3 நாட்கள் ஊறியவுடன்  எடுத்து தனித்தனியாக வெயிலில் உலர்த்தி எடுக்கவும்.

காய்ந்தவுடன் பிரண்டைத் துண்டுகளை எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம். இது ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும். மூலநோய்களுக்கும் பயன் தரும்.

இதில் சுண்ணாம்புச் சத்தும், கால்சியம் சத்து அதிகம் உள்ளது. பெண்களுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியது.

No comments:

Post a Comment