சேலம் செய்முறை திருவாதிரை களி கூட்டு
சேலத்தில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து அதில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் மெல்லிய ரவை பதத்தில் நற நற என்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரில் மூன்றரை கப் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கொதிக்கும் வெல்ல கரைசல் தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கை விடாமல், கட்டி விழாதவாறு நன்றாக கிளற வேண்டும்.
பின் குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து விட வேண்டும். அதை குக்கர் விசில் வந்தாலும் வராவிட்டாலும் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
குக்கர் திறக்க வந்தவுடன் இதில் ஏலப் பொடியை சேர்த்துக் நன்றாக கரண்டியால் கிளறி கொள்ளலாம்.
மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்ற வற்றைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி களியுடன் சேர்த்து கிளற வேண்டும்.
இதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடலாம்.
இப்போது சுவையான திருவாதிரை களி ரெடி.
திருவாதிரை நோன்பின் சிறப்பான இந்த திருவாதிரைக் களியை இதில் கொடுக்கப்பட்டது போல, எளிமையாக செய்யலாம்.
No comments:
Post a Comment