Monday, December 4, 2023

இஞ்சி மேடு வரதராஜப் பெருமாள் ஆலயம்

 *வந்தவாசி - இஞ்சி மேடு வரதராஜப் பெருமாள் ஆலயம்!*👆👇  

 திருமணத்தடை

களை நீக்கி பெற்றோருக்கும், பெண்கள்  ஆண்கள் அனவைருக்கும் கல்யாண கவலையை போக்கி ,நல்ல திருமண வாழ்க்கை அமைய இஞ்சி மேடு நரசிம்மப் பெருமாளை  வணங்க வேண்டும் என்று பிரார்த்தித்து இன்று பதிவு செய்கிறேன் 

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம பெருமாளே போற்றி

லட்சுமி நரசிம்மர் மந்திரத்தை தினமும் தொடர்ந்து சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

|| *ஓம் நமோ நாரஸிம்ஹாய* 
 *வஜ்ர தம்ஷ்ட்ராய வஜ்ரிணே* 
 *வஜ்ர தேஹாய நகாய ச*|| 

தினசரி  மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

வராத நல் வாய்ப்புகள் வந்து நம் வாசலில் வணங்கி நிற்கும். 

வீட்டில் இஞ்சி மேடு நரசிம்ம பெருமாளின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை உச்சரித்து வர வேண்டும். 

இனி இஞ்சிமேடு நரசிம்மர் ஆலயம் பற்றிய சில தகவல்கள் ...

வந்தவாசி - ஆரணி செல்லும் வழியில் கொழப்பலூர் என்ற ஊர் வரும் . அங்கே ஆட்டோ பிடித்து சென்றால் இஞ்சி மேட்டை அடையலாம் !  

யக்ஞமேடு என்பது மருவி இஞ்சி மேடு என பெயர் நாளடைவில் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றது!

ஆலயம் தனிச் சிறப்பு மிக்கது! ஸ்ரீராமர் மற்றும் லட்சுமணரது தனுசில் ஸ்ரீ நரசிம்மரின் உருவம் பொறிக்கப்பட்ட விக்கிரகம் இந்தியாவிலேயே இங்கு மட்டுமே! 

பெரிய திருவடியும் (கருடாழ்வார்) சிறிய திருவடியும் (அனுமன்) அருகருகே அழகுற வீற்றிருந்து பகவானை வணங்கும் திருக்கோலம்!

இங்கு தாயார் சன்னதியில் , திருமணம் தள்ளிப் போய், விரக்தியின் விளிம்பில் இருக்கும் கன்னியர்கள் தாயாரிடம் மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு சென்று தினம் குலதெய்வ மற்றும் தாயார் சமேத வரதராஜப் பெருமான் போட்டோ முன்பாக ஐந்து நெய் அகல் தீபமேற்றி, ஐந்து ஊதுவத்திகள் ஏற்றி, ஒரு விராலி மஞ்சள் துண்டு  ஒரு சிறு டப்பாவில் போடவும். 

இவ்வாறாக நாற்பத்தேழு நாட்கள் போட்டு தினமும் வேண்டுதல் செய்யவும். 

நாற்பத்தெட்டாம் நாள் ஆலயம் வந்து, டப்பாவில் போட்டிருந்த அனைத்து மஞ்சளையும் நூலால் கோர்த்து மாலையாக்கி, தாயாருக்கு அணிவித்து அர்ச்சனை செய்து, ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி மனமுருகி வழிபட , தடை நீங்கி திருமணம் விரைவில் கைகூடி வரும் .

மேலும், புத்திர பாக்கியமின்மைக்கு வேண்டுதல் செய்தலும் இங்கே மிக்க பலனளிக் கின்றது. 

செய்தொழிலில் மேன்மையின்றி அவதியுறு வோருக்கும் மேன்மை பெற வேண்டுதல் செய்யலாம். 

சத்ருக்களால் வரும் தொந்திரவுகள், கடன் பிரச்னைகள் தீர லஷ்மி நரசிம்மரிடம் அர்ச்சனை செய்து , ஐந்து நெய் அகல் தீபமேற்றி வழிபடவும். வேண்டுதல் செய்யவும்.

மூலம் மற்றும் சுவாதி நட்சத்திர தினங்களில் யாகம் செய்யப்படுகின்றது

 *ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய தலைமை ஆசாரிய பீடம் அகோபில மடம் அழகிய சிங்கர்கள் மூன்று பேரை வைஷ்ணவ உலகத்திற்கு தந்த ஊர் தான் இஞ்சி மேடு ! இவர் களுக்கு இஞ்சி மேட்டு அழகிய சிங்கர்கள்  என்றே பெயர் !!* 

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மப் பெருமாளே போற்றி !!!

Written & Compiled by

M.S.Ramesh - Salem

Mob - 8754780924

No comments:

Post a Comment