Monday, December 25, 2023

வசந்த காலம் வருமோ?-52

 வசந்த காலம் வருமோ?-52

By N Krishnamurthy 

"பேசறது ராஜேஸ்வரி மாமி தானே" என்றான் சாரங்கன். 'ஆமாம் நீங்க யார் சொல்லுங்க" என்ற ராஜேஸ்வரியிடம் " நாந்தான் மாமி சாரங்கன். ம்ருதுளா அப்பா பேசறேன்" என்றான்." சாரங்கன்  மாமாவா.இந்த நம்பர் புதுசா இருக்கு. எங்கேந்து  பேசறேள்" என்றாள் அவள்.

 " மதுரைல எங்க அக்கா பொண்ணு கல்யாணத்துக்கு வந்திருக்கோம். அங்கேந்து தான் பேசறன்" என்றான் சாரங்கன். "ரொம்ப சந்தோஷம். என்ன சொல்லுங்க "என்றாள் அவள். " கொஞ்ச இருங்க. நான் போன மைதிலி கிட்ட குடுக்கறேன்"  என்ற  சாரங்கன் போனை  மைதிலியிடம் கொடுக்க, மைதிலி ராஜேஸ்வரிக்கு நிலமையை விளக்கினாள். சங்கர க்ருஷ்ணன் வந்து கலந்து கொண்டு வயலின்  வாசித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டாள்." சாரி மாமி. ரொம்ப லேட்டா தான் இன்ஃபர்மேஷன் கொடுக்க முடிஞ்சது. கல்யாணத்துல ம்ருதுளா கச்சேரி வெச்சுகலாம்னு இப்பதான் டிசைட் பண்ணினோம்.அதனால் தான் உங்களுக்கு முன்கூட்டியே சொல்ல முடியல" என்றாள் மைதிலி. இதைக் கேட்டு ராஜேஸ்வரி " பரவாயில்லை .அதைப் பத்தி என்ன. என்னிக்கு கல்யாணம்" என்றாள் ராஜேஸ்வரி.

"நாளன்னிக்கு,வெள்ளிக்கிழமை, 25 ஆம் தேதி கல்யாணம் . அன்னைக்கு சாயங்காலம் தான் ஒரு ஒரு மணி நேரம் கச்சேரி வெச்சுகலாம்னு  பாக்கறோம்" என்றாள் மைதிலி. பின்பு அவள் ராஜேஸ்வரியிடம் "ம்ருதங்கத்துக்கு  இங்கு ஒரு பையன் இருக்கான். உங்க பையன்  வயலின் வாசிக்க முடியுமான்னு கேக்கறா" என்றாள். ராஜேஸ்வரி " நல்ல வேளை.அன்னிக்கு சங்கர க்ருஷ்ணன் ஃப்ரிதான்.சனிக்கெழம சாயங்கிலம் ஐஞ்சு மணிக்கு கிருஷ்ண கான சாபவல பாடணம் அவ்வளவுதான்.  அதனால உங்காத்து கல்யாணத்துக்கு, அதுவும்  ம்ருதுளா பாட்டுக்கு, அவன் நிச்சயம் வாசிப்பான்"  என்ற ராஜேஸ்வரி, "அத்தோடு இல்லாம நாங்களும் மதுரைக்கு வந்து கல்யாணத்தில் கலந்துண்டு, மீனாக்ஷி அம்மன் தரிசனம் பண்றதுக்கு நீங்க ஒரு வாய்ப்பு கொடுக்கறேள். இதுவே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நாங்க  எங்க வரணும்னு  அட்ரஸ் குடுங்க" என்றாள். "  உங்களால என்னிக்கி வர முடியும்" என்றாள்  மைதிலி. "உங்களுக்கு ஒண்ணும் அப்ஜக்ஷன் இல்லேன்னா நாங்க நாளைக்கு காலைல அங்க வந்துட முடியும்" என்றாள் ராஜேஸ்வரி.

" தீடீர்னு பொறப்பட்டு வரணம்னா ட்ரெயின்ல எடம் கெடைக்றது குதுர கொம்பாச்சே" என்றாள்  மைதிலி. " மாமி. நீங்க அத பத்தியெல்லாம் கவல படாதேங்க.நாங்க பாத்துகறோம் "  என்றாள் ராஜேஸ்வரி. மதுரை தல்லாகுளத்தில் இருக்கும்  அவர்களது  வீட்டு அட்ரஸை  மைதிலி சொல்லச்சொல்ல, ராஜேஸ்வரி அதை குறித்துக்கொண்டாள். "மாமி. ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் மைதிலி. "நமமுக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் வேண்டாமே" என்றாள் ராஜேஸ்வரி பின்பு லைன் கட் செய்யப்பட்டது. " என்ன சொல்றா" என்றாள் ரங்கநாயகி.

" பையனோட வரேன்னு சொல்றா மாமி " என்றாள் மைதிலி.

 " உங்களுக்கெல்லாம் ஒண்ணு  தெரியுமா. அந்த பையன் வாய்ப்பாட்டும்  பாடுவான். வயலினும்  வாசிப்பான்"  என்றாள் மைதிலி." நல்லதா போச்சு" என்றாள் ருக்மணி.

 சாப்பிட்டபின் வசுபதி மொட்டை மாடிக்கு ம்ருதுளாவை அழைத்துக் கொண்டு சென்றாள் ."யாருடி ம்ருது அந்த  சங்கர க்ருஷ்ணன்.விஷயத்த ஒளிக்காம எங்கிட்ட சொல்லீடு" என்றாள். "அதெல்லாம் ஒண்ணும் இல்லக்கா.நான் கச்சேரி பண்ணற போது அவாள எதேச்சய  பாத்திருக்கேன். அவ்வளவுதான்"  என்றாள் ம்ருதுளா."  நீ பெரிய உள்ளாளுடி. இதுக்கு மேல இதுல என்னமோ இருக்குன்னு நெனைக்கிறேன்.Any way,best of luck" என்றாள்  வசுமதி." ஐயோ அக்கா.நீ  நெனைக்கற மாரி ஒண்ணும் இல்ல" என்றாள்  ம்ருதுளா. ஆனால் மனதுக்குள் உண்மையில் அதுபோல் ஏதும் இல்லையா என்று அவள் கேட்டுப்பார்த்தாள். அவள்  மனது என்ன சொல்லியிருக்கும்?

No comments:

Post a Comment