::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
*🍧 மைத்ரா 🙋🏻♀️ சமையல் 👍🏻*
*🥘 சிறுதானிய அடை | Millets Adai Recipe In Tamil 👍🏻*
★★★★★★★★★★★
ஆரோக்கியம் நிறைந்த நவதானிய அடைதோசை ஒரு முறை உங்க வீட்ல இப்படி சுட்டு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாகசாப்பிடுவார்கள். முன்பெல்லாம் சமையலில் சிறுதானியங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள்.இன்று சிறுதானியங்கள் என்றால் என்ன? என்று நம் பிள்ளைகள் கேட்கிறது. சுவைக்காக மட்டுமேசாப்பிட்டு பழக்கப்பட்ட நமக்கு, வெறும் ஆரோக்கியத்தை மட்டுமே தரும் இந்த சிறுதானியங்களைபற்றியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் வயதான பெரியவர்கள் கூட,நல்ல ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக நன்றாக வேலை செய்து வந்தார்கள்.
1 தோசை கல் ; 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
*ஆர் வி ஜெ*
*🍴செய்முறை 🍽️*
▢ வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிவையைச் சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்
▢ அனைத்து மாவுகளையும் ஒன்றாகச் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, கீரை ஆகியவற்றையும் போட்டு தேவையான உப்பு போட்டு சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து கொள்ளுங்கள்
▢ பிசையும் போதுசிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மாவு இதமாக வரும். பிறகு இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைத்துக் கொள்ளுங்கள்
▢ தோசைக்கல்லை அடுப்பில் வைத்து. உருண்டையை வட்டமாகத் தட்டி, சிறிதளவு நல்லெண்ணெய் விரவி இருபுறமும் திருப்பி நன்கு வேகவிட்டு எடுங்கள். தானிய அடை தயார்
❇️❇️❇️🕉️🕉️🕉️🕉️❇️❇️❇️
No comments:
Post a Comment