நெய் பத்தலை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் பத்தல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: * மீந்து போன சாதம் - 1 கப் * அரிசி மாவு - 1 கப் * வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) * தேங்காய் - 1 1/2 கப் (துருவியது) * உப்பு - சுவைக்கேற்ப * தண்ணீர் - தேவையான அளவு * சீரகம் - 2 டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது) * எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு * நெய் - தேவையானஅளவு
செய்முறை: * முதலில் சாதத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அதை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் அரிசி மாவை சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். * பின்பு அதில் தேங்காய், வெங்காயம், சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். * பிறகு பிசைந்த மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். * பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் நெய் தடவி, இந்த உருண்டையை ஒவ்வொன்றாக வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். * அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், தட்டி வைத்துள்ள பத்தலைப் போட்டு, குறைவான தீயில் வைத்து, பொரித்து எடுக்க வேண்டும். * இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான கேரளா ஸ்டைல் பத்தல் தயார்.
No comments:
Post a Comment