Monday, December 25, 2023

வசந்தகாலம் வருமோ?-50

 வசந்தகாலம் வருமோ?-50

By N Krishnamurthy 

பின்பு வசுமதி ரெங்கநாயகியிடம் "நானும், ம்ருதுளாவும் பிளவுஸ் தைக்க  கிளம்புறோம்"என்றாள். "போயிட்டு பொழுதோடு வந்து சேருங்கோ" என்றாள் ரங்கநாயகி. மைதிலி, ரங்கநாயகியிடம்" டெய்லர் கடை எங்க அக்கா இருக்கு" என்று கேட்டாள்.

" ஒரு பொம்மனாட்டி  கட வெச்சிருக்கா.அவ தான் நல்லா தெச்சு  கொடுக்கறா. கிட்டத்தட்ட மீனாக்ஷிஅம்மன் கோவில் கிட்ட போகணம்" என்று சொன்னாள்  ரங்கநாயகி. இதன் பிறகு ரங்கநாயகி வசுமதியை பார்த்து " நீ திரும்பி வந்ததுக்கப்புறம் உன் ரூம்ல இருக்க கட்டில ஒழிச்சு கொடுத்துடணம், தாத்தா பாட்டி படுத்துகறதுக்கு " என்றாள் ."சரிம்மா. அவ படுத்தகறத்துக்கு முன்னாடி கட்டில சரி பண்ணி கொடுத்தடறேன்" என்றாள் வசுமதி.

இரவு 7 மணி சுமாருக்கு வசுமதியும், மிருதுளாவும் திரும்பி வந்தார்கள். கையில் பொட்டலத்தில் மடித்து வைத்திருந்த குங்குமத்தை எடுத்து ம்ருதுளா ரங்கநாயகிக்கும், மைதிலிக்கும், கோமளத்திற்கும் கொடுத்தாள். 'ஏதுடி குங்குமம்" என்றாள் ரங்கநாயகி. " அப்படியே மீனாட்சி கோவிலுக்கும் போயிட்டு வந்தோம்மா" என்றாள் வசுமதி. இரவு சாப்பாட்டுக்கடை முடிந்ததும் பெண்கள் அனைவரும் பத்துப்பாத்திரங்களை கழுவி எடுத்து வைத்தார்கள். பத்மநாபன் அறையில் சக்கரவர்த்தியும், கோமளாவும் படுத்துக்கொள்ள, வசுமதியின் அறையில் ராஜகோபானும், ருக்மணியும் கட்டிலில் படித்துக் கொண்டார்கள். மீதி அனைவரும்   ஹாலில் பழைய பாயை விரித்து  படுத்தார்கள். தூக்கம் வராத காரணத்தால் வசுமதியும், ம்ருதுளாவும், வெகு நேரம் மெல்ல, யாருக்கும் கேட்காத குரலில், பேசிக் கொண்டிருந்தார்கள்.

No comments:

Post a Comment