Sunday, December 3, 2023

வசந்த காலம் வருமோ?-30

 வசந்த காலம் வருமோ?-30

By N Krishnamurthy 

கச்சேரி முடிந்ததும், பக்க வாத்யகாரர்களுக்கும்ருதுளா நன்றி சொன்னாள். பாலக்காடு வைத்தா அவளிடம் " உன் மொத கச்சேரியை பத்தி சுப்புடு மாமா உசத்தியா எழுதியிருந்தது ஏன்னு தெரிஞ்சிண்டேன்"  என்று காம்ப்ளிமெண்ட் செய்தார்.

ஹாலை(கீற்று கொட்டகையை) விட்டு ம்ருதுளா, மைதிலி, சுப்புலக்ஷ்மி, ராதிகா, சாரங்கன் வெளியே வந்ததும் , ராஜேஸ்வரி அவர்கள் அருகே வந்து, ம்ருதுளாவைப் பார்த்து" நீ நண்ணா பாடறதை வழக்கமாக்கிண்டுட்ட போல இருக்கு " என்று சொல்லி சிரித்தாள். பின்னர் அருகில் இருந்த வாலிபனை அவர்களுக்கு காட்டி "இதான் என் பையன் "சங்கர க்ருஷ்ணன்" என்று அறிமுகப்படுத்தினாள். 

சங்கர க்ருஷ்ணன் ஐந்தடி பத்தங்குலம் உயரம்.ராஜேஸ்வரி மாதிரி கோதுமை நிறம்.மூக்கும், முகவாய்கட்டையும் ராஜேஸ்வரி மாதிரி இல்லை. ஒருவேளை அப்பா சதானந்தத்தின் ஜாடையாக இருக்கலாமோ? ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்தான்.சுருள் முடி.

அவன் ம்ருதுளாவை பார்த்து,"Hi, Your singing was splendid.i cant believe it is your second stage performence " என்றான். இதுவரை அன்னியர்களுடன், அதுவும் அவள் வயதை ஒத்த ஆண்களுடன், அதிகம் பேசி அறியாத ம்ருதுளா, கன்னத்தில் குழி விழ, புன்னகைத்து

 Thank you" என்றாள்.

பின்பு ராஜேஸ்வரி அவர்களிடம் "இந்த வெள்ளிக்கிழமை சங்கர க்ருஷ்ணன் வாணி மஹாலில் சாயங்காலம்  நாலு மணிக்கு பாட போறான்.நீங்களெல்லாம் அவசியம் வரணம்" என்று கேட்டுக் கொண்டாள். பின்பு அவர்கள் கார் வர ராஜேஸ்வரி அவர்களிடம் "உங்கள ட்ராப் பண்ண சொல்லிடலாமா" என்றாள். சாரங்கன் அவளிடம்" உங்களுக்கு ஏன் வீண் ச்ரமம். நாங்க ஆட்டோ பிடிச்சு போய் விடுவோம்" என்றான். பின்பு ராஜேஸ்வரியும்,சங்கர க்ருஷ்ணனும் காரில் ஏறினார்கள். ஏறுவதற்கு முன் ராஜேஸ்வரி மைதிலியிடம் " ஞாபகம் இருக்கட்டும். வெள்ளிக்கிழமை, வாணி மஹால்,நாலு மணி" என்று தந்தி மெசேஜ் மாதிரி சொன்னாள்.

சுப்புலஷ்மி,ராதிகாவுடன்,  ஏறிய ஆட்டோவில் மைதிலியும் பயணித்தாள்.

சாரங்கனும், ம்ருதுளாவும் வேறோரு ஆட்டோவில் சென்றனர். தன்னோடு மைதிலி வருவதின் காரணம் புரியாத சுப்பு லஷ்மிக்கு வீட்டை அடைந்ததும் அதற்கான விடை கிடைத்தது. மைதிலி,சுப்புலஷ்மியின் கையில்  ஐந்து நூறு ரூபாய் தாள்களை  திணித்து "மாமி.இது உங்களுக்கு ஸ்பெஷல் குருதக்ஷிணை" என்றாள்.

"தீடிரென்று எதுக்கு இவ்வளவு பணம்" என்று சுப்புலஷ்மி கேட்டதும், மைதிலி "கச்சேரி முடிந்ததும் சபேசன் சார் ஒரு கவரை ம்ருதுளாவிடம் கொடுத்தாராம்.அதை பிரிச்சு பாத்தா இந்த பணம் இருந்துதாம்.உடனே இது உங்களுக்கு சேரணம்னு தீர்மானம் பண்ணீட்டேன்" என்றாள். சுப்புலக்ஷ்மி சிறிது கோபத்துடன்," எனக்கும் உங்களுக்கும் உள்ள பந்தத்துக்கு பணம்தான் அடிப்படைன்னு நீங்க நெனைக்கறீங்க இல்லையா" என்றாள்.

No comments:

Post a Comment