Thursday, December 21, 2023

துவரம் பருப்பு தோசை

 இந்தப் பருப்பில் தோசை செய்து பாருங்க" சுவை, ஆரோக்கியம் நிறைந்தது

துவரம் பருப்பு தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Dec 11, 2023 07:12 IST

தோசை

சுவை, ஆரோக்கியம் நிறைந்த துவரம் பருப்பு தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

தேவையான பொருட்கள் 

புழுங்கலரிசி – 1 கப் 
துவரம் பருப்பு – அரை கப்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை 

அரிசி, பருப்பை தனித் தனியாக ஊற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். பின் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து கலக்கவும். இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து சூடானதும் தோசை ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சட்னி, குழம்பு வைத்து சுடச் சுடச் பரிமாறலாம். காரம் அதிகம் விரும்புவோர் பச்சை மிளகாய்க்கு பதில் காய்ந்த மிளகாயை அரைத்து சேர்க்கலாம்

இதையும் படியுங்கள்

நெய் மணக்கும் மாங்காய் பருப்பு குழம்பு அம்புட்டு ருசியா இருக்கும்

ஒரு முறை மாங்காய் பருப்பு குழம்பு. இப்படி செய்து பாருங்க.

Dec 20, 2023 13:30 IST

ஒரு முறை மாங்காய் பருப்பு குழம்பு. இப்படி செய்து பாருங்க.

 தேவையான பொருட்கள்

150 கிராம் துவரம் பருப்பு
2 கப் தண்ணீர்
மாங்காய் 1
தக்காளி -1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் – 3
கால் டீஸ்பூன்  மஞ்சள் தூள்
¼ டீஸ்பூ மஞ்சள் பொடி
1/3 டீஸ்பூன் பெருங்காயம்
½ டீஸ்பூன் மிளகாய் பொடி
1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
உப்பு தேவையான அளவு
2 ஸ்பூன் கடலை எண்ணெய்
1 ஸ்பூன் நெய்
1 ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் சீரகம்
வெங்காயம் 1 ஸ்பூன்
5 பல் பூண்டு
2 வத்தல்
1 கொத்து கருவேப்பிலை

செய்முறை : பருப்பை நன்றாக கழுவ வேண்டும். குக்கரில் சேர்த்து, தண்ணீர், மாங்காய், வெங்காயம் ,தக்காளி , மஞ்சள் பொடி,  மிளகாய் பொடி, உப்பு, எண்ணெய் சேர்த்து 2 முதல் 3 விசில் விட வேண்டும். தொடர்ந்து குக்கரை திறந்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய், கடுகு, சீரகம், வெங்காயம், பூண்டு தட்டியது, கருவேப்பிலை, வத்தல் சேர்த்து தாளித்து, குழம்பில் கொட்டவும். சூப்பரான மாங்காய் பருப்பு குழம்பு ரெடி. 


.

No comments:

Post a Comment