Sunday, December 3, 2023

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

 எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

 தேவையான பொருள்கள்.

பிஞ்சு கத்தரிக்காய்  / small brinjal - 8
புளி   / Tamarind - 50 கிராம் 
கொத்தமல்லி / coriander seeds - 50 gram
காய்ந்த மிளகாய் / dry chilli - 10 
மிளகு / pepper - 1 ஸ்பூன்
சீரகம் / cuminseeds - 1 ஸ்பூன்
சின்ன  வெங்காயம்  | small onion  - 10 
தேங்காய் துருவல்  /  coconut - 1 /2 மூடி
நல்லெண்ணெய்  /  nallennai - 100 gram
உப்பு / salt - தேவையான அளவு

 செய்முறை: 

கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மல்லி ,மிளகாய்  வறுத்து ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.

அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகு சீரகம்,சின்ன வெங்காயம் ,

தேங்காய் இதையும் வறுத்து ஆற வைத்து அரைத்து கொள்ளவும் .

கத்தரிக்காயை  நான்காக கீறி கொள்ளவும் .

அரைத்த மசாலாக்கள் சிறிது உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணி கத்தரிக்காய் உள்ள வைத்து stuff பண்ணவும் .

பின் ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து ஊற்றி அதில் மீதமுள்ள மசாலா ,உப்பு  ,  3 டம்ளர்  சேர்த்து கரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,கரு வேப்பில்லை போட்டு தாளித்து கத்தரிக்காயகளை போட்டு நன்கு வதக்கி அதனுடன் கரைத்து வைத்த மசாலா ஊற்றி நன்கு கொதிக்க வைத்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கினால் சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு ரெடி.

No comments:

Post a Comment