Sunday, December 3, 2023

சாம்பார் பொடி

 சாம்பார் பொடி

மிளகாய் வத்தல் - 1/4 கிலோ,
தனியா ( முழு கொத்தமல்லி ) - 1/4 கிலோ,
சீரகம் - 100 கிராம்,
கடலைப்பருப்பு - 25 கிராம்,
துவரம்பருப்பு - 25 கிராம்,
வெந்தயம் - 25 கிராம்

 செய்முறை

மிளகாய் வத்தலை வெயிலில் 4 மணி நேரம் வெயிலில் காயவைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் தீயை சிம்மில் வைத்து மீதி பொருள்களை தனித்தனியாக போட்டு லேசாக சூடு படுத்தவும். ( வறுக்க கூடாது ) வத்தல் காய்ந்ததும் எல்லா பொருள்களையும் ஒன்றாக சேர்த்து மிசினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். 

சாம்பார் பொடி ரெடி. 4 மாதங்கள் வரை உபயோகிக்கலாம். பிரிஜ்ஜில் வைக்க தேவை இல்லை.

No comments:

Post a Comment