உடுப்பி ரசம்
செய்முறை
½ கப் துவரம் பருப்பை குழைய வேகவைக்கணும்.
காஷ்மீர் மிளகாய் வற்றல் 3 (நான் நம்ம ஊர் வற்றல் மிளகாயைத்தான் உபயோகித்தேன். நமக்கு கலரை விட காரம் முக்கியம் இல்லையா?)
தனியா விதை 1 டேபிள் ஸ்பூன் (நான் கொஞ்சம் குறைவாக எடுத்துக்கிட்டேன்)
வெந்தயம் 1 ஸ்பூன்
ஜீரகம் 1 ½ ஸ்பூன்
கருவேப்பிலை 4 ஆர்க் (கைப்பிடிக்குக் கொஞ்சம் கம்மி)
இவை எல்லாவற்றையும் தேங்காய் எண்ணெய்ல கடாய்ல நிதானமா வறுக்கணும். அப்புறம் எண்ணெயை வடித்து (அதுக்கு டிஷ்யூ பேப்பரில் போட்டுட்டு பிறகு எண்ணெய் வடிந்தபிறகு தட்டில் போட்டுடணும்). ஆறினபிறகு மிக்சில பொடித்துக்கோங்க.
ஒரு தக்காளியை சிறிய துண்டுகளாக கட் பண்ணிக்கோங்க.
ஒரு கடாய்ல, நெய் அல்லது தேங்காய் எண்ணை உபயோகித்து கடுகு, 1 மிளகாய் வற்றல், பெருங்காயம் சிறிய துண்டு, ஒரு ஆர்க் கருவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். இதோட, தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.
இப்போ அரை டம்ளர் புளிக்கரைசல், மஞ்சப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவைக்கணும். பச்சைப் புளி வாசனை போகணும்.
தக்காளி, திருவமாறி வதக்கினதைக் கொதிக்கும் புளிஜலத்தில் சேர்க்கவும். கொஞ்சம் கொதிக்கட்டும்.
பிறகு தளிகைப்பண்ணின பருப்பை நீர்விட்டு கரைத்துக்கோங்க. அந்தக் கரைசலை ரசத்தில் சேர்க்கவும்.
கொஞ்சம் கொதித்தபிறகு, அரைத்துவைத்த பொடியைச் சேர்க்கவும். பொடி சேர்த்தபிறகு ரசம் ரொம்பக் கொதிக்கக்கூடாது.
அடுப்பை அணைத்தபிறகு, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
இப்போ உடுப்பி ரசம் ரெடி.
நீங்களும் இந்த உடுப்பி ரசம் செய்துபாருங்க. ரொம்ப நல்லா இருக்கும்.
No comments:
Post a Comment