Friday, December 15, 2023

ராஜ்மா பிரியாணி

 ராஜ்மா பிரியாணி செய்யும் முறை

தேவையான பொருட்கள் :-

பாசுமதி அரிசி - ஒரு கப்,
ராஜ்மா - 1கப்
நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்,
பொடியாக நறுக்கிய இஞ்சி, எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
கரம் மசாலா - 2 டீஸ்பூன் 
தக்காளி -1 வெங்காயம் - 1 கருவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு .

ராஜ்மா பிரியாணி செய்முறை :- 

முதல் நாள் இரவே ராஜ்மாவை ஊற வைக்கவும்.

குக்கரில் கால் கப் தண்ணீர் விட்டு, ஊற வைத்த ராஜ்மாவைச் சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு... நறுக்கிய இஞ்சி, நறுக்கிய தக்காளி வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி  வெங்காயத்தாள் போட்டு நன்கு வதக்கவும்.

ஊற வைத்த அரிசியை (தண்ணீரை வடித்துவிட்டு) அதில் போட்டு, நன்கு வறுத்து... குக்கரில் உள்ள ராஜ்மாவுடன் சேர்க்கவும்.

கரம் மசாலாத்தூள், உப்புச் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கலந்து மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

இப்போது சுவையான ராஜ்மா பிரியாணி ரெடி.

பரிமாறுவதற்கு முன் எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

No comments:

Post a Comment