நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ருசியான பெரிய நெல்லிக்காய் ஊறுகாய்
கே.எஸ்.கிருஷ்ணவேனி
Published on:
13 Dec 2023, 5:10 pm
நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காயில் கலந்த சாதம், சூப், ஊறுகாய், சட்னி, ஜூஸ் என செய்யலாம். ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்கு சமம். இதில் கால்சியம், விட்டமின் சி, புரதம் சத்துக்கள் உள்ளது. திரிபலா சூரணம் தயாரிப்பில் இதற்கு முக்கிய பங்கு உண்டு. வைரஸ் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்கும் சக்தி கொண்டது.
ஊறுகாய் செய்யத் தேவையானவை:
செய்முறை:
பெரிய நெல்லிக்காயை நன்றாக கழுவி அரை கப் நீரில் புளியை கரைத்து விட்டு உப்பு தேவையான அளவு, மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகும் வரை வேக விடவும். ஆறியதும் கையால் நசுக்கி உள்ளிருக்கும் கொட்டைகளை எடுத்து விடவும்.
இதையும் படியுங்கள்:
பெரிய நெல்லிக்காய் ஊறுகாய்
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு கடுகு, ஓமம் போட்டு பொரிந்ததும் வெந்தயத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கையால் நசுக்கி வைத்திருக்கும் பெரிய நெல்லிக்காய்களை சேர்த்து மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், வெல்லம் சிறிது சேர்த்து கலந்து விடவும். எல்லாம் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி ஆறியதும் பாட்டிலில் பத்திரப்படுத்த ருசியான நெல்லிக்காய் ஊறுகாய் தயார். இதனை பெரிய அளவில் இரண்டு கிலோ மூன்று கிலோ என்று செய்து வைக்க ஒரு வருடமானாலும் கெடாது. அதற்கேற்றவாறு உப்பு, காரப்பொடி எல்லாம் சேர்க்க ருசியான ஊறுகாய் ரெடி ஆகிவிடும்
©
No comments:
Post a Comment