Wednesday, December 13, 2023

இரண்டு வகையான இட்லி பொடி

 இரண்டு வகையான இட்லி பொடி !

தேவையான  பொருள்கள் -

தோல் உளுந்து - 1கப் 
கடலைப் பருப்பு - 1/2 கப் 
சீரகம் - 2 மேஜைக்கரண்டி
மிளகாய் வத்தல் - 10
பூண்டு - 10 பல்
கறிவேப்பில்லை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 1 தேக்கரண்டி     

செய்முறை -

கடாயை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடானதும் உளுந்தம் பருப்பைப் போட்டு நன்கு சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.

வறுத்த உளுந்தம் பருப்பைப் தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றலை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பிறகு கடலைப்பருப்பு, பூண்டு ஆகியவற்றைத்  தனித்தனியாக போட்டு நன்கு வறுத்தெடுக்கவும்.சீரகத்தை வறுக்கத் தேவை இல்லை.

கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதே கடாயில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து கொள்ளவும்.

ஆறிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் உப்பையும் சேர்த்து பொடித்து கொள்ளவும்.  

   இட்லிப் பொடி ரெடி. இதை தோசை/இட்லியோடு சேர்த்து சாப்பிடலாம். காற்று புகாத பாட்டிலில் போட்டு ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.

இட்லிப்பொடி - இரண்டாவது முறை 

தேவையான பொருள்கள் -

வெள்ளை முழு உளுந்து - 1 கப் 
கடலைப்பருப்பு - 1/2 கப் 
மிளகாய் வத்தல் - 10
காயத்தூள் - 1 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 

அடுப்பில் வெறும் கடாயை வைத்து உளுந்தம் பருப்பை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வாசம் வரும் வரை வறுத்து தனியே வைக்கவும்.

ஆறியதும் மிக்ஸ்சியில் திரிக்கவும். பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment