Saturday, December 16, 2023

நாகர்கோவில் ஸ்டைல் குழம்பு

 இந்த குழம்பு ரொம்ப பிரபலம்: செம்ம ருசியா இருக்கும்.

நாகர்கோவில் ஸ்டைல் வெறும் குழம்பு ரெசிபி. இதை ஒரு முறை செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்

ஒரு மூடி தேங்காய் துருவல்
சின்ன வெங்காயம் 10
சீரகம் 1 ஸ்பூன்
1 ½ ஸ்பூன் மிளகாய் பொடி
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
பூண்டு 5
தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்புன்
உப்பு
வத்தல்- 3  
சின்ன நெல்லிக்காய் அளவு புளி

செய்முறை : 

தேங்காய் துருவிக்கொள்ளவும். துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம்,  மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, பூண்டு சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து எண்ணெய் காயவைக்கவும், அதில் கடுகு, வத்தல் சேர்க்கவும். தொடர்ந்து அரைத்த விழுதை சேர்க்கவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். புளி கரைத்து வைத்துகொள்ளவும். இதை குழம்பில் ஊற்றவும். கொதிக்க வைக்கவும்

No comments:

Post a Comment