Sunday, December 31, 2023

வசந்த காலம் வருமோ?- 59

 வசந்த காலம் வருமோ?- 59

By N Krishnamurthy 

விரதம், நாந்தி முடிந்து பகல் சாப்பாட்டு கடை ஒரு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. ஐட்டங்கள் அதிகம் இல்லாமல் இருந்தாலும், சுவை மிகவும் நன்றாக இருந்தது. கேட்டரிங்

சர்வீசை சேர்ந்த ஒருவரே பந்தி விஜாரணை செய்து கொண்டிருந்தாலும், ரகுவும் பந்தி விஜாரணை செய்து கொண்டிருந்தான்.

ஏழு மணிக்கு  ஜானவாசம் ஆரம்பித்தது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாளையும்,

தாயாரை சேவித்த ஸ்ரீவத்சன் அங்கிருந்து  ஜானவாசத்திற்கே உண்டான ஓபன் டைப் காரில் மண்டபம் வரை பவனி வந்தான்.

அவனை சுற்றி வாண்டுகள் கூட்டம் சொல்லி மாளாது.

ஜானவாசம் முடிந்ததும் நிச்சயதார்த்தம் தொடர்ந்தது.

இதன் பின் அனைவரும் அவரவர்கள் இடத்திற்கு சென்று டிரஸ் மாத்திக் கொண்டு சாப்பாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடன் ம்ருதுளா, சங்கர க்ருஷ்ணனிடம் அடுத்த நாள் ஒரு மணி நேர கச்சேரிக்கு என்ன என்ன பாடப் போகிறாள் என்று கூறி, பின்னர் இது தவிர  தோடி ராகத்தில் ஒரு பாட்டு பாடலாம்னு இருக்கேன். "தோடி உங்களுக்கு பழக்கம் தானே" என்று கேட்டாள். என்ன பாட்டு என்று சொல்லவில்லை. "தோடியா. இட் ஈஸ்  ஓகே வித் மீ" என்றான் சங்கர க்ருஷ்ணன்.

மறுநாள் காலை முஹுர்த்தம் பத்து- பத்தரை மணிக்குள் இருந்ததால், காசி யாத்திரை,ஊஞ்சல்,பாலும் பழமும் கொடுத்தல்,பிடி  சுத்தி போடல், ப்ரவரம்  போன்றவைகள் முடிக்கப்பட்டன.

கன்யாதானம் முடிந்ததும்,பத்தே கால் மணிக்கு வசுமதியின் கழுத்தில் ஸ்ரீவத்சன்   மூன்று முடிச்சு போட்டு அவளை தன் மனைவியாக ஆக்கிக்கொண்டான்.

அதை தொடர்ந்து மெட்டி அணிவிப்பது, சப்தபதி, அம்மி மிதித்தல்,அருந்ததி பார்த்தல், பொரியிடுதல் ,க்ருகபிரவேசம்   போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மதியம் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. மாப்பிள்ளை வீட்டார்கள் யார் சமைப்பது என்று கேட்டு தெரிந்து கொண்டார்கள். கேட்டரிங் சர்வீஸ்க்கு சமையலை கொடுப்பது என்பது அந்த காலத்தில் இல்லாமல் இருந்ததால் அந்த மாதிரி அரேன்ஜ் செய்திருப்பதை கண்டு  எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

மூன்று மணிக்கு நலங்கு வைத்துக் கொள்ளலாம் என்று இரு வீட்டாரும் தீர்மானம் பண்ணினார்கள். மூன்றே காலுக்கு நலங்கு ஆரம்பமானது. வழக்கம் போல தேங்காய் உருட்டுதல், தலைக்கு மேல் மேல் சுட்ட அப்பளத்தை உடைப்பது, மாப்பிள்ளை முகத்தின் முன்  கண்ணாடியின் பின்புறத்தை காட்டுவது போன்ற வழக்கமான சம்பிரதாயமான நிகழ்ச்சிகள் நடைபெற்றதும், பிள்ளையின் அம்மா வசுபதியை  பார்த்து "ஒரு பாட்டு பாடம்மா" என்றாள். வசுமதி மாமியாரிடம் "நேக்கு குரல் அவ்வளவு நண்ணா இருக்காது. நான் பாட ஆரம்பிச்சா கூட்டமே காலியாயிடும்.நேக்கு பதிலா  என் மாமா பொண்ணு ம்ருதுளாவ  பாட சொல்றேன்" என்று சொன்னாள். இதை  கேட்ட பிள்ளை வீட்டுக்காரர்களை சேர்ந்த ஒரு மாமி "ரெண்டு வருஷமா மெட்ராஸ்ல சபாவுல பாட்டு பாடி, சுப்புடு சாரையே அசர வெச்ச அந்த ம்ருதுளாவா" என்று கேட்டாள்.  "ஆமாம்.நீங்க சொல்ற அதே ம்ருதுளாதான்" என்று பெருமையுடன்  சொன்னாள்  வசுமதி.

ம்ருதுளா, தொண்டையைக் கனத்துக் கொண்டு பாட ஆரம்பிக்கு முன்  குறுக்கிட்ட வசுமதி" ஆறு மணிக்கு ம்ருதுளாவோட  கச்சேரி இருக்கு. இப்போ ஒரு சேஞ்சுக்கு ஒரு சினிமா பாட்டு பாடட்டும்" என்றாள்.  கொஞ்ச நாட்கள் முன்பு திரைக்கு  வந்து, சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் இதய கமலம் படத்திலிருந்து "உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல" பாடலை பாட ஆரம்பித்தாள் ம்ருதுளா. மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தவள்,  கண்ணை நாற்புரமும் சுழலவிட்டு   சங்கர க்ருஷ்ணன் எங்கே இருக்கிறான் என்று பார்த்தாள். கூட்டத்தில் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. தான் அவனை  தேடுவதாக எல்லோருக்கும் தெரிந்தால் நன்றாக இருக்காது என்று நினைத்துக் கொண்டு, மீண்டும்  மெதுவாக கூட்டத்தில் தன் பார்வையை ஓடவிட்டாள். "இன்று நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி" என்ற இடம் பாடலில் வரும் பொழுது, அவன்  அவள் பார்வைக்குத் தெரிந்தான். அவனைப் பார்த்ததும், பார்க்காத மாதிரி பார்வையை திருப்பினாள்   ம்ருதுளா. சங்கர க்ருஷ்ணன் அவள் பார்வையால், உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்தான். இதையெல்லாம் வசுமதி  கவனித்துக் கொண்டிருந்தாள்

" ஒரு கல்யாணத்தில், இன்னொரு கல்யாணம் நிச்சயமாகும் என்று சொல்வார்கள். இது  சரியாக இருக்கும் போல இருக்கிறது" என்று அவள் நினைத்தாள். ம்ருதுளா  பாடி முடித்ததும் பயங்கர கரகோஷம் கிடைத்தது. பிள்ளை வீட்டை சேர்ந்த  ஒரு மாமி " சுசிலா அம்மா பாடுற மாதிரியே இருந்தது. கொஞ்சம் கூட வித்தியாசமே கண்டுபிடிக்க முடியல" என்று கூறினாள். நலங்கு  முடியும் சமயத்தில் ரங்க நாயகி அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தவர்களிடம்"  சாயங்காலம் ஆறு மணிக்கு, இப்ப பாட்டு பாடின  என்னோட என்னோட தம்பி பொண்ணு, ஒரு மணி நேரம் கச்சேரி பண்ண போறா. பத்திரிக்கையில்  இத போட முடியாம ஆயிடுத்து" என்றாள்.

 எல்லோரும் முகம் கழுவிக்கொண்டு வந்தபோது, சமையல்காரர் தொண்ணையில் மிச்சர் மற்றும் மைசூர் பாகு வைத்து எல்லோருக்கும் கொடுத்தார். தொடர்ந்து காபி கொடுக்கப்பட்டது.

இந்து கடவுள்களின் அற்புதங்கள் !

 பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !

1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

2 திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

3  தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4  தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

5  கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில்    நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

7  சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை ) 

8  சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.

9  திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். 

10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான  வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.

12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

13 ஈரோடு  காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

14  மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.

18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது  பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.

19  தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

21  தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி  சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை        செங்குத்தாக    நிற்கிறது.

23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது. 

24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும்  சுடுவதில்லை.

25  சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.

26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

27  திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில்  பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

28  ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது. 

30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை. 

31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.  

32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது. 

33 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.

34  திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது. 

35  சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.  அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.

36  நாகர்கோவில் கேரளபுரம்  சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

"இதற்கு மேலும் இந்து மத கடவுளையோ சடங்குகளையோ விமர்சிக்கும் நபர்கள் யாரையும் நாம் குறை கூறாமல் நம் இந்து மத கோவில்களின் சிறப்புக்கள் அறிந்து நம் அடுத்த தலைமுறைக்கு இந்துக்களின் பெருமை பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் நம்மால் உணரப்படும் உண்மையே: மேலே காட்டப்பட்டுள்ள கோவில்கள் சில மட்டுமே இன்னமும் பல கோயில்களின் சிறப்புக்கள் நிறைய உள்ளது எல்லாமே நிரூபணமான சான்றிதழ்களே முடிந்தவரை நம் சந்ததியினருக்கு எடுத்துச் சொல்வோம் """எண்ணம் போல் வாழ்க்கை""  GL

Saturday, December 30, 2023

வசந்த காலம் வருமோ? -58

 வசந்த காலம் வருமோ? -58

By N Krishnamurthy 

பத்மநாபன்,சாரங்கன்,ரகு ஆகிய மூவரும் புதனன்று இரவு பன்னிரண்டு மணி வரை  கல்யாண மண்டபத்துக்கு  எடுத்துக் கொண்டு போக வேண்டிய எல்லா பொருட்களையும் சரியாக கணக்கெடுத்து, அவைகளை உரிய பைகளில் போட்டு, எவற்றை எந்த பையில் வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று குறித்துக் கொண்டார்கள்.

ரங்கநாயகியும், மைதிலியும் அவர்கள் பங்கிற்கு, துணி மணிகள்,நகை நட்டுகள்,முக்கியமாக திருமாங்கல்யம் ஆகியவற்றை ஒழுங்காக நான்கைந்து சூட்கேஸ்களில் அடைத்து பூட்டினார்கள் .

ஒரு சாவி கொத்தை  மைதிலியிடமும், டூப்ளிகேட் சாவிகள் சாரங்கனிடமும் தரப்பட்டது. 

வியாழக்கிழமை காலை 5 மணிக்கு ஒரு வேனை ஏற்பாடு செய்திருந்தார் பத்மநாபன். தூக்கத்திலிருந்து  மூன்று மணிக்கு சிலரும்,மீதி உள்ளவர்கள் நான்கு மணி போலவும் எழுந்திருந்தார்கள்.  வேன் வந்ததும் பத்மநாபன்  வேன் டிரைவரிடம் " அனேகமா ரெண்டு , இல்லைன்னா மூணு நடை அடிக்க வேண்டி இருக்கும்ப்பா" என்றார். இரண்டு பெரியவர்களைத் தவிர மீதி உள்ள ஆண்கள் சாமன்களை  வேனில் ஏற்றினர். முதலில் பத்மநாபனின் பெற்றோர்,சாரங்கனின் பெற்றோர்,ரகு, சங்கர க்ருஷ்ணன் வேனில் அமர்ந்தனர்.வேன்  சத்திரத்தைஅடையும் போது, ஏற்கனவே கேட்டரிங் ஆட்கள் வந்து விட்டிருந்தார்கள். போனவுடன் எல்லோருக்கும் சூடான,சுவையான  காபி கொடுக்கப்பட்டது.

இரண்டாவது ட்ரிப்பில் பெண்கள் அனைவரும்,நந்தகிஷோர்,உஷா ஆகியோர் ஏறி உட்கார்ந்து, கல்யாண மண்டபத்தை அடைந்தார்கள். 

கடைசி ட்ரிப்பில், விட்டுப்போன சாமான்களோடு சாரங்கனும், பத்மநாபனும் சென்றார்கள். 

காலை டிபன் ஒருபுறம் பறிமாறப்பட்டுக் கொண்டிருக்க, விரதத்துக்கு  மற்றொரு புறம் ஏற்பாடுகள் நடந்தது  கொண்டிருந்தன.

பையன் வீட்டார் திருச்சியிலிருந்த வந்த காண்ட்ராக்ட் பஸ் காலை எட்டரை மணிக்கு மண்டபத்தை அடைந்தது.

நாதஸ்வரகாரர் மண்டப கேட்டை அடைந்து வாத்யத்தை  வாசிக்க ஆரம்பித்தார். பத்மநாபனுடன் அனைவரும் சேர்ந்து பிள்ளை வீட்டு காரர்களை கல்கண்டு, சர்க்கரை கொடுத்து வரவேற்றார்கள். சாரங்கன், மாப்பிள்ளை  ஸ்ரீவத்சனுக்கு மாலை அணிவித்தான். ரங்கநாயகி கையிலிருந்த திரட்டிப்பால் டப்பாவை ஸ்ரீவத்சனின்   தாயாரிடம் சேர்ப்பித்தாள். ஆரத்தி எடுத்து முடித்ததும் பையன் வீட்டார் உள்ளே நுழைந்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறைகளை அடைந்தார்கள். ரகு அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு கவனித்துக்கொள்ள ஆயத்தமாக அவர்கள் இருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில் ஓருவர் பின் ஒருவராக இரு வீட்டு உறவினர்களும் வர ஆரம்பித்தனர்.

வழக்கம் போல, சின்ன விஷயங்கள் சரியில்லை என்று பையன் வீட்டை சேர்ந்த சிலர் வேண்டுமென்றே குறை சொல்ல ஆரம்பித்தார்கள். ரகு முடிந்தவரை அவர்களை திருப்திபடுத்த படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான். 

பையன் வீட்டை சேர்ந்தவர்களுக்கு நிறைய அறைகள் ஒதுக்க வேண்டியிருந்ததால் பத்மநாபன் குடும்பத்தாருக்கு கொஞ்சம் அறைகளே கிடைத்தன.சாரங்கன் குடும்பத்துக்கு கிடைத்த அறையிலேயே ராஜேஸ்வரியும், சங்கர க்ருஷ்ணனும் தங்க வேண்டி வந்தது. 

சங்கர க்ருஷ்ணன் நாதஸ்வர வித்வான் வாசித்துக்கொண்டிருந்த "நகுமோ மு கனலேனி" யை உன்னிப்பாக கேட்டு, அசந்து போய்க்கொண்டிருந்தான்.

ம்ருதுளா வசுமதிக்கு துணையாக அவள் அறையில் தங்கினாள். வசுமதி ம்ருதுளாவிடம் "நோக்கு கல்யாணாம் ஆரச்சே நான் தான் கல்யாண பொண்ணுக்கு தோழியா யிருப்பேன்" என்றாள். இதைக்கேட்ட ம்ருதுளா கன்னம் சிவந்து ",எப்பவோ நடக்க போறத பத்தி இப்போ என்னக்கா பேச்சு" என்றாள். அதற்கு வசுமதி " நீ வெளில நூத்துக்கிழவி போல பேசினாலும் , உள்ளுக்குள்ளை சந்தோஷ படறேன்னு தெரியும்டி " என்றாள். ம்ருதுளா பேச்சை திசை திருப்ப எண்ணி "அக்கா.மாப்ள பஸ்ஸை வுட்டு எறங்கறச்சே பாத்தேன்.நல்ல உசரம். செம கலர்" என்றாள்.வசுமதி அதற்கு " உன் சங்கர க்ருஷ்ணன்  மாதிரி இருக்கார்ன்னு சொல்லு " என்றாள்.

வசந்த காலம் வருமோ?- 57

 வசந்த காலம் வருமோ?- 57

By N Krishnamurthy 

கனகாவை,  ராஜேஸ்வரி அவர்கள் இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு அவர்களைப் பற்றி கனகாவிடம் கூறினாள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு "கிளம்புவோமா" என்று கேட்டாள் ராஜேஸ்வரி. "போகலாம்,மாமி" என்றால் ம்ருதுளா. அப்போதுதான் நினைவுக்கு வந்தவளாக, ராஜேஸ்வரி கனகாவிடம் "ஆமாம் நீ எப்படி போக போற. மதுரைக்குதான  திரும்ப போப்பற" என்றாள். 

" எங்க கூட வந்துடு. வழியிலே எங்கேயாவது ட்ராப் பண்ணிடறோம்" என்றாள்." சரி" என்ற கனகா பின் சீட்டில் ம்ருதுளா,ராஜேஸ்வரி 

யுடன் உட்கார்ந்து கொண்டாள். சங்கர க்ருஷ்ணன் முன் சீட்டில் அமர, டிரைவர் வண்டியை கிளப்பினார். தல்லாகுளத்தில் ஒரு பஸ் ஸ்டாப்பில் கனகா இறங்கிக்கொண்டாள்.

ராஜேஸ்வரி மறக்காமல் கனகாவின் அட்ரஸ் மற்றும் போன் நெம்பரை குறித்துக்கொண்டாள்.அவள் பின்பு டாக்ஸி பத்மநாபன் வீடு வந்து சேர்ந்தது.

இறங்கியதும்  டாக்ஸிக்கு உண்டான பணத்தை ட்ரைவரிடம் கொடுத்து, டிரைவருக்கு தானியாக ஒரு 50 ரூபாய் கொடுத்தாள் ராஜேஸ்வரி. வாங்கிக் கொண்ட டிரைவர் "ரொம்ப தேங்க்ஸ் மா. வண்டி தேவைப்படும்போது, எப்ப வேண்டுமானாலும் எங்களை காண்டாக்ட் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டு வண்டியை கிளப்பி சென்றார்.

இவர்கள் மூவரும் வீட்டுக்குள் நுழைந்ததும்,ஹாலில் சாப்பாட்டுக்கடை நடந்து கொண்டிருந்தது.  இவர்களைப் பார்த்த ருக்மணி "சாரிம்மா. உங்களை விட்டூட்டு நாங்க சாப்பிட ஆரம்பிச்சிட்டோம்" என்றாள்."  பரவாயில்ல மாமி.அதனால என்ன" என்று கூறினாள்.

அவர்களிடம் பத்மநாபன் "தரிசனம் நல்லபடியா கெடச்சுதா" என்று கேட்டார். " ரொம்ப த்ருப்தியா ஆச்சு" என்றாள் ராஜேஸ்வரி.

ருக்மணி ராஜேஸ்வரியிடம் " அழகர் கோவில்ல மாமாவும்,மருமானும் பக்கத்து பக்கத்ல இருக்கா" என்றவள்," ஆமாம். ஜ்வாலா நரசிம்மரை தரிசனம் பண்ணேங்களா " என்று கேட்டாள்." ஆமாம்.மாமி.அவர் தரிசனமும் கெடச்சுது " என்றாள்  ராஜேஸ்வரி. 

ராஜேஸ்வரி,ம்ருதுளா, சங்கர க்ருஷ்ணன் மூவரும் அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தார்கள். வசுபதி,ம்ருதுளா சாப்பிட்டுவிட்டு கை அலம்பவதற்கே காத்துக்கொண்டிருந்த மாதிரி, அவளிடம் வந்து "உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவளை மாடிக்கு அழைத்துச் சென்றாள். அவள் ம்ருதளாவிடம் "இன்னைக்கு என்னடி ப்ரோக்ரஸ்" என்று கேட்டாள்."என்னக்கா சொல்ற நீ" என்றாள் ம்ருதுளா. " ஆமாண்டி. ஒண்ணும் தெரியாத பாப்பா ,போட்டுண்டாளாம் தாப்பான்னு சொல்வா. அது போல இருக்கு உன் பேச்சு.நடிக்காத" என்றவள் " அவன் கிட்ட  தனியா பேச சந்தர்ப்பமே கெடைக்கலையா" என்று கேட்டாள். " நீ நினைக்கிற படி எல்லாம் ஒண்ணுமே இல்லை" என்றாள் ம்ருதுளா.

"நான் திருப்பித்திருப்பி சொல்றேன், நீ இல்லை இல்லைன்னு சொன்னா நிச்சயம் இருக்குன்னுதான் அர்த்தம். நடந்ததை எங்கிட்ட மறைக்காம சொல்லு" என்றாள் வசுமதி.வேறு வழியில்லாமல், சங்கர க்ருஷ்ணன் பேசிக் கொண்டிருந்ததை வசுமதியிடம் ம்ருதுளா சொல்ல வேண்டியதாயிற்று. வசுமதி  அவளிடம்

 " உங்கிட்டேந்து விஷயத்த கறக்க ரொம்ப ச்ரம படவேண்டி இருக்கு. நீ சரியான மக்காடி? உனக்கு என்ன பிடிக்கும்னு அவன் கேக்கும் போதே எனக்கு உன்ன தான் பிடிக்கும்ன்ற  ஆன்சர தான் அவன் எதிர்பார்க்கிறான் என்று நோக்கு தெரியலையா" என்றாள். இதைக்கேட்டு கன்னம் சிவந்தாள் ம்ருதுளா. அதற்குள் மாடிப்படியில் யாரோ ஏறி வரும் சத்தம் கேட்டது. இருவரும் பேச்சை நிறுத்தினார்கள். மாடியில் ஏறி வந்த சங்கர க்ருஷ்ணன் இவர்களை பார்த்ததும் "சாரி தொந்தரவு பண்ணிட்டேன்" என்றான். பிறகு வசுமதி அவனிடம் " இல்லை. இல்லை. அதெல்லாம் ஒண்ணும் இல்லை" என்றாள். " கீழ கொஞ்சம் புழுக்கமா இருந்தது. அதனால்தான் மேல காத்தாட வந்தேன்" என்றான் அவன். "இட்ஸ் ஓகே. நீங்க ரெண்டு பேரும் பேசிண்டிருங்கோ.  நான் கீழே போறேன்.நேக்கு வேலை இருக்கு" என்றாள் வசுமதி. "அக்கா. நானும் உன்கூட வரேன்.நேக்கும் வேல இருக்கு" என்று கூறி வசுமதியுடன் கிளம்பி கீழே சென்றாள் ம்ருதுளா.

சாளக்ராம மகிமை

 [12/28, 6:31 AM] saravana171070: 

ஜெய் ஸ்ரீராம்

சாளக்ராம மகிமை!

*வைதீகமான குடும்பங்களில் தொன்றுதொட்டு பூஜிக்கப்பட்டும் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பட்டும் வருவது சாள க்ராமம்*.

*இது உருளைவடிவமாயும், மிகவும் மிருதுவாயும், கரிய நிறமாயும் அல்லது சிவப்பு நிறமுடையதாயும் இருக்கும். இதை மிக பத்திரமாய் பூஜை பெட்டியில் வைத்திருப்பார்கள்*.

*தலைமுறை, தலைமுறையாக வழி, வழியாக குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக இதனை பெற்று ஆராதித்து வருகிறார்கள் என்பதே இது எவ்வளவு புனிதமானது*, மதிப்பிற்குரிய பொக்கிஷமாக உள்ளது என்பதை விளக்கும்.

*இது கன்னிகாதானத்தின் போது, கன்னிகையுடன் வரனுக்கு தானம் செய்யப்படுவதும் உண்டு*.

*சாளக்ராமசிலா என்பது விஷ்ணு அம்சம் உடையது. இதனுடைய மந்திரத்திற்கு ரிஷி ஸ்ரீபகவான். தேவதை நாராயணன்*.

*சாளக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கக்கூடிய ஒருவிதமான கல்*.

பவிஷ்யோத்தர புராணம் கூறுவது

*கண்டகி நதிக்கு வடக்கிலும் ஹிமாசலத்திற்கு தெற்கிலும் பத்து யோஜனை விஸ்தீர்ணமுள்ள சாளக்ராமம் என்ற புண்ணிய பூமியுள்ளது*.

*இங்கு துவாரவதி சாளக்ராமத்தில் ஒன்று கூடுகிறது.*

*மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்தலம் இது என்பதில் சந்தேகமே கிடையாது*.

*முக்திமதி அல்லது முக்திக்ஷேத்ரம் என்று சொல்லப்படுவது காட்மாண்டுவிலிருந்து 140 மைல் தொலைவில் இருக்கிறது.*

*இதையே சாளக்ராம க்ஷேத்ரம் என்றும் கூறுவர்.*

*சாளக்ராமத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:*

பிரம்மனது வியர்வைத் துளியினின்று கண்டகி என்ற ஒரு பெண் உருவெடுத்தாள்

*அவள் கடுந்தவம் புரிந்தமையால் அச்சுற்ற தேவர்கள் அவளை நாடி வரமளிக்க வந்தனர்.*

*அவளோ அவர்களை தன் பிள்ளைகளாகப் பெற விரும்பினாள். இது முடியாது என்பதால் தேவர்களை பூமியில் புழுக்காளாகும் படி சபித்தாள். கோபமடைந்த தேவர்கள் அவளை ஒரு ஜடமாக ஆக சபித்தனர்*.

*இதனால் கலங்கிய ப்ரம்மா இந்திரஇதனால் கலங்கிய ப்ரம்மா இந்திரனையும், ருத்ரனையும் அணுகி அவர்களது பரிஹாரம் கிட்டமுடியாமல், விஷ்ணுவை அண்டினார்*.

*இரு சாபங்களையும் அகற்ற இயலாது என்று கூறி விஷ்ணு ஒரு உபாயம் கூறினார்*.

*சாளக்ராம க்ஷேத்ரத்தில் சக்ர தீர்த்தத்தில் தான் வாசம் செய்வது என்றும் அங்கு தேவர்கள் வஜ்ர கீடம் என்ற புழுக்களாகி அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழவேண்டியது என்றும் கண்டகி என்பவள் ஒரு நதி வடிவமாக அந்த கற்களில் பாயவேண்டும் என்றும் ஏற்பாடாகியது*.

*அத்தகைய தேவாம்சமும், விஷ்ணு அம்சமும் பொருந்தியனவே சாளக்ராம கற்கள்.*

*பத்ரிநாத்திலுள்ள பிம்பங்கள் சாளக்ராமத்தினால் ஆனவை.*

*சாளக்ராமத்தை கோர்த்து மாலையாகவும் பிம்பங்களுக்கு அணிவிக்கலாம்.*

*சாளக்ராம உடைந்திருந்தாலும், ஸ்வரூப அழிவுற்று இருந்தாலும், அக்னியில் எரிந்திருந்தாலும், அதற்கு ஒரு தோஷமும் இல்லை*.

*அது குற்றமற்றது.*

*சாளக்ராம பூஜை செய்ய மந்திரமோ, தந்திரமோ, புனித தீர்த்தமோ வேறு பூஜா விவரணங்களோ தேவையில்லை.*

*அது இருந்தாலே சந்துஷ்டியை கொடுக்க வல்லது.*

*சாதாரணமாக புருஷ சூக்த மந்திரத்தால் பூஜிப்பார்கள்*.

*அது சிரார்த்த காலங்களில் இருக்க வைப்பது பிதுர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்*.

*சாளக்ராம அபிஷேகதீர்த்தத்தை சிரஸில் தெளித்துக் கொண்டு அதை அர்சித்த துளசியை தரித்துக் கொண்டு, அதற்கு நிவேதனம் செய்த உணவை உண்ண வேணும்*.

*இது வைகுண்ட வாசத்தைக் கொடுக்க வல்லது.*

*சாளக்ராம அபிஷேக ஜலத்தை கீழே கொட்டக்கூடாது*.

*இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.*

இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன.

*எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன*.

*இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம், .சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.*

*பண்டைய காலத்தில், மன்னர்களின் சபைகள், ஊர் சபைகள் ஆகியவற்றில் வழக்குகளில் சாட்சி சொல்லும் போது சாளக்கிராமத்தைக் கையில் கொடுத்து ’சாளக்கிராம சாட்சியாக’ சாட்சி சொல்லும் வழக்கம் இருந்தது.*

*மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது*.

*கண்டகி என்னும் புண்ணிய ஆற்றில் நீராடி முக்தி நாதனை பக்தியுடன் வழிபடுபவன், பூவுலகில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.*

சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது.

சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி எனும் நூல் கூறுகின்றது. 

ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீநரசிம்ம புராணமும் ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீநரசிம்ம புராணமும் சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன.

சாளக்கிராமத்தை துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பானது என்று கூறுவர்.

ஶ்ரீ ஸாலக்ராம மந்த்ர:

ௐ நமோ பகவதே விஷ்ணவே ஶ்ரீ ஸாலக்ராம நிவாஸினே ஸகல துரித நிவாரிணே, ஸர்வா பீஷ்ட பல ப்ரதாய ஸாலக்ராமாய ஸ்வாஹா !!!!!!!

ௐ விஷமன் நாஶாய வித்மஹே,
விஷ்ணு வாஸாய தீமஹி,
தந்நோ சிலா: ப்ரசோதயாத் !!!!!

🌰🌰🌰🌰🌰🌰🌰🌰🌰

[12/28, 6:44 AM] saravana171070: *ஜெய் ஸ்ரீ ராம்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

சாளக்கிராம வழிபாடு

*🪨சாளக்கிராமம் என்கிறார்களே அப்படியென்றால்  ?*

எவ்வாறு சைவர்கள் லிங்க பூஜை செய்கிறார்களோ அதேபோல் வைஷ்ணவர்கள் மாத்வர்கள் ஸ்ரீஹரியின் அம்சமாக சாளக்கிராமத்தை பூஜை செய்கிறார்கள்.

சாளக்கிராமத்தில் மும்மூர்த்திகளும் தேவாதி தேவர்களும் நித்யவாஸம் செய்கின்றனர்.

*நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் உள்ள கண்டகி நதியில் காணப்படுகின்றது*

*மஹாவிஷ்ணுவின் அம்சம்தான் சாளக்கிராமம்*.

*சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான கல்.*

சாளக்கிராமம் மிகவும் புனிதமானதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன..

நத்தைக் கூடு, சங்கு, நட்சத்திரம் என்று பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் இந்த சாளக்கிராம கல், புனிதமான கண்டகி நதிக்கரையில் கிடைப்பதால் தோஷம் இல்லாதது.

*சாளக்கிராமம் என்பது ஒரு வகையான அழகிய தெய்வீக அம்சம் நிறைந்த கல் ஆகும்*. *

*ஸ்ரீமஹா விஷ்ணு தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியாக வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார்.* 

*அங்கு ரீங்கார வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர்*. 

*இப்படிப்பட்ட வடிவங்கள் தான் வணங்கிட உகந்தவையாகும்*.

*சாளக்கிராமத்தை ஆண்கள் யார் வேண்டுமானதும் தொட்டு வழிபடலாம்.* 

*இந்த சாளக்கிராம கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.* 

*பன்நெடுங்காலங்களாகவே சாளக்கிராமக் கற்களை கோயில்கள், மடங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிப்பட்டு வருகிறார்கள்*. 

*பல்வேறு வடிவங்களில் சாளக்கிராம கற்களை கிடைப்பதைப் போலவே ஒவ்வொரு வடிவத்தைப் பொறுத்தும் சாளக்கிராமத்தின் வகைகளும் வேறுபடும்*. 

*லஷ்மி நாராயண சாளக்கிராமம், லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம், ரகுநாத சாளக்கிராமம், வாமன சாளக்கிராமம், ஸ்ரீதர சாளக்கிராமம், தாமோதர சாளக்கிராமம், ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம், ரணராக சாளக்கிராமம், மதுசூதன சாளக்கிராமம், சுதர்சன சாளக்கிராமம்… என்று 168 வகையான சாளக்கிராமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.* 

*சாளக்கிராமம் வைத்து வழிபடுகின்ற வீட்டில் சகல தெய்வ சக்திகளும் அருள் செய்வதாக ஆசார்யர்கள் கூறுகின்றனர்.* z

*சாளக்கிராமத்தை ஒரு நாளில் இருமுறை வழிபட வேண்டும்.* 

*சாளக்கிராமம் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டியது

அழகுக்காக ஷோ கேஸில் வைக்கக் கூடியது அல்ல*. 

*பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம், ஜலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும்*. 

*வலம்புரி சங்கை போல் பலமடங்கு மிகவும் அரிய பலன்களை தரக் கூடியது இந்த சாளக்கிராமம்*. 

*ஆனால், பூஜை அறையில் வைத்து வழிபடுவதாக இருந்தால், தினமும் நிச்சயமாக ஸ்நான சங்கல்பம் முடித்து, தூய்மையான கங்கை நீரினால் சாளக்கிராமத்தை அபிஷேகம் செய்ய வேண்டும்*. 

*உங்களால் அபிஷேகம் செய்ய முடியாத நாட்களில், உங்கள் குழந்தைகளை அபிஷேகம் செய்ய பழக்கப்படுத்துங்கள். நிச்சயம் உங்கள் வம்சத்துக்கே நல்ல பலன்கள் கிடைக்கும்*. 

*சாளக்கிராம பூஜை*

*சாளக்கிராம பூஜை  செய்பவன் உள்ளம் தூய்மையாகும்*. 

*மஹா லஷ்மி கடாஷம் வீட்டில் குடிகொள்ளும்.*

*சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவது போல பூஜை செய்பவர்களின் பாவங்கள் கழன்று ஓடும்*. 

*சாளக்கிராமத்தை பக்தியுடனோ அல்லது  பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு.* 

*சாளக்கிராம பூஜை செய்பவர்களுக்கு எம பயம் ஏற்படாது*. 

*பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு  கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்ப காலம் பூஜை செய்த பலன்கள் ஒரே நாளில் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்*.

சாளக்கிராமத்தின் சிறப்பு

*சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.

வழிபடப் பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. 

சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு 

சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமணன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரெண்டு கூறுகளாக கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சாளக்கிராமத் ஸ்தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது.

*இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந் நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள்*.

*சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது*. 

*யாரும் தொட்டு வழிபடலாம்*.

[பெண்களைத் தவிர]

*சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.* 

*ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லஷ்மி நாராயண சாளக்கிராமம்*. 

*நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லஷ்மி ஜனார்த்தன சாளக்கிராமம், இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம்.* 

*இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம்.* 

*வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம்*. 

*விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம்*. 

*மிகபெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்.* 

*விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பாறத் துணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம்.*

*பதினான்கு சக்கரங்களை கொண்டது ஆதிசேஷ சாளக்கிராமம்*. 

சக்கரகாரமாக இரண்டு சக்கரங்களை கொண்டது மதுசூதன சாளக்கிராமம்.

*ஒரே சக்கரத்தை கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம்*. 

*மறை பட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம்.* 

*இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம்*. 

*இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்*. 

*துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக இருப்பது வாசுதேவ சாளக்கிராமம்*. 

*சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிரத்யும்ன சாளக்கிராமம்*. 

*விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம்*.

*இவ்வாறு சாளக்கிராமம் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல தெய்வ சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள்*. 

*சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும்*. 

*இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்து போனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்ததாலும் தோஷமில்லை சிறப்பாகும்*. 

*நித்ய பூஜை தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில் சகல செல்வங்களும் பரிபூரணமாக விருத்தியாகும்*. 

*12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத் தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர் ஆசார்யர்கள்.* 

*12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் சொத்தாக கருதவர்.* 

சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் இன்னும் சிறப்பான பலன்களை அளிக்கிறது.

*சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன*. 

*வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.*

*நீலநிறம் –     செல்வத்தையும், சுகத்தையும் தரும்*

*பச்சை     –     பலம், வலிமையைத் தரும்*

*கருப்பு    –     புகழ், பெருமை சேரும்*

*முக்கியமான விஷயம்*a

கடைகளில் சாளக்கிராமத்தை வாங்கி வேதவிற்பண்ணர்களிடம் கொடுத்து ஒரு மண்டலம் பூஜை செய்து பின்னர் அவரிடமிருந்து நல்ல நாளில் வாங்க வேண்டும்..

*சாளக்கிராமத்திற்கு எளிய முறையில் வெறும் தண்ணீர் அபிஷேகம் செய்து சந்தனம் குங்குமம் இட்டு துளசி இலை தூப தீபம் காட்டி நிவேதனம் செய்து அர்ச்சித்தாலும் ஸ்ரீஹரி ப்ரீத்தி அடைவார்.*

*இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும் சாளக்கிராம பூஜை.*

*பூஜை ஒரு வருடம் இடைவிடாது செய்தால் ஒரு தெய்வீக சக்தி உங்கள் வீட்டில் இருப்பதாக உணர்வீர்கள்.*

*எந்த நோயும் அண்டாது.*

சாளக்கிராம பூஜை செய்பவர்களை ஸ்ரீஹரியின் சுதர்சன சக்கரம் உங்களை எப்போதும் காக்கும்.

வாழ்நாள் முழுவதும் நித்ய பூஜை செய்பவர்கள் இறந்த பிறகு வைகுண்டத்தில் நாராயணன் மற்றும் மஹாலட்சுமியால் ராஜ மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள்

ஆனால் நித்ய பூஜையை நிறுத்தக் கூடாது. உங்களால் பூஜை செய்ய இயலாத பட்சத்தில் வேறு ஒருவரை பூஜை செய்ய அனுமதிக்கலாம்.

ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹீ
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்.

ஜெய் ஸ்ரீராம் சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

🪨🪨🪨🪨🪨🪨🪨🪨🪨🪨🪨🪨

Thursday, December 28, 2023

ரசப் பொடி

 *சுவையான ரசம் வேணுமா ? அதில் சேர்க்கும் ரசப் பொடி தான் அதன் ரகசியம் .! ,

வீட்டிலேயே அரைக்கும் இந்த ரசம் பொடி ரகசியம் தெரிந்தால் ?

மதிய உணவிற்காக சாதம் செய்து குழம்பு, கூட்டு, பொரியல் என்று பலவிதமான டிஷ்களை செய்து வைத்தாலும் இறுதியாக ரசம் விட்டு சாப்பிட்டால் மட்டும்தான் முழு திருப்தியாக இருக்கும். 

ஒரு சில வீடுகளில் தினமும் ரசம் வைப்பார்கள். 

நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் சரியான முறையில் செரிமானம் ஆவதற்காக ரசத்தை இறுதியாக சாப்பிடுகிறோம். 

காரணம் இதில் சேர்த்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தும் நமது உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கின்றன. -- 

எனவே எந்த உணவை சாப்பிட்டாலும் இறுதியாக ரசத்தை சிறிதளவு சேர்த்து சாப்பிட்டோம் என்றால் வயிற்று பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. 

அவ்வாறு தினமும் ரசம் வைப்பதை மிகவும் சுலபமாக்கும் வகையில் இந்த ரச பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். 

மூன்று மாதங்கள் ஆனாலும் இதனை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

கல்யாண வீட்டு ரசம் போல அலாதியான சுவையில் சப்புக் கொட்டி சாப்பிடும் அளவிற்கு இருக்கக் கூடிய இந்த ரசப் பொடியை இதே அளவுகளில் ஒரு முறை செய்து பாருங்கள். 

பிறகு எப்பொழுதும் இப்படியே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். 

ரசம் என்றால் அதற்கு இந்த ரசப்பொடி தான் மிகவும் முக்கியம். 

அவசரத்திற்கு ரசப்பொடி அரைத்து ரசம் வைக்க முடியாதவர்கள், இது போல மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டால் ஐந்தே நிமிடத்தில் சட்டென சூப் போல சூப்பரான ரசத்தை வைத்து வேலையை முடித்து விடலாம். 

பாட்டி காலத்து கைப்பக்குவத்தில் சுவையான ரசப் பொடி அரைக்கும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள மேலே படியுங்கள் 👇 

  தேவையான பொருட்கள்

▢2 கப் தனியா 
▢1 கப் துவரம்பருப்பு ▢1 கப் சீரகம் 
▢1 கப் மிளகு 
▢10 காய்ந்த மிளகாய் 

 *செய்முறை*👇 

▢ துவரம்பருப்பு மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். 

▢ புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். 

▢ சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங் காயத்தூள் சேர்த்தால்… 

▢ ஆஹா மணம்,ருசி ஆளை அசத்தும். 

அவ்வளவு தாங்க சூடான சுவையான ரசம் தயார் !!!

_-----_-------------------------

*இப்படி ஒரு ரசம்* 👇

ஒரே ஒரு தக்காளியை நல்லா புழிஞ்சு, அதுக்கு மேல தேவையான கல் உப்பு, கொஞ்சூண்டு மஞ்சள், ரசப்பொடி சிட்டிகை பெருங் காயம், கொஞ்சமா கருவேப்பில்லை, எல்லாத்தையும் போட்டு, நல்லா கையால பிசைஞ்சு நன்னா கொதிக்க விட்டு, சுண்டுனப் பறம் ரெண்டு டம்பளர் ஜலம் விட்டு நொரைச்சு வந்த ஒடனே இறக்கி வச்சுட்டு, கடுகு சீரகம் தாளிச்சு அது மேல கொட்டி, அரை மூடி எலுமிச்சம்பழம் புழிஞ்சி கொஞ்சமா நறுக்கிய கொத்த மல்லி தழை சேர்த்து. ஆஹா சுட சுட சாதத்துல போட்டு சாப்டா.... தேவாம்ருதம் தான் போங்க... புளி வேண்டாம், பருப்பு வேண்டாம்.......

செஞ்சு பாருங்க Taste தெரியும் !!!

ஜாதகம்

 கல்கி

சிறுகதை 

ஜாதகம்

கல்கி டெஸ்க்

Published on: 

27 Dec 2023, 5:54 pm

-சோம வள்ளியப்பன்

சைக்கிளை உள்ளே நிறுத்திப் பூட்டியபோது கௌரி லைட்டைப் போட்டாள்.

மணி இரவு ஒன்பதரை ஆகிவிட்டதல்லவா எதிர்பார்த்துக்கொண்டே இருந்திருப்பாள். சோர்வாய்ப் படி ஏறி வந்தான்.

"என்னங்க இவ்வளவு நேரம்?  கோயிலே சாத்தியிருப்பாங்களே இன்னேரம்!"

"சித்த வழியை விடறியா?"

தாவிக்கொண்டு இவனிடம் வந்த பாலாஜியை அவன் அம்மா தோளிலேயே தள்ளிவிட்டு, செருப்பைக் கழற்றினான். நேராக உள்ளே போய் வேட்டியைக் கட்டிக்கொண்டு, கைகால் அலம்பிக்கொண்டு மாடிக்குப் போனான்.

"என்ன மூடோ... என்ன காரணமோ.... சீ... குழந்தைகிட்ட கூடவா காட்டணும்...?" முணுமுணுத்துக்கொண்டு சாப்பாட்டுப் பாத்திரங்களைக் கொண்டு வந்து மாடியில் வைத்தாள் கௌரி.

அம்மாவின் இடுப்பிலிருந்து இறக்கி விடப்பட்ட இரண்டு வயது பாலாஜி “அப்பா... அப்பா... நானு... ஆப்பிட்டுட்டேன்..." என்று முகவாய்க் கட்டையைத் திருப்பியது.

''சாப்பிட்டாச்சில்ல...ஒரு இடத்தில உக்காரு..." பிடித்து இழுத்து அழுத்தமாய் உட்கார வைத்தான். 'ஓ' என்று கத்திக்கொண்டே மற்றொரு வல்லரசிடம் தஞ்சம் புகுந்தான் பாலாஜி.

"போட்டுச் சாப்பிடுங்க... நீங்களே! வந்ததும் வராததுமா குழந்தையை ஏன் உதறுறீங்க...? அவனைத் தூங்கப் பண்ணிட்டு வரேன்...." என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவன் தனியே உட்கார்ந்திருந்தான்.

'சந்தமிகு செந்தமிழில் பாட்டுப் படித்தேன்... செந்தில் வளர் கந்தனிடம் தூது விடுத்தேன்...' என்று முனகலாய்ப் பாட்டு உள்அறையிலிருந்து கேட்டது.

சங்கருக்குச் சாப்பிடவே பிடிக்கவில்லை. சே! இப்படிச் சொன்னதற்கு இந்தக் குருக்கள், "இன்னும் ஜாதகம் எழுதலையே சார், அடுத்த ஞாயிறு வாங்கோ"ன்னு சொல்லியிருக்கலாம் என்று பட்டது.

ஒரு தட்டுநிறைய நறுக்கிய மாம்பழத்துடன் கெளரி வந்து உட்கார்ந்தாள்.

"என்னங்க சொன்னாரு அவரு...?  ஜாதகம் எழுதிட்டாராமா? போய் இரண்டு மணி நேரம் ஆகுது. கையில் ஒண்ணுங் கொண்டாரல!?"

''வழக்கம்போல அவர் இன்னும் எழுதி முடிக்கலை. ஆனா இன்னைக்கு ஜாதகப் பலன் சொன்னார். ஒரு சின்ன சீட்டுல குறிச்சிக்கிட்டு வந்திருக்கேன்."

அவள் தட்டில் சாதமும் வத்தக்குழம்பும் போட்டுக்கொண்டு, பாத்திரத்தில் இருந்த அவியல் மொத்தத்தையும் சங்கர் தட்டில் கொட்டினாள்.

"எல்லாத்தையும் எனக்கே கொட்டு...! நீ ஒண்ணுந் திங்காத... அப்புறம் டாக்டர் வீட்டுக்குப் போகலாம்..." முதலில் எரிந்து விழுந்து விட்டுப் பிறகு சொன்னான்:

"ஜாதகம் எல்லாம் நல்லாயிருக்காம். ஆயுசு கெட்டியாம். ஜீவனத்துக்கு ஒண்ணும் குறையே இல்லியாம்....”

“அப்புறம் ஏன் மூஞ்சியைத் தொங்கப் போட்டுண்டு வந்தீங்க!;  எரிஞ்சு விழுந்துக்கிட்டு. பாவம் செல்லம், 'அப்பா, அப்பா விட்டுட்டுப் போய்ட்டாங்கன்னு' மருகிப் போயிடுத்து தெரியுமா?  நீங்க என்னடான்னா வந்ததும் வராததுமா அவன் மேல எரிஞ்சு விழுறீங்க..."

"அவன் ஜாதகத்துல ஒன்பதாம் எடத்துல சனி இருக்காராம்."

"அதனால.... என்னவாம்?"

''அப்பாவுக்கு ஆகாதாம்.''

கெளரிக்கும் முகம் 'டக்'கென்று சுண்டிவிட்டது.

"ஆகாதுன்னா என்ன? முழுசா சொல்லித் தொலைங்களேன்!"

''எதுக்குக் கத்தறே இப்போ ...?"

கெளரியின் 'ரியாக்ஷன்' பார்த்ததும் சங்கர் கொஞ்சம் குறைத்துக்கொண்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. அப்பா புள்ளைக்குள்ள கொஞ்சம் மனஸ்தாபம் இருக்குமாம்...."

"அவ்வளவுதானே! வேறு ஒண்ணும் இல்லியே?''

''கொஞ்சம் பிரிஞ்சிருக்க வேண்டி வருமாம்...”

"பிரிஞ்சுன்னா?" அவள் முகத்தில் மீண்டும் கவலை.

"நல்ல வேளை சனிக்கு நேரா குரு இருக்காராம். அதுனால சனியோட வக்ரம் குறையுமாம். குரு பார்வை அங்க இல்லைன்னா, அப்பாவையே கூட...."

''சிவ சிவா... சித்த நிறுத்துறீங்களா!" காதைப் பொத்திக்கொண்டு, "குருதான் இருக்கார்ன்னு சொன்னீங்கல்ல? அப்புறம் என்ன இல்லைன்னான்னு.... கற்பனை யெல்லாம் பண்ணிக்கிட்டு...." அவளுக்குக் கண்கலங்கி விட்டது.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. கொஞ்சம் ஒத்து வராதாம். அதுவும் முப்பத்தைஞ்சு வயசுக்கு மேலதானாம். அவனுக்கு இப்பத்தான் இரண்டாறது.''

கௌரி கையைக் கழுவிவிட்டு எழுந்து விட்டாள்.

அவளுக்குத் தெரியும், கணவன் சங்கரால் இந்த மாதிரி விஷயத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதென்று. அவனுக்கு மகன் பாலாஜி மேல் கொள்ளைப் பிரியம்.

“நீ அப்பா மாடா, அம்மா மாடா?" என்ற கேள்விக்கு "நானு அப்பா மாடு...." என்று குழந்தை சொன்னதும் ஏதோ 'நீதான் அடுத்த மானேஜர்' என்று ஜி.எம்மே சொல்லிவிட்டதுபோல மகிழ்வான்.

கெளரி விடமாட்டாள். "நீ அப்பா மாடுதானே? உனக்குப் பால் தரமாட்டேன், பிஸ்சு கிடையாது ஒண்ணும் கிடையாது போ" என்று பொய்யாகக் கோபிப்பாள்

"இல்ல... நான் அம்மா மாடு..." என்று குழந்தை சொன்னதும் சங்கர் முகம் வாடிவிடும். அப்படிப்பட்டவரிடம் போய் இந்தக் குருக்கள், உங்களுக்கும் மகனுக்கும் பகை அது இது என்றால் எப்படித் தாங்குவார்?

அதுதான் போலும், கோயிலிலிருந்து - வந்ததிலிருந்து குழந்தை மேல் சங்கடமாய்  இருந்திருக்கிறார். அத்தனைப் பிரியம், சங்கரைப் பார்க்க அவளுக்குப் பாவமாய் இருந்தது.

சங்கரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தான். கையைக் கூடக் கழுவாமல், "ஏய்... இங்க வா... மிச்சத்தையும் கேளு... பாலாஜிக்கு வாக்குல சுக்கிரனாம். எல்லாரையும் பேச்சிலேயே மயக்கிடுவானாம்...." என்றான்.

"அப்பா... ஐய்... மாம்பழம்...." என்றபடி பாலாஜியும் வந்துவிட்டான். "ஏய் திருடா... ! எப்படிடா வந்த? உங்கம்மா உன்னைத் தூங்கப்பண்ணாளே!...."

"டேய் இங்க வாடா... அப்பாவோட சண்டை போடுவியாடா?...." குழந்தையின் தொப்பையில் வாயை வைத்து அழுத்தி ப்புர்ர்... என்று ஊதினான் சங்கர்.

"ஹுஹும், மாத்தேன்" என்றது குழந்தை.

"அவர் கிடக்குறாரு. என் செல்லம் என்னோட சண்டை போடுமான்ன?'

"எல்லாம் கிடக்கட்டும், நீங்க ரெண்டு பேரும் ஆயுசோட இருந்தா எனக்கு அதுவே போதும்...”

"எங்களுக்கு நீ இருந்தாப் போதும்...'' என்றபடி குழந்தையையும் சேர்த்துக் கொண்டு கௌரி கன்னத்தில் சடாரென்று முத்தமிட்டான் சங்கர்.

"சீ.எச்சல்...! சாப்பிட்ட கையைக் கூட கழுவாம...."

“அய்ய்... அப்பா முத்தங் குடுத்தா! முத்தங்குடுத்தா...!" கையைத் தட்டியபடி ஓடினான் பாலாஜி.

ஜோசியர் எழுதிக் கொடுத்தனுப்பி­யிருந்த அந்த விவரச் சீட்டு, காற்றில் பறந்து மாடியிலிருந்து கீழே விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.

பின்குறிப்பு:-

கல்கி 20  செப்டம்பர்  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக் கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Kalki Stories

PROMOTED CONTENT

வசந்த காலம் வருமோ?-56

 வசந்த காலம் வருமோ?- 56

By N Krishnamurthy 

கோயில் பிரகாரத்தை மூன்று பேரும் சுற்றி வந்து கொண்டு இருந்தார்கள். ம்ருதுளாவும், சங்கர க்ருஷ்ணனும் சிறிது முன்னால் சென்று  கொண்டிருக்க, ராஜேஸ்வரி அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.

திடீரென்று அங்கு வந்த ஒரு பெண்மணி ராஜேஸ்வரியை பார்த்து "நீங்க...? நீ, ராஜேஸ்வரி இல்லையா" என்றாள். 

" ஆமாம்.நான் ராஜேஸ்வரி தான்.நீங்கள் யார் என்று தெரியவில்லை" என்றாள்.

 "ராஜேஸ்வரி. பெரிய மனுஷி ஆயிட்ட போல இருக்கு. என்ன எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்குமா" என்று அவள் சொன்னபோது " உண்மையிலேயே  நீங்க யாருன்னு எனக்கு தெரியல.சொன்னா நல்லா இருக்கும்" என்றாள் ராஜேஸ்வரி. "காலேஜ்ல படிச்ச முக்கியமான பிரெண்ட்ஸ் எல்லாம் கூட மறந்து போயிட்டியா" என்றாள் . மூளையில் மின்னல் வெட்டியது  ராஜேஸ்வரிக்கு.

தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, தன்னுடன் படித்த "கண்ணழகி கனகா" தான் இவள் என்று அவளுக்கு தோன்றியது. உடனே 

" அவள் நீங்க.... நீ, கனகா தானே" என்றாள் அதை கேட்ட கனகா" பரவாயில்ல. ஆள தான் மறந்துட்ட .பேர மறக்காம ஞாபகம் வெச்சிண்டிருக்கே"என்றாள். ராஜேஸ்வரி அவள் கைகளை பிடித்துக் கொண்டு"  கனகா உன்னை முதல்ல  எனக்கு  அடையாளம் கண்டுபிடிக்க முடியல. நீ இப்ப கொஞ்சம் பெருத்தூட்ட" என்றாள். அதற்கு கனகா " அன்னிக்கி  இருந்தபடி இன்னிக்கும் இருக்க முடியுமா" என்று ஏக்க பெருமூச்சு விட்டாள். கனகாவின் கண்கள் மிக  அழகாக இருக்கும். அவளுடைய சில முக்கிய பெண் நண்பிகளும், சில ஆண்களும் அவளை "கண்ணழகி கனகா" என்று அழைத்து வந்தார்கள். கனகாவும் ராஜேஸ்வரியும் பரஸ்பரம் பழைய கதையை பேச ஆரம்பித்தார்கள் .

இதை கவனிக்காத ம்ருதுளாவும்,சங்கர க்ருஷ்ணனும் மெதுவாக  நடந்து கொண்டு பின்னால் திரும்பி பார்த்தபோது, ராஜேஸ்வரியும், வேறு ஒரு பெண்மணியும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து, கோவிலில் இருந்த ஒரு மேடையின் மேல் அமர்ந்தார்கள்.

சங்கர க்ருஷ்ணன் கண்ணுக்கு, அருகில் இருந்த ம்ருதுளா, தேவதையாக தோன்றினாள். அவள் அன்று அணிந்திருந்த, கோல்டன் கலர் பார்டருடன் இருந்த கரும்பச்சை நிற மைசூர் சில்க் புடவையும், பார்டர் கலரில் அவள் அணிந்திருந்த ரவிக்கையும்,படிய வாரிய கூந்தலில் சூடிய மல்லிகையும், நெற்றியிருந்த  குங்குமப்பொட்டும் அவளின் இயற்கை அழகை பல மடங்கு கூட்டி காட்டியது. அவளின் அருகிலிருந்து படர்ந்த மெல்லிய நறுமணம் அவள் கூந்தலில் சூடியிருந்த ஜாதி மல்லிகையினாலா அல்லது புடவையில் மிக லேசாக தடவப்பட்டிருந்த மரிக்கொழுந்து சென்ட்டின் வாசமா என்று கண்டு பிடிப்பது கஷ்டமாக இருந்தது.

நல்ல வேளை சங்கர க்ருஷ்ணனுக்கு மகாகவி பாரதியின் காதல் கவிதை வரிகள் தெரியாது. தெரிந்திருந்தால்  நிச்சயம் அவளைப்பார்த்து 

 "அமுதூற்றினை ஒத்த இதழ்களும்,

நிலவூறித் ததும்பும் விழிகளும்" என்று பாடியிருப்பான்.

ம்ருதுளாவை பார்த்து அவன், தமிழில் திக்கித் திணறி" எனக்கு இந்த ரெண்டு இடமும் ரொம்ப நல்லா பிடிச்சிருக்கு .நேச்சர் எனக்கு ரொம்ப பிடிக்கும் .மரம் செடி கொடி  பிடிக்கும். நோபுர கங்கையா,அந்த Falls ரொம்ப நல்லா இருந்தது"என்று சொன்னவன் ம்ருதுளாவை பார்த்து "உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்" என்று கேட்டான். அவள் " எனக்கு முழு நேரமும் சங்கீதம் பிடிக்கும். அது கர்நாடக சங்கீதமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல *தரமான* சினிமா பாட்டா இருந்தா கூட, அது தமிழோ, இந்தியோ, எதுவா இருந்தாலும் நான் ரசிப்பேன்" என்றாள். "இது ஓரளவுக்கு நான் எதிர்பார்த்ததுதான்" என்று கூறிய சங்கர க்ருஷ்ணன்" அப்புறம் வேற என்ன பிடிக்கும்" என்றான். ம்ருதுளா, அப்புறம் வேற என்ன பிடிக்கும் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, "மூக்கு முட்ட சாப்பிட பிடிக்கும் "என்று கூறி கலகல வென சிரித்தாள். இதைக் கண்ட சங்கர க்ருஷ்ணன் " இப்படி கூட நீ வாய்விட்டு சிரிப்பாய் என்று எனக்கு தெரியாது"என்றான். பின்பு  அவள் "உங்களுக்கு வேற என்ன பிடிக்கும் " என்று அவனை  கேட்டாள். சங்கர க்ருஷ்ணன்

"  எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.உன் நினைவாலே நான் வாடுகிறேன்.என் வாழ்வில் கடைசிவரை நீ இருந்தால் அது எனக்கு மிகவும் பிடிக்கும் " என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, அதை சொல்ல முடியாதவனாய், மென்று விழுங்கி "எனக்கு  சங்கீதத்தை ரசிக்கவும்,பாடவும் தெரிந்த அழகான பெண்ணை பிடிக்கும்" என்றான். இதைக் கேட்ட ம்ருதுளா "அப்படி என்றால் உங்களுக்கு ஊர்பட்ட பெண்களை பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்றாள். "ஊர்பட்ட என்றால் என்ன. எனக்கு புரியலை" என்றான் அவன். " ஊர்பட்ட என்றால் கிட்டத்தட்ட நிறைய அல்லது மெனி  என்று எடுத்துக் கொள்ளலாம்" என்றாள்.

ம்ருதுளா மனத்துக்குள் "இவன் சரியான  கல்லுளி மங்கானாக இருப்பான் போலிருக்கு.தப்பி தவறி கூட என்னை பிடிக்கும்னு நேரடியா சொல்ல மாட்டேங்றான்" என்று நினைத்துக் கொண்டாள்.

இதற்குள் கனகாவும்,ராஜேஸ்வரியும்  அவர்கள் அருகில் வந்தார்கள்.

வசந்த காலம் வருமோ?-55

 வசந்த காலம் வருமோ?-55

By N Krishnamurthy 

சங்கர க்ருஷ்ணன் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, ராஜேஸ்வரியும்,

ம்ருதுளாவும் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் ஏறி அமர்ந்ததும், வண்டி கிளம்பி பழமுதிர் சோலையை  நோக்கி பயணம் ஆனது.

ட்ரைவரை பார்த்து ராஜேஸ்வரி 'முதலில் அழகர் கோவிலுக்கு போக வேண்டுமா அல்லது பழமுதிர்சோலைக்கு போக வேண்டுமா' என்று கேட்டாள். அதற்கு  டிரைவர் பழமுதிர்சோலை முடித்துவிட்டு, பின்பு திரும்பி  வரும்போது அழகர் கோயில் கள்ளழக பெருமாளை தரிசனம் பண்ணி கொண்டு வந்து விடலாம்மா" என்றார்.

 " சரி அப்படியே செய்வோம்" என்றாள் ராஜேஸ்வரி.

ட்ரைவர் ராஜேஸ்வரியிடம் "என்னம்மா பையனையும், பொண்ணயும் கல்லாணத்துக்கு முன்னாலா சாமி கும்புட கூப்டுட்டு போறேங்களாக்கும் ",என்றார். இதைக்கேட்டு மனதிற்குள் மகிழ்ந்த ராஜேஸ்வரி "அப்படி எல்லாம் இல்லங்க" என்றாள். ம்ருதுளா தர்ம சங்கடத்தில் நெளிந்தாள். சங்கர க்ருஷ்ணன், நல்ல வேளை, ட்ரைவர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.புரிந்து கொண்டிருந்தால், அவன் வானில் நீந்திக்கொண்டிருக்கும் புள்ளினங்களோடு சேர்ந்து  மிதந்து கொண்டிருப்பானோ என்னவோ?

வழி நெடுகிலும் ராஜேஸ்வரி ம்ருதுளாவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தாள். "டிகிரி முடித்ததும் என்ன செய்யப்போற" என்று ராஜேஸ்வரி ம்ருதுளாவிடம் கேட்டபோது அவள் ",இன்னும் தீர்மானம் பண்ணல மாமி. ஆனா மாஸ்டர்ஸ் படிக்க இஷ்டம் இல்ல. முழு நேரம் சங்கீதத்ல ஈடுபடணம்னு பாக்கறேன்" என்றாள்.

அதற்கு ராஜேஸ்வரி " நான் உன்னை டிஸ்கரேஜ் பண்றேன்னு நினைச்சுக்காத. பொண்ணா பொறந்தவளுக்கு ஒரு சமயம் வரை தான் ஃபிரீடம் இருக்கும். கல்யாணம்ன்ற  கால் கட்டு போட்ட உடனே நிறைய பேர் அவா இஷ்டப்பட்டதை செய்ய முடியறதில்ல" என்று கூறிவிட்டு " டிகிரி முடி!ச்சதும் அனேகமா நோக்கு கல்யாணம் பண்ணீடுவான்னு  நெனைக்கிறேன்" என்றாள். இதற்கு ம்ருதுளா ஒன்றும்  பதில் தரவில்லை . " உறவுல  யாராவது பையன் இருக்கானா" என்றாள் ராஜேஸ்வரி. அதற்கு ம்ருதுளா "  நேக்கு தெரிஞ்ச வரைக்கும் இல்ல மாமி" என்றாள். இந்த பதிலைக் கேட்டதும் ராஜேஸ்வரிக்கு மனதில் சிறிது தெம்பு வந்தது. இதற்குள்  கார் அழகர் கோயிலை தாண்டி பழமுதிர்சோலையை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவு தாண்டியதும் பழமுதிர்சோலை முருகன் கோவில் கண்ணில் தென்பட்டது.

முருகனின் ஆறுபடை வீடுகளில், ஆறாவது படை வீடான பழமுதிர்சோலையை முதன்முதலாக ராஜேஸ்வரியும்,சங்கர க்ருஷ்ணனும் பார்க்க இருந்தார்கள்.வள்ளி தேவயானை சமேத வெற்றி வேல் முருகனின் கண்கொள்ளா தரிசனம் கிடைத்தது. குருக்கள் இவர்களிடம்  " முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதான்.

இங்குள்ள தல விருக்ஷமான நாவல் மரத்தின் பழத்தைத்தான், முருகன் சுட்ட பழம் வேண்டுமா,சுடாத பழம் வேண்டுமா என அவ்வையிடம் கேட்டான்" என்றார்.

பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரம் மேல் ஏறிச் சென்றார்கள். வேடுவர்களின் குலதெய்வமான ராக்காயி கோவில் பக்கத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததான, நூபுர கங்கை நீரை தலையில் தெளித்துக் கொண்டார்கள். 

அங்கிருந்து கிளம்பி,108 வைணவ திவ்வியதேசங்களுள் ஒன்றான, அழகர் கோயில்  எனும் திருமாலிருஞ்சோலையை அடைந்தனர். சுந்தரவல்லி சமேத  சுந்தரராஜபெருமாளின் திவ்ய தரிசனம்கிடைத்தது.

"நீங்கள் எல்லாம் எங்கிருந்து வரேள்" என்று கேட்ட பட்டர் அவர்களிடம்"கோவிலின் பிரகாரத்தில் உள்ள ஜ்வாலா யோக நரசிம்மர்  ரொம்ப பிரசித்தி . அவர தரிசிக்காம போகாதேங்கோ.அவர் உக்கிர ரூபத்தில் இருக்கறதால நரசிம்மரின் உக்கிரத்தை தணிப்பதற்காக தினமும் நூபுர கங்கை நீர், தயிர், வெண்ணெய், தேன் முதலியவை கொண்டு திருமஞ்சனம் செய்யறா.யோக நரசிம்மரின் கோபத்தைத் தணித்து சாந்தி அடையற்துக்காக சன்னதிக்கு மேல் காற்று வருவதற்காக அடிக்கூரை திறந்த நெலைல வெச்சிருக்கா. மீதீ  பெருமா  கோயிலில்ல நரசிம்மர், மூலவரின் இடது ஓரத்தில் இருப்பார். இங்க நரசிம்மர் மூலவர்க்கு நேர் பின்புறம் இருக்கார்" என்றார். அவரையும் மூவரும் தரிசித்தார்கள்.

வசந்த காலம் வருமோ?-54

 வசந்த காலம் வருமோ?-54

By N Krishnamurthy 

பிறகு சிறிது நேரம் எல்லோரும்  பேசிக்கொண்டிருந்தபோது, வாசலில்  வாசலில் ஒரு ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வாசலை எட்டிப்பார்த்த வசுமதி  "ரகு சித்தப்பா வந்துட்டா" என்று கூறினாள்.  வீட்டின் உள்ளே ரகு அவன் மனைவி உஷா, பையன் நந்தகிஷோர் மற்றும் பெண் உமா ஆகியோர் நுழைந்தார்கள். "வாடா, ரகு. இப்பதான் வசு  கல்யாணத்துக்கு  வழி தெரிஞ்சதாக்கம்"  என்று கேட்டார் பத்பநாபன்.

"  ஆபீஸ்ல கொஞ்சம் டைட் ஒர்க். கலக்டர் கேம்ப் நடக்கறது. அதனால் தான் இன்னும் கொஞ்சம் முன்னாடியே வர முடியல அண்ணா " என்றான் ரகு.

ரகு கரூரில் தாசில்தாராக பணியாற்றிக்கொண்டிருந்தான். பத்மநாபன் அவனுக்கு ராஜேஸ்வரியையும், சங்கர க்ருஷ்ணனையும் அறிமுகம் செய்து வைத்தார். "இதுதான் ராஜேஸ்வரி மாமி. பக்கத்துல இருக்கறது அவா பையன் சங்கர க்ருஷ்ணன். உனக்கு நம்ம ம்ருதுளாவ  தெரியுமோல்யோ. அவ இப்போ கர்நாடிக் மியூசிக் பீல்டை ஒரு கலக்கு கலக்கிண்டிருக்கா.  இவா ரெண்டு பேரும் ம்ருதாளாவோட ஒரு  கச்சேரில  அறிமாகி, நெருங்கி பழக ஆரம்பிச்சூட்டா. மாமியும், அவா பையனும் US ல இருக்கா"  என்று ரகுவிடம் பத்மநாபன்  கூறினார் . " உங்கள பாத்தது ரொம்ப சந்தோஷம்"என்று கைகளை குவித்து வணக்கம் செலுத்தினான் ரகு.

 மணி கிட்டத்தட்ட பத்தரை ஆனதும் " எல்லோரும் சாப்பட உட்காந்துகலாம்" என்று  அனவ்ன்ஸ் செய்தாள் கோமளா.

வழக்கம்போல வயதான இரு தம்பதிகளும் டேபிள் மீல்ஸ் சாப்பிட, முதல் பந்தியில் பத்நாபன், சாரங்கன், ரகு, நந்தகிஷோர், சங்கர  க்ருஷ்ணன், உமா, வசுபதி, ம்ருதுளா  ஆகியோர் தரையில் போடப்பட்டிருந்த  ஜமக்காள விரிப்பின் மேல் அமர்ந்தார்கள். வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது. ராஜேஸ்வரியை  பார்த்து ரங்கநாயகி "நீங்களும் உக்காந்துக்கலாமே" என்று கூறினாள். ராஜேஸ்வரி" புருஷாள்ளாம்  சாப்ட்டு முடிக்கட்டும்.அப்புறம் நம்ப  எல்லாம் சேந்து  சாப்படலாம்" என்றாள். முதல் பந்தி  முடிந்தவுடன் ஹாலை சுத்தம் செய்தார்கள். அதற்குப் பிறகு மைதிலி, ரங்கநாயகி, ராஜேஸ்வரி, உமா ஆகியோர்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள். ம்ருதுளாவும், வசுமதியும் பரிமாற ஆரம்பித்தார்கள். ஹாலில் ஒரு கோடியில் அமர்ந்து கொண்டு சங்கர  க்ருஷ்ணனும், நந்தகிஷோரும் பேச ஆரம்பித்தார்கள். நந்தகிஷோர்  

சங்கர  க்ருஷ்ணனை விட ஆறு வயது குறைவாக இருக்கலாம். இப்போதுதான் பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கிறான். சிறிது நேரம் பேசிய உடனே அவன் சங்கர க்ருஷ்ணனிடம் அண்ணா, அண்ணா என்று ஒட்டிக்கொண்டு விட்டான்.

பெண்கள் சாப்பிட்டு முடித்ததும் தாம்பூலம் தரித்தனர்.

ராஜேஸ்வரியை பார்த்து மைதிலி" நீங்க வேணுமான  சித்த  படுத்துகறேங்களா" என்று கேட்டாள்.

" இல்ல மாமி. நேக்கு மத்தியானத்துல தூங்கி பழக்கம் இல்லை" என்று மறுத்து விட்டாள் ராஜேஸ்வரி. சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் கொஞ்ச நேரம் ஆனதும் ரூமுக்குள் புகுந்து, ச்ரம பரிகாரம் செய்து கொண்டு, உறங்க ஆரம்பித்தார்கள்.

சங்கர க்ருஷ்ணன், ம்ருதுளா, வசுமதி, நந்தகிஷோர்,உமா ஆகியார் ஒரு மூலையில் உக்காந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

மதியம் 2 மணிக்கு மேல் காபி போடுவதில் முனைந்தாள் மைதிலி.  எல்லோரும் எழுந்து காபி அருந்தினார்கள்.

பின்பு ராஜேஸ்வரி மைதிலியிடம் " நாங்க ஒரு டாக்ஸி புக் பண்ணிண்டு அழகர் கோயிலையையும், பழமுதிர் சோலையையும் பாத்துட்டு வரலாம்னு இருக்கோம். ம்ருதுளாவையும் கூட்டிண்டு போலாமா" என்று கேட்டாள். அதற்குள் அங்கு இருந்த சாரங்கன் " தாராளமா கூப்டுண்டு போங்கோ. அவளும் அதெல்லாம் பாத்து ரொம்ப நாளாச்சு" என்றான்.  இதைக் கேட்டுக் கொண்டிருந்த வசுமதி " நானும் போயிட்டு வரேம்மா" என்றாள் ரங்கநாயகியிடம். அதற்குள் கோமளா " நீ கல்யாண பொண்ணு.இப்போ அங்க எல்லாம் போக வேண்டாம். அந்த  இடம் குளிர்ச்சியாக இருக்கும். அத்தோட இல்லாமா நூபுர  கங்க தண்ணிய தலையில உட்டுண்டயானா  வேற வினையே வேண்டாம். டக்னு ஜலதோஷம்பிடிச்சுக்கும். கல்யாண சமயத்தில் இதெல்லாம் தேவையா சொல்லு" என்றாள். ரங்கநாயகியும் வசுமதியிடம் " பாட்டி சொல்றது கரெக்ட். நீ ஒண்ணு பண்ணு. கல்யாணம் ஆனதுக்கப்புறம் நீயும்,உன் ஆத்துகாரும் சேர்ந்து போயிட்டு வாங்க. இப்ப  வேண்டாம் " என்றாள். இந்த பதிலில் திருப்தி அடையாத வசுமதி பத்மநாபனிடம் "நீ என்னப்பா சொல்ற" என்றாள். பத்மநாபன் அவளிடம் " பாட்டி சொல்ற ரீசன் ரொம்ப கரெக்டா இருக்குடா. நீ அவசியம் போய் தான் ஆகணுமா" என்றார். வசுமதி அப்பா பெண். பத்மநாபன் சொன்னவுடன் வசுமதி 

" சரி நான் வரல. நீ போயிட்டு வா" என்றாள் ம்ருதுளாவிடம். பத்மநாபனிடமிருந்து  டிராவல்ஸ் நெம்பரை வாங்கிக் கொண்ட ராஜேஸ்வரி அவரிடம்"  உங்க டெலிபோனை கொஞ்சம் பயன்படுத்தலாமா" என்று கேட்டாள். அதற்கு அவர்"  தாராளமாக. உங்களுக்கில்லாததா" என்றார். ராஜேஸ்வரி ட்ராவல்ஸை காண்டாக்ட் செய்து கேட்ட போது, போய் வர எவ்வளவு ஆகும் என்று கூறிய டிராவல்ஸ் உரிமையாளர், எப்பொழுது வண்டியை அனுப்ப வேண்டும் என்று கேட்டார் ."இன்னும் அரை மணி நேரத்தில் அனுப்ப முடியுமா" என்று ராஜேஸ்வரி கேட்டபின் ராஜேஸ்வரி" வண்டி கண்டிஷன் நல்லாயிருக்கணம்.ஓட்ட,ஒடசாலான வண்டி அனுப்பகூடாது" என்று கண்டிப்பாக கூறினாள். அதற்கு

 " சரிம்மா.புது வண்டியா அனுப்பிட்றேன். நீங்க அட்ரஸ் குடுங்க " என்றார்  ட்ராவல்ஸ் உரிமையாளர். இதன் பின் 15 நிமிடத்திற்குள் ராஜேஸ்வரியும், சங்கர க்ருஷ்ணனும், ம்ருதுளாவும் ரெடியானார்கள். அடுத்த 20 நிமிஷத்தில் வாசலில் ஒரு புத்தம் புது அம்பாசிடர் டாக்ஸி வந்து நின்றது.

"அப்ப நாங்க போயிட்டு வந்துடறோம் " என்றாள் ராஜேஸ்வரி எல்லோரிடமும். ருக்மணி அவளைப் பார்த்து" ஜாக்கிரதையா போயிட்டு வாம்மா" என்று கூறினாள்.

Wednesday, December 27, 2023

பூண்டு கார சட்னி

 பூண்டு கார சட்னி | poondu chutney recipe 

தேவையான பொருள்கள்

சின்ன வெங்காயம் / small onion - 15
பூண்டு / garlic  - 10 பல்
நல்லெண்ணெய் / gingelly oil  -6  ஸ்பூன்
காய்ந்த மிளகாய் / dry chilli    - 8
புளி  / Tamarind   - நெல்லிக்காய் அளவு
தாளிக்க  - கடுகு உளுந்தம் பருப்பு
பெருங்காயத்தூள் -  அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்,பூண்டு ,சின்ன வெங்காயம் ,புளி வதக்கி ஆற வைத்து நைஸ் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.

பின் மீதி உள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி கடுகு ,பெருங்காயத்தூள் உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து அரைத்த சட்னி சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் சுவையான பூண்டு சட்னி ரெடி..

திருவாதிரை களி/ஏழு காய் கூட்டு

 27.12.23 புதன் கிழமை ஆருத்ரா தரிசனம்* அன்று இறைவனுக்கு இந்த களி நைவேத்தி யமாக படைக்கப் படும்.

அன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 200 கிராம்
துருவிய தேங்காய் - கால் கப்
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
நெய் - ¼ கப்
ஏலக்காய் பொடி - கால் மேசைக் கரண்டி

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து அதில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு, அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ½ கப் தண்ணீரை எடுத்து தனியே வைத்து விடவும்.

கொதிக்கும் தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கை விடாமல், கட்டி விழாதவாறு நன்றாக கிளற வேண்டும். 

அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும். 

இவ்வாறு கிளறும் போது, களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.

தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ¼ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்து பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும். 

பிறகு, அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளற வேண்டும்.

மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும், அதை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

இதில் ஏலப் பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்ற வற்றைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி களியுடன் சேர்த்து கிளற வேண்டும். 

இதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடலாம்.

இப்போது சுவையான திருவாதிரை களி ரெடி.

திருவாதிரை நோன்பின் சிறப்பான இந்த திருவாதிரைக் களியை இதில் கொடுக்கப்பட்ட போல, எளிமையாக செய்யலாம்.

திருவாதிரை நாளில் செய்யப்படும் ஏழு காய் கூட்டு

தேவையான பொருள்கள்

 ஏழு கறிகாய்கள்– பூசணிக்காய், பரங்கிக் காய், அவரைக்காய், சேனைக்கிழங்கு, மொச்சை, வாழைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு

மேலே சொன்ன அத்தனை காய்களும் நறுக்கியது  – 5 கப்
துவரம் பருப்பு (வேக வைத்தது) – ½ கப்
சாம்பார் பொடி – 1½ கரண்டி
உப்பு – தேவையான அளவு
தனியா – ¼ கப்
மிளகாய் வத்தல் – 6
கடலைப்பருப்பு – ¼ கப்
பெருங்காயம் – சிறிய கட்டி
தேங்காய் (துருவியது) – ¼ கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
வெல்லம் – சிறிதளவு
அரிசி மாவு – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1

திருவாதிரை 7 கறி கூட்டு செய்வது எப்படி?

முதலில் தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல், தேங்காய், பெருங் காயம் போன்ற வற்றைச் சேர்த்து எண்ணெயில் வறுத்துப் மிக்சியில் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

தண்ணீரில் காய் கறிகளைப் போட்டு, பிறகு உப்பு, சாம்பார் பொடி போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 

அதன் பின்னர், தனியா, கடலைப் பருப்பு உள்ளிட்ட வற்றைச் சேர்த்து செய்த பொடியைப் போட வேண்டும்.

இதில் புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும். இது கொதித்த பின்னர் சிறிதளவு வெல்லம் போடவும்.

பிறகு கடுகு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

இதில் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.

கடைசியாக இதில் அரிசி மாவைக் கரைத்து ஊற்ற வேண்டும்.

அதன் பின்னர், மல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.

இப்போது, திருவாதிரை ஸ்பெஷலான ஏழு கறி கூட்டும் தயாராகி விட்டது.

திருவாதிரை களி கூட்டு

 சேலம் செய்முறை திருவாதிரை களி கூட்டு    

சேலத்தில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 200 கிராம்
துருவிய தேங்காய் - கால் கப்
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
நெய் - ¼ கப்
ஏலக்காய் பொடி - கால் மேசைக் கரண்டி

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து அதில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் மெல்லிய ரவை பதத்தில் நற நற என்று அரைத்துக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு, அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

 ஒரு குக்கரில்   மூன்றரை கப் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கொதிக்கும் வெல்ல கரைசல்  தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கை விடாமல், கட்டி விழாதவாறு நன்றாக கிளற வேண்டும். 

பின் குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து விட வேண்டும்.  அதை குக்கர் விசில் வந்தாலும் வராவிட்டாலும்  15 நிமிடம் வேக வைக்க வேண்டும். 

குக்கர் திறக்க வந்தவுடன் இதில் ஏலப் பொடியை சேர்த்துக் நன்றாக கரண்டியால் கிளறி கொள்ளலாம்.

 மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்ற வற்றைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி களியுடன் சேர்த்து கிளற வேண்டும். 

இதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடலாம்.

 இப்போது சுவையான திருவாதிரை களி ரெடி.

திருவாதிரை நோன்பின் சிறப்பான இந்த திருவாதிரைக் களியை இதில் கொடுக்கப்பட்டது போல, எளிமையாக செய்யலாம்.

பெருமாள் தளிகை -காஞ்சி புரம் கோவில் இட்லி

 பெருமாள் தளிகை -காஞ்சி புரம் கோவில் இட்லி

(பாரம்பரிய வரத ராஜ பெருமாள் கோவில் செய்முறை)

தேவையானவை : 

தோல் நீக்கிய உளுந்து - 500 கிராம், 
பச்சரிசி - 750 கிராம், நெய் - 400 கிராம், வெந்தயம் - 100 கிராம், 
சீரகம் - 100 கிராம், மிளகு - 100 கிராம், சுக்கு - 50 கிராம், தயிர் - 50மிலி, 
உப்பு - தேவைக்கு

 செய்முறை : பச்சரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

பிறகு அத்துடன் தயிர் சேர்த்து மாவை நறநறவென அரைத்து அந்த மாவில் சுக்கு, மிளகு, சீரகம்,உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கலக்கி 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

பிறகு மந்தாரை இலை அல்லது வாழையிலையை மூங்கில் குடலையில் இட்டு மாவை ஊற்றிக்கொள்ள வேண்டும். 

கோவிலில் தயாரிக்கப்படும் இட்லி வேக 2 முதல் 3 மணி நேரங் களாகும் எவ்வளவு வேக வைக்கி றோமோ அவ்வளவு பக்குவமாக இட்லி பிரமாதமாக இருக்கும். 

ருசியான சத்தான பாரம்பரிய காஞ்சி புரம் கோவில் இட்லி இது.

“ காஞ்சிபுரம் இட்லி வரலாறு”

வரதராஜ பெருமாள் கோயிலில், பெருமாளுக்கு அமுது செய்யப் படும் காஞ்சிபுரம் இட்லி மிகவும் பிரசித்தி பெற்றது.  

இது மட்டுமல்லாமல் தோசையும் வடையும் நைவேத்தியம் செய்யப்படுகின்றன. 

இரண்டு இட்லியும் மிளகாயும் நல்லெண்ணெயும் சேர்க்காமல், மிளகும் நெய்யும் சேர்த்துத் தயாரிக்க படுகிறது.

பெருமாளுக்கு இரண்டு இட்லி களையும் நைவேத்தியம் செய்த பிறகு, 

ஓர் இட்லி கோயில் கைங்கர்யம் செய்பவர்களுக்கும், மற்றொரு இட்லி கட்டளைதாரருக்கும் கொடுக்கப் படுகிறது. 

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தோசையும் வடையும் பிரசாத மாகக் கொடுக்கப் படுகின்றன.

15-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு வழிப்பட்ட நிவந்தம் ஒன்று, கோயிலில் தாயார் சந்நிதிக்கு எதிரில் கல் வெட்டாகப் பொறிக்கப் பட்டிருக்கிறது. 

வரதராஜ பெருமாளுக்கு முதன்முதலில் இட்லி நைவேத்தியம்..

செய்தவர், கிருஷ்ணரின் எட்டு பக்தர்களில் ஒருவரான                  வல்லபாசார்யர் என்று சொல்கிறார்கள். 

அவர்தான் பெருமாளுக்கு மிளகும் சுக்கும் சேர்த்த இட்லியை மந்தாரை இலையில் அமுது செய்திருக்கிறார். 

அன்று முதல் இந்தப் பழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இன்று இட்லியை மூங்கில் குடலையில் மந்தாரை இலையை வைத்து இட்லியை வேக வைக்கி ன்றனர். 

மந்தாரை இலை கிடைக்காத காலத்தில் வாழையிலை பயன்படுத்தப் படுகிறது.🙏🏽🙏🏽🙏🏽

பூசணிக்காய் சூப்

 பூசணிக்காயில் ரொம்ப ரொம்ப ஈஸியா எப்படி சூப் செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்வாங்க.

 Equipment 1 அகலமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

▢1 கைப்பிடி பூசணிக்காய்
▢1 வெங்காயம்
▢2 பச்சைமிளகாய் ▢3 பல் பூண்டு
▢1/4 ஸ்பூன் சீரகதூள்
▢1/4 ஸ்பூன் சோம்பு தூள்
▢1/4 ஸ்பூன் கரமசாலா
▢1 ஸ்பூன் மிளகுத்தூள் ▢கொத்தமல்லி சிறிதளவு
▢உப்பு தேவையான அளவு ▢எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

▢ முதலில் பூசணிக்காயை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

▢ பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது மிகவும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் இடித்து வைத்துள்ள பச்சை மிளகாய், பூண்டைசேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

▢ பிறகு ஒரு கைப்பிடி அளவிற்கு சற்று கூடுதலாக பொடியாக நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளைசேர்த்து நன்றாக வதக்கி நீர் சேர்த்து வேக வைக்கவும். பூசணிக்காய் நன்றாக கையால் நசுக்கினால் மசியும் அளவிற்கு வெந்த பிறகு லேசாக நசுக்கி தனியாக எடுத்து ஆற வைக்கவும்.

▢ சிறிது பூசணிக்காயை அந்த நீரிலேயே இருக்கும் படி விட்டு முக்கால் அளவிற்கான பூசணிக்காயை எடுத்து ஆற வைத்து விட வேண்டும். பூசணிக்காய் ஆறிய பிறகு அவைகளை மசித்து எடுத்துக் கொள்ளவும்.

▢ இப்பொழுது அடுப்பில் வைத்துள்ள பூசணிக்காய் வேக வைத்த நீரில் மசித்து வைத்துள்ள பூசணிக்காய் சேர்த்து கொள்ள வேண்டும். பூசணிக்காய் வேக வைத்த தண்ணீரோடு நன்றாக கலந்து கொதிக்க விடவும். ▢ பூசணிக்காய் சூப் கொதித்து வரும் பொழுது அதில் தேவையான அளவு உப்பு , மிளகு தூள் ,  கொத்தமல்லி தழைகள் தூவி சூடாக பரிமாறினால் சுவையான ஆரோக்கியமிக்க பூசணிக்காய் சூப் தயார்.

Nutrition Serving: 200g | Calories: 22kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg | Fiber: 2g

Monday, December 25, 2023

வேர்க்கடலை கூட்டு

 வேர்க்கடலை கூட்டு

 தேவையான பொருட்கள்

▢1/2 கப் நிலக் கடலை 
▢10 சின்ன வெங்காயம் 
▢2 பச்சை மிளகாய் ▢1 ஏலக்காய்
 ▢1 டீஸ்பூன் சீரகம் ▢2 கிராம்பு 
▢1 இலவங்கப் பட்டை 
▢2 டேபிள்ஸ்பூன் தேங்காய் 
▢1/2 டீஸ்பூன் இஞ்சி ▢1 டீஸ்பூன் டேபிள்ஸ்பூன் சிறிதளவு 
▢2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள் ▢மஞ்சள் தூள் சிறிதளவு 
▢உப்பு தேவையான அளவு 
▢2 கப் தண்ணீர் 

 செய்முறை

▢ நிலக்கடலையை உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும். 

▢ பின்னர், ஒரு கடாயில் எண்ணெயை சூடு படுத்தி, அரைத்த வெங்காயத்துடன் நறுமணப் பொருள்கள் சேர்த்து பொன் நிறமாகும் வரை வதக்க வேண்டும். 

▢ அதன் பிறகு ஏற்கனவே, வேக வைத்த நிலக் கடலையை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர். மஞ்சள் சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். 

▢ இதனுடன் சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் உப்புசேர்க்கலாம். 

▢ இதன் மீது தேங்காய்த் துருவல்களை தூவி சாப்பாடு மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

அடை

 அடை …

தோசை க்கு cousin. அசின் மாதிரி மெல்லிசா இல்லாம பிந்துகோஷ் மாதிரி குண்டா இல்லாம ஒரு நடுத்தர தடிமனான ஒரு inch radius la இருக்கும் ஒரு பொன் நிற வஸ்து. 

இது ஒரு protein நிறைந்த புதையல் ன்னு கூட சொல்லலாம்.   தோசை மாதிரி சப்புன்னு இல்லாம, நன்னா காரசாரமா கண்ணுல ஜலம் வர வெக்கும். 

கல்யாணம் பண்ணி வெக்கற அப்பா என் பொண்ணு கண்ல தண்ணி வந்தா அது ஆனந்த கண்ணீர் ஆ இல்லை அடை சாப்பிட்டு வந்த கண்ணீரா இருக்கணும்ன்னு கூட சொல்லலாம்.   

அடைக்கு கசின் தோசை யா இருந்தாலும் பெசரட்டு, பயத்தம்பருப்பு தோசைன்னு கூட பிறந்தவர்கள் உண்டு. 

அடைக்கு சேர்க்கற பொருட்கள், ஊற வெக்கற நேரம், அரைக்கற பக்குவம், புளிக்க வெக்கற நேரம் இதெல்லாம் ரொம்ப முக்கியம்.  

ரொம்ப ஊறினா அடை மொறு மொறுப்பா இல்லாம துணி மாதிரி இருக்கும்.   ஊறவே இல்லை னா வெடுக்குன்னு பேசற மாமியார் மாதிரி இருக்கும். 

அதே தான் சேர்க்கற பொருட்களுக்கும்.  அரிசி பருப்பு எல்லாம் சரியான அளவுல இல்லைனா அடை, மடிச்சு வெக்கற துணி மாதிரி இருக்கும்,  

இல்லைனா தட்டுக்கும் அடைக்கும் வித்தியாசம் தெரியாம முரடா இருக்கும். 

பச்சரிசி, புழுங்கலரிசி, கடலைப்பருப்பு,  துவரம்பருப்பு,  உளுத்தம்பருப்பு எல்லாம் சரியான அளவுல கலந்து ஒரு மூணு மணி நேரம் ஊற வெச்சி அதோட நல்ல குண்டூர் உருண்டை மிளகாய்,  உப்பு,  கருவேப்பிலை சேர்த்து கொர கரப்பா அரைச்சு வெச்சிக்கணும்.  

இதுல ஒரு சிலர் ஆத்துல இஞ்சி சேக்கற பழக்கம் உண்டு.   சில பேர் மிளகு ஜீரகம் கூட சேர்த்து அரைப்பா.  இதுதான் சரி, இது நன்னா இருக்காது,  

இது எப்படி இருக்கும்ன்னு எல்லாம் கேக்க கூடாது.   எல்லாமே நன்னா தான் இருக்கும்.   அவரவர்கள் ருசி சம்பந்தப்பட்டது.  

இப்படி அரைச்ச மாவ ஒரு மூணு மணிநேரம் புளிக்க வெக்கணும்.  

அடைக்கு மாவு எவ்வளவு நன்னா இருக்கணுமோ அதே மாதிர வாக்கற விதமும் ரொம்ப முக்கியம்.   முதல்ல தோசை கல்லு.   

நல்ல இரும்பு தோசை கல்லா இருக்கணும்.   Non stick, indalium இதெல்லாம் சரி பட்டு வராது.   

எங்க பாட்டி கிட்ட தண்டவாள கல்லுன்னு ஒண்ணு இருக்கும்.   ரயில் தண்டவாள இரும்பு மாதிரி strong ஆ இருக்கும்.  சூடு ஏற நேரம் ஆகும்.   

ஆனா சூடு ஆயிட்டா perfect ஆ இருக்கும். அ‌ந்த மாதிரி ஒரு கல்லுல,  நன்னா சூடு ஆனதுக்கு அப்புறம்,  ஒரு சின்ன ஸ்பூன் எண்ணெய் விட்டு ஒரு துடை துடைச்சுட்டு, ஒரு பெரிய கரண்டி மாவ விட்டு ரொம்ப மெல்லிசா இல்லாம,  ரொம்ப தடியா இல்லாம வார்க்கணும்.  

சுத்தி எண்ணெய் விட்டு  நடுவுல ஒரு ஓட்டை போட்டு அதுலயும் கொஞ்சம் எண்ணெய் விட்டு நிதானமா அடுப்ப வெச்சா, மெதுவாக மொறுமொறுன்னு, நன்னா வரு‌ம். 

நல்லெண்ணெய் தான் ரொம்ப நல்லது.   அடுத்ததா கடலெண்ணை.  Sunflower ஆயில் கூடவே கூடாது.  

ஒரு பக்கம் ஆனதுக்கு அப்புறம் திருப்பி போட்டு அதே மாதிரி வேக விடணும். தகதகன்னு எண்ணெய் மினுமினுப்போட, பொன்னிறமா, மொறுமொறுன்னு அடைய பார்த்தா எப்போடா சாப்பிடலாம்ன்னு இருக்கும்.   

இதுலயும் ஒரு சில variations இருக்கு.   அடைய வார்த்து அது மேல வெங்காயத்த பொடி பொடியா திருத்தி போடலாம்.  பிஞ்சு கத்திரிக்காய, சின்ன சின்னதா திருத்தி போடலாம்.   பீர்க்கங்காய கூட திருத்தி போடற வழக்கம் உண்டு.   இதெல்லாம் அவா அவா ருசிய பொறுத்தது. 

அடைக்குன்னு சில combinations உண்டு.   வெல்லம்,  வெண்ணெய்,  எள் போட்ட நல்ல காரமான நல்லெண்ணை கலந்த மொளகா பொடி இதெல்லாம் ஒண்ணு ஒண்ணா தொட்டு சாப்பிட்டா, தெய்வம் இருப்பது எங்கே,  வேறெங்கே, அது இந்த அடையில் தானேன்னு ஒரு சின்ன பாட்டு பாடலாம்.   

எல்லாத்தையும் விட சூப்பர் combination நம்ம அவியல்.   எல்லா காயும் போட்டு, தேங்காய் பச்சை மிளகாய் அரைச்சு விட்டு,  கெட்டி தயிர் சேர்த்து,  தேங்கா யெண்ணைல செஞ்ச அவியல் இருந்தா, எப்படி MS மாமி கூட வயலின் கன்யாகுமரி, வீணை பாலசந்தர்,  விநாயகராம் கடம், உமையாள்புரம் மிருதங்கம் எல்லாம் சேர்ந்து  மாமி ரங்க பூர விஹாரா பாடினா இருக்குமோ அந்த மாதிரி தேவலோகத்துல இருக்கற மாதிரி இருக்கும்.   

கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,  அடையின் சுவை தான் வேறு எதற்கும் வருமோன்னு ஒரு ஆலாபனை பண்ணலாமோ, அந்த மாதிரி. 

அடை மாவு மீந்து போனா…  போகாது, அப்படி போனா,  வெங்காயத்த நறுக்கி போட்டு,  கெட்டியா எண்ணெய்ல பொறிச்சி எடுத்தா குணுக்கு.  

நன்னா மழை பெய்யும் போது இதுவும் ஒரு strong காப்பி இல்லை ஒரு strong மசாலா டீ சாப்பிட்டா, சொர்க்கமே என்றாலும் ன்னு இளையராஜா மாதிரி பாடலாம்.

அதுக்கும் மேல வெண்ணெய் வைத்து சாப்பிடறது Top Class !!!

≠≠==================================

எனக்கும் ஒரு தடவை வேறு ஒரு குரூப்பில் இருந்து அடைக்கான ரெசிபி ஒருவர் எழுதி இருந்தார் இப்பொழுதெல்லாம் நான் அந்தப் பிரபோஷனில் தான் செய்கிறேன் டேஸ்ட் நன்றாக இருக்கிறது பிடித்தவர்கள் அதையும் முயற்சி பண்ணி பாருங்கள் ரெசிபி தருகிறேன் புழுங்கல் அரிசி ஒரு கப், துவரம் பருப்பு முக்கால் கப், உளுந்தம் பருப்பு அரை கப், பாசிப்பருப்பு கால் கப். எல்லாவற்றையும் தனித்தனியாக ஊறப் போடுங்கள் ஒரு குட்டி கப்பில் பெருங்காயம் சிகப்பு மிளகாய் சோம்பு மூன்றையும் தனியாக ஊற வையுங்கள் அரைக்கும் போது எல்லா பருப்புகளையுமே தனித்தனியாக லேசான கொரகொரப்புடன் அரைத்து எடுங்கள் இந்த வர மிளகாய் சோம்பு பெருங்காயத்தையும் வேண்டுமென்றால் பாசிப்பருப்பு அரைப்பதற்கு முன்பாக அதை போட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு அத்துடன் பாசிப்பருப்பை போட்டு ஒரு சுற்று விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுங்கள் அரைத்து விட்டு போடும்போது எல்லா வகையான பருப்புகளின் கலவையையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளவும் ஓட்டு போட்டு கரைத்து வைக்கவும். கிளைமேட்டுக்கு  தகுந்தாற்போல இரண்டு மணி நேரமும் அல்லது ஒரு நான்கு மணி நேரமும் புளிக்க விடலாம். ஊற்றுவதற்கு முன்பு துருவிய மஞ்சள் பரங்கிக்காய், மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து ஊற்றவும் இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி வெல்லம் வெண்ணை அவியல் உங்க இஷ்டம் எது பிடிக்குமோ அந்த சைடு dishஐ செய்து கொள்ளுங்கள் உளுந்தம் பருப்பு மட்டும் அரை கப் என்று போட்டிருப்பதில் கொஞ்சம் போல் கம்மியாக போட்டுக் கொள்ளுங்கள் மற்றபடி இதில் எந்த ஒரு மாற்றமும் நான் செய்யாமல் அந்த கொடுத்திருந்த ரெசிபி படியே  செய்கிறேன் நன்றாக முருகலாக வருகிறது

சுவையான ரசம்

 சுவையான ரசம் வேணுமா ? அதில் சேர்க்கும் ரசப் பொடி தான் அதன் ரகசியம் .! 

வீட்டிலேயே அரைக்கும் இந்த ரசம் பொடி ரகசியம் தெரிந்தால் ?

மதிய உணவிற்காக சாதம் செய்து குழம்பு, கூட்டு, பொரியல் என்று பலவிதமான டிஷ்களை செய்து வைத்தாலும் இறுதியாக ரசம் விட்டு சாப்பிட்டால் மட்டும்தான் முழு திருப்தியாக இருக்கும். 

ஒரு சில வீடுகளில் தினமும் ரசம் வைப்பார்கள். 

நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் சரியான முறையில் செரிமானம் ஆவதற்காக ரசத்தை இறுதியாக சாப்பிடுகிறோம். 

காரணம் இதில் சேர்த்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தும் நமது உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கின்றன. -- 

எனவே எந்த உணவை சாப்பிட்டாலும் இறுதியாக ரசத்தை சிறிதளவு சேர்த்து சாப்பிட்டோம் என்றால் வயிற்று பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. 

அவ்வாறு தினமும் ரசம் வைப்பதை மிகவும் சுலபமாக்கும் வகையில் இந்த ரச பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். 

மூன்று மாதங்கள் ஆனாலும் இதனை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

கல்யாண வீட்டு ரசம் போல அலாதியான சுவையில் சப்புக் கொட்டி சாப்பிடும் அளவிற்கு இருக்கக் கூடிய இந்த ரசப் பொடியை இதே அளவுகளில் ஒரு முறை செய்து பாருங்கள். 

பிறகு எப்பொழுதும் இப்படியே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். 

ரசம் என்றால் அதற்கு இந்த ரசப்பொடி தான் மிகவும் முக்கியம். 

அவசரத்திற்கு ரசப்பொடி அரைத்து ரசம் வைக்க முடியாதவர்கள், இது போல மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டால் ஐந்தே நிமிடத்தில் சட்டென சூப் போல சூப்பரான ரசத்தை வைத்து வேலையை முடித்து விடலாம். 

பாட்டி காலத்து கைப்பக்குவத்தில் சுவையான ரசப் பொடி அரைக்கும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள மேலே படியுங்கள் 👇 

  தேவையான பொருட்கள்

▢2 கப் தனியா 
▢1 கப் துவரம்பருப்பு ▢1 கப் சீரகம் 
▢1 கப் மிளகு 
▢10 காய்ந்த மிளகாய் 


 செய்முறை

▢ துவரம்பருப்பு மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். 

▢ புளியைக் கரைத்து இந்த ரசப்பொடி, உப்பு சேர்த்து, ஒரு தக்காளியை நறுக்கிப் போட்டு, கொதிக்கவிட்டு 10 நிமிடத்தில் ரசம் தயாரித்துவிடலாம். 

▢ சிறிதளவு நெய்யில் கடுகு தாளித்து, பெருங் காயத்தூள் சேர்த்தால்… 

▢ ஆஹா மணம்,ருசி ஆளை அசத்தும். 

அவ்வளவு தாங்க சூடான சுவையான ரசம் தயார் !!!

ANDHRA RASAM

 ANDHRA RASAM

Till about 20 years ago I didn't even know that such a dish as Andhra Rasam existed. 

 I don't know what they call it in Telugu.

 Here's the recipe:

 Ingredients Required

1 Onion
2 Tomatoes
2 spoons Dhaniya
1 spoon Jeeragam Cumin seeds)
2 spoons Tuvar Dhal
Handful of Curry Leaves
3 Red Chillies
A small pinch of Tamarind

 *Cooking Method* 

Cut the onion and tomatoes into small pieces. Dry roast the other ingredients until the Jeeragam splutters. Grind the onion, tomatoes and the other ingredients into a smooth paste.

Pour the paste into a vessel, add the Tamarind water, add a few curry leaves, turmeric powder and salt. Let the concoction boil for 10 minutes. 

Add more water if necessary. After it sufficiently boils add a few more curry leaves and season with mustard seeds in ghee. That is all.

A tip: 

Don't add பெருங்காயம் asafoetida. The two kAyams வெங்காயம் onion and பெருங்காயம் asafoetida kill the aroma of each other. This holds good for வெங்காய சாம்பார் Onion Sambar also.

If Andhra people have a name for this Rasam please give me the nomenclature.

As far as I know no other Rasam is made with Onion. And that's the speciality.

வசந்த காலம் வருமோ?- 53

 வசந்த காலம் வருமோ?- 53

By N Krishnamurthy 

புதன்கிழமை காலை 10 மணி போல இருக்கும். பத்பநாபனின் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது. அதற்கு அடுத்த  நிமிடத்தில்  காலிங் பெல் அடிக்கப்பட்டது. கதவை திறந்த  பத்பநாபன், வாசலில் கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி அணிந்து, தலை நிறைய மல்லிகை பூவை சூடி, பட்டுப்புடவையில், 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும், அவள் அருகில் இருபது வயது மதிக்கத்தக்க ஒல்லியான ஆனால் உயரமான ஒரு வாலிபனும் நிற்க கண்டார். அந்த பெண் அவரைப் பார்த்து " சார் இது பத்நாபன் சார் வீடு தானே" என்று கேட்டாள். அதற்கு பத்மநாபன் " ஆமாம். நான் தான் பத்மநாபன். நீங்க யாருன்னு தெரியலையே"என்றார். " சார் நான் சென்னையிலேந்து வரேன் .ம்ருதுளா ......."என்று கூறிய உடனே பத்மநாபனக்கு புரிந்து விட்டது." உள்ளே வாருங்கள்" என்று கூப்பிட்டார். ராஜேஸ்வரியும், சங்கர .க்ருஷ்ணனும் வீட்டுக்கு உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்து கொண்டு ஏதோ வேலை செய்து கொண்டிருந்த ம்ருதுளா, இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்து பார்த்ததும், "வாங்க மாமி"என்று சொல்லி உட்புறம் திரும்பி  "அம்மா மெட்ராஸ்லேந்து யார் வந்திருக்கா பார்" என்றாள். சமையலறையில் இருந்து வெளிப்பட்ட மைதிலி, ராஜேஸ்வரியை பார்த்து" வாங்க வாங்க, இவ்ளோ சீக்கிரம் நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பாக்கல"என்றாள். "ட்ரெயின் லேட்டா" என்று கேட்டாள். " அத்தோடு இல்லாம ஒரு சின்ன பையை மட்டும்  எடுத்துட்டு வந்திருக்கேளே.மீதி லக்கேஜ்  எங்க போச்சு" என்று கேட்டாள். ராஜேஸ்வரி "நாங்க ட்ரெயின்ல வரல.

ட்ரெயின்ல டிக்கெட் கெடைக்கறது குதிரை கொம்பா இருக்கும் போல இருந்தது.ஏழு மணிக்கு மதுரைக்கு ஒரு பிளைட் இருந்தது. அதுல ஏறி, மதுரைக்கு 8 மணிக்கு வந்து சேர்ந்தோம். மீனாக்ஷி  கோவில் பக்கத்தல ஒரு லாட்ஜில் ரூம் போட்டடிருக்கோம். அங்க செக்கிங் இன் பண்ணிட்டு, குளிச்சிட்டு டிரஸ் மாத்திண்டு, நேரா இங்க வந்தூட்டோம்" என்றாள்.

"ஓ.அப்படியா" என்றாள் மைதிலி . அதற்குள் ஹாலுக்கு ஒருவர் பின்  ஒருவராக வர ஆரம்பித்தார்கள். எல்லோருக்கும் ராஜேஸ்வரியையும், சங்கர க்ருஷ்ணனையும் மைதிலி அறிமுகப்படுத்தி வைத்தாள்.

ருக்மணி ராஜேஸ்வரி பார்த்து.                            "  ஏண்டிம்மா,உன்  பையன் வாய்ப்பாட்டில்லாம வயலினும் வசிக்கிறனாமே. ரெண்டுத்துலயும் எக்ஸ்பர்ட்னு  கேள்விப்பட்டேன்" என்று சொன்னாள்." அப்படி இல்ல மாமி. ரெண்டுத்துலயும் டிரெய்னிங் எடுத்துண்டு  இருக்கான். ஓரளவுக்கு நண்ணா செய்யறான். இன்னும் நிறைய கத்துக்க வேண்டியது இருக்கு" என்றாள்.

" ஓ இத தான் ஃபுல்  டைம்மா பண்ணிண்டு இருக்கானோ" என்று கேட்டாள் ருக்மணி. "இல்ல மாமி. அவன் க்வான்டம் மெக்கானிக்ஸ்ல மாஸ்டர்ஸ் பண்றான். அத்தோட வாய்ப்பாடு வயலின்  இரண்டையும் கத்தகறான் " என்றாள். இதை கேள்விப்பட்ட ருக்மணி"  அசாத்தியமா இருக்கு .இந்த பையன் மூணு விஷயத்லயும் பரிமளிக்கறான் போல இருக்கே" என்றாள். 

அதற்குள் வசுமதி தன்னுடைய ரூமில் இருந்து வெளிப்பட்டாள். அவளுக்கு ராஜேஸ்வரியையும், சங்கர க்ருஷ்ணனனையும் அறிமுகம் செய்து வைத்தாள் ம்ருதுளா. அவளைப் பார்த்து ராஜேஸ்வரி " கன்கிராஜுலேஷன்ஸ்" என்று கூறினாள். "தேங்க்யூ மாமி"என்று கூறிய வசுமதி"  உங்க பையன் வாய்ப்பாட்டு, வயலின் ரெண்டுத்துலேயும் எக்ஸ்பர்ட்ன்னு கேள்விப்பட்டேன். பேச்சு அவ்வளவா  வராது போல இருக்கு"  என்று கிண்டல் அடித்தாள். ராஜேஸ்வரி பதிலுக்கு சிரித்துக் கொண்டே 

" நீ ம்ருதுளா மாறி இல்லயோ? போல்டா பேசற.நீ நெனைக்கிற படி  அவன் இல்ல. அவன் நல்லா பேசுவான்.கொஞ்சம் சங்கோஜம். அத்தோடு இல்லாம தமிழ்ல அவனால சரளமாக பேச முடியாது. இங்கிலீஷ்னா அவனுக்கு ஈஸியா போயிடும்" என்றாள். இதைக் கேட்ட வசுபதி விட்டுக் கொடுக்காமல் "எங்களுக்கும் கொஞ்சம், கொஞ்சம் இங்கிலீஷ் தெரியும் மாமி" என்றாள்.  இதைக் கேட்ட சங்கர க்ருஷ்ணன் " How nice.My advance congradulations for your wedding " என்று கூறினான்." Thank You very much. Dont take what i told about you seriously" என்று கூறினாள் வசுமதி. அதற்கு சங்கர க்ருஷ்ணன் " Never. In fact I ejoyed your humour" என்றான்.

ம்ருதுளா இரண்டு டம்ளர்களில்  காபியை கொண்டு வந்து அவர்களிடம்  கொடுத்தாள். இருவரும் காபியை அருந்தினார்கள்.