இட்லி தோசைக்கு ஏத்த தக்காளி கடையல்
கிராமத்து ருசியில் தக்காளி கடையல்
தேவையான பொருள்கள்:
தக்காளி / Tomoto – 8
சின்ன வெங்காயம் / small onion – 20
பச்சை மிளகாய் / green chilli - 7
பூண்டு / Garlic - 4
மஞ்சள் தூள் / Turmeric - அரை ஸ்பூன்
கடுகு / Musterd – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு /Ural dal – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் / Nallennei – 5 ஸ்பூன்
செய்முறை
எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து போட்டு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் பூண்டு ,பச்சைமிளகாய், மஞ்ள் தூள் போட்டு 5 நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளியும் ,உப்பும் சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும் .
சிறிது தண்ணீர் தெளித்து நன்கு குழைய வேக விடவும்.
நன்கு வெந்தவுடன் ஆற வைத்து கடையவும்.
கடைந்த பின் மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால் சூப்பரான தக்காளி கடையல் ரெடி.
No comments:
Post a Comment