மாற்றான் தோட்டத்து மல்லிகை - 7
ஜாஸ்மின் திரும்பி வீட்டுக்கு வந்து ஐந்து நிமிடம் ஆனதும், வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. அவள் கதவை திறக்கும் முன் மீண்டும் பட பட வென்று காலிங் பெல் அடிக்க ஆரம்பித்தது.
"இருக்கிற டென்ஷனுடன் இது வேற" என்று அலுத்துக் கொண்ட ஜாஸ்மின், கோபத்துடன் கதவைத் திறந்தாள். நன்றாக குடிபோதையில் இருந்த ராபர்ட் ,அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.
"டாக்டர் சுதாகருக்கு உனக்கும் உள்ள கள்ளக்காதல் எனக்குத் தெரியும். என்னை விட அவன் எதில் உசத்தி?
நீ அவனை மணக்க விடமாட்டேன்.
நீ அவனுடன் எப்படி வாழ்ந்து விடுவாய் என்று பார்க்கிறேன்"
என்று கத்தினான். அதற்கு அவள் " நீ கேட்ட பணத்தை எல்லாம் கொடுத்து விடுகிறேனே. அப்புறம் என் வாழ்க்கையில் நீ ஏன் குறுக்கிட வேண்டும்" என்றாள். "அது எப்படி. எனக்கு சொந்தமான நீ இன்னொருவனுக்கு சொந்தமாகலாம்" என்று சண்டையை வளர்த்தான். "நீ எனக்கு கிடைக்காவிட்டால்,
நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது. உன்னை கொலை செய்து விடுவேன்" என்று மிரட்டினான்.
ஜாஸ்மினுக்கு பயங்கர கோவம் வந்தது. அவன் மேல் பக்கத்திலிருந்த சப்பாத்தி கட்டையை வீசினாள்.அது அவன் நெற்றியை பதம் பார்ப்பதற்கு முன், நகர்ந்து கொண்ட ராபர்ட்,ஆத்திரத்தில் அவளருகில் வந்து அவள் கழுத்தைப் பிடிக்க ஆரம்பித்தான். "என்னை விட்டு விடு" என்று கதறினாள் ஜாஸ்மின். அவள் கதற, கதற ராபர்ட் அவளது கழுத்தின் மேலிருந்த தன் பிடியை இறுக்கினான். ஜாஸ்மின் மூச்சு திணறினாள்.எதிர்த்து போராடிப்பார்த்தாள். பலனில்லை. சில நொடிகளில் ஜாஸ்மினின் மூச்சு நின்றது. இதன் பிறகு தான் ராபர்ட்டின் போதை தெளிய ஆரம்பித்தது. அவள் கழுத்திலிருந்த தன் கைகளை அவன் விடுவித்துக்கொண்டான்.அவள் தொப்பென்று கீழே விழுந்தாள்.
ஜாஸ்மினை தான் கொலை செய்துவிட்டது அவனுக்கு புரிந்தது.குடியின் பிடியில் இருந்தபோது தான் செய்த கொலை அவனுக்கு அது பெரிதாக படவில்லை. உடனடியாக அவள் உடலை என்ன செய்வது என்று தெரியவில்லை. "அவள் உடலை அப்புறப்படுத்தி, தல்லாகுளம் தாண்டி வைகையில் ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு, எங்கேயாவது கண்காணாமல் போய் விடலாம்" என்று தீர்மானித்தான். இதை செயல் படுத்த அவன் இருட்டும் வரை காத்துக்கொண்டிருக்க வேண்டியிருந்தது.
ஒரே நாளில் இத்தனை திருப்பங்களா. இனியும் ஏதேனும் திருப்பம் உண்டா?
நாளை வரை பொறுத்திருந்தால் தெரிந்து விட போகிறது.(தொடரும்)
No comments:
Post a Comment