Tuesday, October 10, 2023

நூலறுந்த பட்டம் - 5

 நூலறுந்த பட்டம் - 5

 பொதுவாக திருமண ஆன கொஞ்ச நாட்களாவது, புது தம்பதிகள் சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் ஆதித்யா, சுகுணா விஷயத்தில் இவ்வாறு நடக்கவில்லை. இதற்கு பெரும் காரணம் சுகுணா தான்.தான் சொல்வதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவளால் ஆதித்யாவை சம்மதிக்க வைக்க முடியவில்லை என்று எண்ணிய போது வருத்தத்தை விட இன்னும் வேகம் தான் அதிகமானது.நம்முடைய பேச்சை ஒருவன் மதிக்காமால் இருப்பதாவது என்ற கோபம் அவளிடம் தலை தூக்கியது. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போனான் ஆதித்யா. மனதுக்குள்  ஏதோ நடக்கிறது என்று புரிந்து கொண்ட ராதா,

தனியாக இருக்கும் போது,

ஒரு நாள் அவனிடம் "என்னடா, உனக்கும் சுகுணாவுக்கும் ஏதாவது பிரச்சனையா" என்று கேட்டாள்."ஆமாம்"என்று சொன்னால் தன் அம்மாவின் மனது கஷ்டப்படும் என்ற  நினைப்பில் ஆதித்யா "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா.சில சமயம் சிறு குழந்தை போல அவள் நடந்து கொள்கிறாள்.அவ்வளவுதான்" என்று சொல்லி,சிரித்து மழுப்பிவிட்டான்.

நாட்கள் கடந்தன. 

ஒரு நாள் காலை சுகுணா ஆதித்யாவிடம் நான் " இன்று மாலை வரை சற்று அதிக நேரம் ஆகும்.லேடி  டாக்டரை  பார்க்கப் போகிறேன்" என்றாள்.

"என்ன உடம்புக்கு" என்று கேட்டவன் "நான் வேண்டுமானாலும் வரட்டுமா" என்று ஆதித்யா கேட்டான். "நீங்க வரவேண்டும் என்ற அவசியம் இல்லை . நாள் தள்ளி போய் விட்டது" என்றாள். 

" அம்மாவை வேண்டுமானால்  துணைக்கு கூப்பிட்டு கொண்டு போகிறாயா" என்றான் அந்த அப்பாவி.

அதற்கு சுகுணா "நான் என்ன சின்ன குழந்தையா, உங்களை போல. எங்க போனாலும் அம்மாவை கூப்பிட்டு கொண்டு போக "என்று எரிந்து விழுந்தாள்.

இரவு 8:30 மணிக்கு வீட்டுக்கு வந்தாள் சுகுணா. மிகவும் ஆவலுடன் ஆதித்யா "என்ன ஆயிற்று" என்று கேட்டான். சுகுணா முகத்தில் சந்தோஷத்தை காட்டாமல், சர்வ சாதாரணமாக, "நான் கர்ப்பமாக இருப்பதாக சொல்கிறாள் டாக்டர்" என்றாள். உடனடியாக இதை அம்மாவிடம் சொன்னான் ஆதித்யா.ஆதித்யா சொன்ன  நல்ல செய்தியை கேட்ட ராதா ரவா கேசரி தயார் செய்து சுகுணாவிடம் அதை கொடுத்தாள். அதைப் பார்த்த சுகுணா

" எனக்கு ரவா கேசரி பிடிக்காது" என்று கூறி, அதில் சிறிது கூட சாப்பிட நிர்தாட்சிண்யமாக   மறுத்து விட்டாள்.ராதாவின் முகம் தொங்கிப்போனது.

மனம் ஒடைந்து போனாள்.

பிடிக்கவில்லை என்றாலும் தான் கஷ்டப்பட்டு செய்ததை ஒரு துளியாவது எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டு இருக்கலாமே  என்ற அங்கலாய்ப்பு அவளுக்கு.

எவ்வளவுக்கு எவ்வளவு ராதாவை நோகடிக்க வேண்டுமோ

அவ்வளவுக்கு அவ்வளவு நோகடிக்க வேண்டும் என்று தீர்மானத்தாள் சுகுணா.

இதைப் படித்துக் கொண்டிருப்வர்கள் "இப்படி எல்லாம் ஒரு பெண் இருப்பாளா. கதையில்தான் இதெல்லாம்நடக்கும்.

இது நடைமுறையில் சாத்தியமா என்ற சந்தேகம்  வந்திருக்கும். சுகுணா போன்ற பெண்களை நீங்க பார்ப்பது அபூர்வம் என்றாலும் அவளைப்போன்ற பெண்களும் இருக்கிறார்கள்.

சுகுணா ஆறாவது மாதம் கர்ப்பமாக இருந்தபோது அவளை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போவதற்கு வந்திருந்தாள் மரகதம்."பிரசவத்தை என் வீட்டில் வைத்துக் கொள்கிறேன்" என்று ராதாவிடம்  கூறினாள். "சுகுணா விருப்பம் அதுவானால் சரி" என்றாள் ராதா. ஊருக்கு போவதற்கு முன் சுகுணா ஆதித்யாவிடம் " நான் குந்தையுடன்  இந்த வீட்டுக்கு வர வேண்டுமா என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.நான் இங்கு வரவேண்டுமென்றால்இந்த வீட்டில் நீங்கள், நான், குழந்தை என்ற மூன்று பேர் தான் இருக்க வேண்டும். அப்படி உங்க அம்மா தான் உங்க கூட இருக்க வேண்டும் என்றால் நான், என் குழந்தையுடன் என் அம்மா வீட்டில் இருந்து விடுவேன். நான் ஏதும் பூச்சாண்டி காட்டுகிறேன் நீங்கள் நினைக்க வேண்டாம்.

எல்லாம் உங்கள் கையில்தான் உள்ளது" என்று எச்சரித்துவிட்டு போனாள்.ஆதித்யா மனதுக்குள் "இப்பொழுது இப்படித்தான் பேசுவாள். குழந்தை பிறந்த பிறகு அவளை சமாதானம் 

செய்து விடலாம்" என்று நினைத்துக் கொண்டான். தான் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று பிற்பாடு தான் அவனுக்கு தெரிந்தது.

No comments:

Post a Comment