சுவையான குதிரைவாலி பொங்கல் செய்முறை
Food Recipe: சுவையனா குதிரைவாலி பொங்கல் சமைப்பது எளிதானது தான்.
பொங்கல் என்றாலே, அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. அப்படியிருக்கும் போது, குதிரைவாலி போன்ற தானியத்தை வைத்து செய்யப்படும் பொங்கல் எந்த அளவிற்கு சுவையாக இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆரோக்கியத்திலும், அறுசுவையிலும் குறைவில்லாத குதிரைவாலி பொங்கல் செய்வதைப் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
செய்முறை விளக்கம் இதோ:
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், 5 டீ ஸ்பூன் நெய் ஊற்றவும். அத்துடன் மிளகு, சீரகம், முந்திரி பருப்பு, நறுக்கிய இஞ்சி, கொஞ்சம் கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
அவை வதங்கியப் பின், எந்த பாத்திரத்தில் அரிசி எடுத்தோமோ, அதே டம்ளரில் மூன்று மடங்கு தண்ணீர் எடுத்து, அதை கடாயில் ஊற்றவும். பின்னர் நன்கு கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு உடன் சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்கும் முன் குதிரைவாலி மற்றும் பாசி பருப்பை கழுவி எடுத்துக் கொள்ளவும். டம்ளரில் முக்கால் பங்கு குதிரைவாலியும், கால் பங்கு பாசி பருப்பும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
தண்ணீர் கொதித்ததும், கழுவி வைத்திருக்கும் குதிரைவாலி மற்றும் பாசிபருப்பை அதில் சேர்க்கவும். மூன்று பங்கு தண்ணீர் ஊற்றினால் தான் பொங்கும் குலைவா இருக்கும். அப்போது தான் பொங்கல் ருசியாக இருக்கும். சிலருக்கு பொங்கம் குலைவாக பிடிக்காது என்றால், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இருந்தால் போதும்.
இப்போது சிறிது நேரம் வேக வைக்கவும். குக்கர் என்றால் 20 நிமிடம் வேக வைக்கவும். வெந்த பின், நன்கு கிளறிவிடவும். இப்போது சுடச்சுட குதிரைவாலி பொங்கல் ரெடி. சுடச்சுட சாப்பிட்டால் குதிரைவாலி பொங்கல் ரொம்ப ருசியாக இருக்கும். வெண்பொங்கல் போன்று, சட்னி, சாம்பார் கலவை தான், குதிரைவாலி பொங்கலுக்கும் உகந்ததாக இருக்கும்.
No comments:
Post a Comment