வெண்டைக்காய் புளிக்குழம்பு
*பகிர்வு:*
தமிழ் அமுதம்
தேவையான_பொருட்கள்:
வதக்குவதற்கு :
தாளிப்பதற்கு:
வறுத்து_அரைப்பதற்கு:
செய்முறை:
வெண்டைக்காயை கழுவி காட்டன் துணி கொண்டு ஈரத்தை நன்றாக துடைத்து எடுத்து 1" துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளி வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். புளியை சிறிதளவு நீரில் ஊற விடவும். ஒரு வாணலியில் கடலெண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
வெண்டைக்காய் மேல்புறம் மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும். பின், மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பில்லை, மல்லி, ஜீரகம், வர மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து அதில் உள்ள நீர் சுண்டி தோல் சுருங்கும் வரை வதக்கவும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். வெண்டைக்காய் வதக்கிய வாணலியில் மீண்டும் 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு சேர்த்து பொரிந்ததும் கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு , வெந்தயம், கருவேப்பில்லை, வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து, ஊற வைத்த புளியை கரைத்து புளி தண்ணீரை ஊற்றவும். 3/4 கப் தண்ணீர் ஊற்றவும். பிறகு மஞ்சள் தூள் , மிளகாய் தூள், சாம்பார் தூள், வெள்ளம் மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
30 நிமிடம் களைத்து எண்ணெய் தனியாக திரிந்து வரும் இது குழம்பு தயார் என்பதைக் குறிக்கும். இப்பொழுது வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் இறக்கினால் சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு தயார்
No comments:
Post a Comment