Tuesday, October 10, 2023

Idly Chaat

 Idly Chaat Reciepe: சுவையும், மொறுமொறுப்பும் கூடிய இட்லி சாட் செய்வது எப்படி? மாலை நேரத்துக்கு சிறந்த ஸ்நாக்ஸ்

மாலை நேர ஸ்நாக்ஸாக அமைந்திருக்கும் இட்லி சாட்

மாலை நேர ஸ்நாக்ஸாக அமைந்திருக்கும் இட்லி சாட்

மாலை நேர ஸ்நாக்ஸாக அமைந்திருக்கும் இட்லி சாட்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லியை வைத்து சுவையும், மொறுமொறுப்பும் கூடிய இட்லி சாட் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் முக்கிய டிபன் உணவாக இருந்து வருகிறது இட்லி. எண்ணெய் சேர்க்கப்படாமல் வெறும் ஆவியில் வேகவைத்து பரிமாறப்படும் இட்லி வயிற்றுக்கு லேசாக இருப்பதுடன் உடலுக்கு எனர்ஜி பூஸ்டராகவும் இருந்து வருகிறது.

இட்லி தற்போது உலக அளவில் பேமஸான உணவாக மாறியிருக்கும் நிலையில் ஒவ்வொரு பகுதிகளில் இருந்து வரும் உணவுகளின் பக்குவத்துக்கு ஏற்றவாறு மாற்றி தயார் செய்து சாப்பிடும் பழக்கமும் உருவாகியுள்ளது.

அந்த வகையில் இட்லியை வைத்து பொடி இட்லி, சாம்பார் இட்லி, சில்லி இட்லி, தவா இட்லி போன்ற பல்வேறு விதமான ரெசிபிளின் வரிசையில் தற்போடு சாட் இட்லி தயார் செய்தென்பது எப்படி என பார்க்கலாம்.

மாலை நேரத்தில் தேநீர் பருகும்போது சாப்பிடக்கூடிய சுவை மிகுந்த எளிய ரெசிபியாக இந்த சாட் இட்லி இருக்கும்.

சாட் இட்லி செய்வதற்கு தேவையான பொருள்கள்

இட்லி - 6
எண்ணெய் - ப்ரை செய்வதற்கு ஏற்ப
தயிர் - 10 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
பச்சை சட்னி - 2 டிஸ்பூன்
இனிப்பு சட்னி - 4 டிஸ்பூன்
சீரகம் - 1 டிஸ்பூன்
சில்லி பொடி - 1 டிஸ்பூன்
சேவு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - நன்கு நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

இட்லி சாட் செய்வதற்கு முதலில் இட்லிகளை நான்கு துண்டுகளாக சம அளவில் நறுக்கி கொள்ள வேண்டும். பின் நான் ஸ்டிக் பேன் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடான பின்பு நறுக்கிய இட்லிகளை நன்கு ப்ரை செய்ய வேண்டும்.

இட்லியின் இருபுறமும் நன்கு பிரவுன் நிறத்தில் ஆன பிறகு, எண்ணெய் உறிஞ்சும் பேப்ரில் அதிகமாக இருக்கும் எண்ணெய்யை துடைக்க வேண்டும்.

ப்ரை செய்யயப்பட்ட இட்லிக்களை ஒரு ப்ளேட்டில் வைத்து அதன் மீது 5 டேபிள் ஸ்பூன் தயிர் ஊற்றி உப்பு தூவி விட வேண்டும். இதைத்தொடர்ந்து அதன் மீது பச்சை சட்னி, இனிப்பு சட்னி ஆகியவற்றை சிறிது அளவு ஊற்ற வேண்டும்.

லேசாக இந்த கலவையை கிளறிவிட்டு அதன் மேற்பரப்பில் சீரகம், மிளகாய் தூள், சேவு ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப தூவ வேண்டும். அவ்வளவுதான் ருசியான இட்லி சாட் தயார்.

இனிப்பு, காரம் கலந்து இருந்து இந்த இட்லி சாட் மாலை நேரத்தில் தேநீருடனோ அல்லது ஸ்நாக்ஸ் போன்றோ சாப்பிடலாம்.

No comments:

Post a Comment