*❇️♍இடியாப்பத்துக்கு அருமையாக இருக்கும்... சேலம் தக்காளி குருமா🌐⛔*
*தேவையான பொருட்கள்*
*தாளிப்பதற்கு...*
*செய்முறை*
# முதலில் தக்காளிகளை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். அதேப் போல் வெங்காயத்தையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.
# பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். * பின் அதில் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
# பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இறுதியாக தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
#வதக்கிய பொருட்கள் நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
# பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள சோம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
# பின் அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பைத் தூவி வதக்க வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
# பின் அதில் 1 முதல் 1 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சேலம் தக்காளி குருமா தயார்🔵🟣
No comments:
Post a Comment