#ரகோபதேஸம்தொடர்ச்சி
ரகோபதேஸம்தொடர்ச்சி_6
by பாஸ்கர் சத்யா
அடுத்தநாள். வழக்கம் போல இருக்கைகள் ஏற்பாடு, என் நமஸ்காரம், அவர் ஆசிர்வாதம். பிறகு வகுப்பு துவக்கம்.
'இன்னிக்கு அக்னி உபஸ்தான மந்திரங்கள் தானே சொல்லித் தரணும்?'
'அப்படித்தான் சொன்னேள் மாமா நேத்திக்கு.'
'உபஸ்தானம் அப்படின்னாலே அதுவும் ஒரு வேண்டுகோள் தான். இந்த உபஸ்தானத்துல ஒரு வித்தியாசம் இருக்கு. அக்னி கிட்டக்க உன்னை மாதிரியே என்னை உருவாக்கு அப்படின்னு உரிமையோடு கேட்கற மாதிரி இந்த உபஸ்தான மந்திரங்கள் இருக்கு. இதுதான் இதுல விசேஷம்.'
'ஒவ்வொண்ணா பாப்போமா இப்ப?'
1. யத்தே அக்னே தேஜஸ்தேனாஹம் தேஜஸ்வீ பூயாஸம்
அக்னியே. உன் ஒளி எதுவோ அதனால் நான் ஒளிபொருந்தியவனாக வேண்டும்.
2. யத்தே அக்னே வர்சஸ்தேனாஹம் வர்சஸ்வீ பூயாஸம்
அக்னியே உனது அகத்த அழகு எதுவோ அதனால் நான் அகத்தழகு உடையவனாக வேண்டும்.
3. யத்தே அக்னே ஹரஸ்தேந அஹம் ஹரஸ்வீ பூயாஸம்
அக்னியே உனது வசீகரம் எதுவோ அதனால் நான் வசீகரனுடையவனாக வேண்டும்.
4. மயிமேதாம் மயிப்ரஜாம் மய்யக்கனி:தேஜோததாது
எனக்கு புத்தியையும் மக்களையும் ஞான ஒளியையும் அக்னி கொடுத்தருள வேண்டும்.
5. மயிமேதாம் மயிப்ரஜாம் மயீந்த்ர:இந்திரீயம் ததாது
எனக்கு புத்தியையும் மக்களையும் இந்திரிய சக்தியையும் இந்திரன் கொடுத்தருள வேண்டும்.
'எனக்காக இந்திரன் கிட்ட போய் சொல்றியா அப்படின்னு மறைமுகமா கேட்கிற மாதிரி இருக்கு பார். அக்னிதான் எல்லா தேவதைகள் கிட்ட நம்மளோட விண்ணப்பங்கள எடுத்துண்டு போற புரோகிதனாச்சே. ஏற்கனவே சொன்னேனே.'
6. மயிமேதாம் மயிப்ரஜாம் மயி ஸுர்யோ ப்ராஜோ ததாது
எனக்கு புத்தியையும் காந்தியையும் சூரியன் கொடுத்தருள வேண்டும். அதற்கு நீ எனக்கு உதவி செய்திட வேண்டும் என்பது மறைமுக பிரார்த்தனை இங்க, புரிஞ்சுதா?'
'இப்படி ஒன்னோட பிரார்த்தனைகளை அக்னி கிட்ட வெச்சுட்டு ஒரு நமஸ்காரம். அக்னிக்கான நமஸ்காரம்.
'அப்பறம் ஒரு பிராயச்சித்த வந்தனம் மந்திரம் சொல்லி. என்ன மந்திரம் அது?'
'இதுக்கு என்ன பொருள்? அக்னி தேவரே மந்திர குறைபாடுடனும் கிரியையில் குறைபாடுடனும் பக்தியில் குறைபாடுடனும் எந்த ஹோமம் செய்யப்பட்டதோ அது பரிபூரணமாக வேண்டும். பிராயச்சித்தங்களோ தவமோ கருமங்களோ எவை எவை உண்டோ அவை அனைத்தினும் தலை சிறந்தது கிருஷ்ணனை நினைக்கறது.'
'இப்படி பகவான் கிருஷ்ணர் கிட்ட அறியாமல் செஞ்ச தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடற விதமா மந்திரத்த சொல்லிட்டு ஸாஷ்டாங்க நமஸ்காரம்.'
'இதுக்கு அப்புறம் ரக்ஷை மந்திரங்கள்.
அதாவது ஹோம பஸ்மத்தை இடது கையில் எடுத்து ஜலத்தால் (தண்ணீரால்) நனைத்து மந்தரம் சொல்லி பவித்ர விரலால் குழைக்கணும்.
மாநஸ் தோகே தநயே மாநஆயுஷி மாநோ கோஷ§மாநோ அச்வேஷ§ரீரிஷ
வீரான் மாநோ ருத்ரபாமிதோவதீ: ஹவிஷ் மந்நோ நமஸா விதேமதே.
அப்படி குழைத்த பஸ்பத்த அங்கங்கள்ல திலகம் அல்லது பொட்டு வெச்சுக் கொள்ளணும்.
மேதாவீ பூயாஸம் --- நெற்றியில்
தேஜஸ்வீ பூயாஸம் --- மார்பில்
வர்ஜஸ்வீ பூயாஸம் --- வலது தோளில்
ப்ரம்மவர்சஸ்வீ பூயாஸம் --- இடது தோளில்
ஆயுஷ்மான் பூயாஸம் --- கழுத்தில்
அன்னாதோ பூயாஸம் --- பின் கழுத்தில்
ஸ்வஸ்தி பூயாஸம் --- சிரசில்
'ஒட்டுமொத்தமா இதுக்கு பேரு
பஸ்ம தாரணம்.
ஹோம பஸ்மத்தை எடுத்து இடது கையில் வைத்து ஜலம் சேர்த்து பின்வரும் மந்திரத்தால் குழைக்க. எங்களுடைய சிசுக்களுக்கும் பிள்ளைகளுக்கும் எங்களுடைய ஆயுளுக்கும் எங்களுடைய பசுக்களுக்கும் எங்களுடைய குதிரைகளுக்கும் கஷ்டம் ஏற்படாமல் காக்க வேண்டும். எங்கள் வீரர்களை கோபத்தால் கொன்று விடலாகாது. ஹவிஸுடன் கூட நமஸ்காரத்தால் வழிபடுகிறோம்.
'விளக்கங்களோடு நான் சொன்னதுனால ஏதோ ஸமிதாதானம் பண்றதுக்கு ரொம்ப நாழி ஆகும் அப்படின்னு நெனைச்சிடக் கூடாது. மிஞ்சி மிஞ்சி போனா பத்து நிமிஷம் ஆகலாம். அக்னி புடிச்சுக்கறதுக்கு அஞ்சு பத்து நிமிஷம் ஆகலாம். மந்திரங்கள் நெட்ருவாயிடுத்துன்னா ஜெட் ஸ்பீடுல முடிச்சுடலாம்.'
'அக்னிய பிரதிஷ்ட பண்றோம், சங்கல்பத்தோட கூடிய பிரார்த்தனையோட ஆரம்பிக்கிறோம், சமித்துகளை வைத்து ஆஹுதிகளை சமர்ப்பிக்கிறோம், நமஸ்காரம் பண்ணி திரும்பவும் பிரார்த்திச்சிண்டு, பிராயச்சித்த மந்திரத்தையும் சமர்பித்து பஸ்ம தாரணத்தோட முடிக்கிறோம். சின்ன சின்ன மந்திரங்கள் குழந்தைகளுக்கு சிரமம் இல்லாம எளிதா விளங்கற மாதிரி.'
'நாளைக்கு அறிவுள்ளவனாகவும் புத்திசாலியாகவும் ஆற்றல் மிக்கவனாகவும் இல்லறத்துல செல்வங்களை பெறுவதற்காகவும் இந்த ஸமித்தாதானம் ஒரு பிரம்மச்சாரிக்கு அடித்தளமா இருக்கு. தினமும் இதை தவறாமல் செய்யறதுனால பிரம்மச்சாரியின் நோக்கம் பழுது அடையாமலும் திசை மாறாமலும் அவனுக்கு இந்த சமிதாதானம் உதவறது.'
'காலங்கள் மாறிண்டே இருக்கு. நித்திய கர்மாக்கள்ல ஆர்வமும் கொறஞ்சுண்டே வர்றது. குறஞ்ச பக்ஷம் உபநயனம் நடந்து ஒரு வருஷமாவது இந்த ஸமிதாதானத்தை பிரம்மச்சாரிகள் கடைப் பிடிக்கணும்.'
'பிரம்மச்சாரி அவனோட அடுத்த நிலையான கிரஹஸ்தனாகறதுக்கு முன்னாடி அவனை ஒழுங்குபடுத்தி அவன் வழி தவறாம போகறதுக்கு ஸமிதாதானம் மாதிரி ஒரு நித்யகர்மா வேறு எதுவுமில்லைனு கூட சொல்லலாம்.'
'ஒரு வருஷம் தொடர்ச்சியா நீ பண்ணினேங்கறது வாஸ்தவமா இருந்தாலும் உன்ன மாதிரி இருக்கிற நல்ல குழந்தைகள் தொடர்ந்து செய்யணும். செய்வியா? தொடர்ச்சியை விட்டுப் போயிருந்தாலும் பரவாயில்லை.'
கேட்டுக் கொண்டே இருக்கிறேன் அவர் சொல்வதையெல்லாம். கேட்கும் போது ஆர்வம் மேலிடத்தான் செய்கிறது. ஆனால் நடைமுறையில் ஆர்வம் குறையாமல் இருக்க பகவானும் நமக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே!!
மாயைகள் அபரிமிதமாக நம்மைச் சுற்றி கொட்டிக்கிடக்கும் போது படைத்தவனை மறந்து படைப்புகளை அல்லவோ ரசிக்கிறோம்.
அன்றைய வகுப்பு நமஸ்கார ஆசீர்வாத பரிமாற்றங்களுடன் நிறைவுற்றது.
தொடரும்
No comments:
Post a Comment