Tuesday, October 17, 2023

மாற்றான் தோட்டத்து மல்லிகை - 8

 மாற்றான் தோட்டத்து மல்லிகை - 8

 சுகுமாரை சேர்த்திருந்த  நர்சிங் ஹோமில் இருந்து டூட்டி டாக்டர் ஜாஸ்மின் கொடுத்த நம்பரை கூப்பிட்டார். நிரஞ்ஜனா போனை எடுத்து" ஹலோ யார் பேசறது"என்று கேட்டாள்.  "நீங்க மிஸஸ் சுகுமாரா"என்று கேட்டார் டாக்டர்."ஆமாம். சொல்லுங்க நீங்க யார்" என்றாள் அவள்."நான் ஜீவா நர்சிங் ஹோம்லேர்ந்து  பேசுறேன். டாக்டர் சுகுமாருக்கு ஃபுட்பாய்சன்  ஆகி இங்க அட்மிட் ஆகியிருக்கார்.நீங்க வர முடியுமா" என்று கேட்டார்." ஐயோ. அப்படியா.இப்போ எப்படி இருக்கார் " என்றாள்  நிரஞ்ஜனா பதற்றத்துடன். "மேடம். நீங்க பதறும்படி அப்படி ஒண்ணும் பிராப்ளம் இல்ல.அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.நீங்க இப்போது இங்கு வந்தால் போதும்" என்று கூறி ஜீவா நர்சிங்ஹோமின்  அட்ரசை கொடுத்தார். ஒரு ஆட்டோ பிடித்த நிரஞ்ஜனா அடுத்த பத்து நிமிஷத்தில் ஜீவா நர்சிங்ஹோமை அடைந்தாள்.டாக்டரை பார்த்து" டாக்டர் இப்போது எப்படி இருக்கிறார்" என்றாள். "ஸ்டமக் வாஷ் பண்ணியாச்சு மேடம். இப்போது ட்ரிப்சில் இருக்கிறார். இன்னும் பத்து பதினைந்து நிமிஷத்தில் நார்மல் ஆகி விடுவார் "என்று கூறி, சுகுமார் படுக்க வைக்கப்பட்டிருந்த ரூமிற்கு அவளை அழைத்துச் சென்றார். ஐந்து நிமிடங்களுக்கு பின் சுகுமார் கண்ணை திறந்தான்.நிரஞ்ஜனாவை பார்த்தவுடன் அவள் கையை பற்றிக்கொண்ட சுகுமார் கண் கலங்கினான்.

"குழந்தைகள் எங்கே" என்றான் .

"அவர்களை அழச்சிண்டு வரல.உங்களுக்கு என்ன ஆயிற்று" என்று கேட்டாள் அவள்."என்ன என்று தெரியவில்லை. நான் சாப்பிட்டதில் ஏதோ சீரியஸாக யாரோ விஷத்தை காலந்திருக்கிறார்கள். யாரேனும் என்னை கொல்ல பார்க்கிறீர்களா என்று தெரியவில்லை" என்றான்." ஐயோ கடவுளே.இது எப்படி சாத்தியம்.அது சரி இங்கே எப்படி வந்து சேர்ந்தீர்கள்" என்றாள் நிரஞ்ஜனா . "டாக்டர் ஜாஸ்மின் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தாள் " என்று கூறி தலையை குனிந்து கொண்டான் சுகுமார்.

ஜாஸ்மினின் பெயரை கேட்டதும் நிரஞ்ஜனாவுக்கு பத்திக் கொண்டு வந்தது. இருந்தாலும்,"பரவாயில்லை இந்த மாட்டிலாவது  சுகுமாரை ரை இந்த நர்சிங் ஹோமில் சேர்த்து இருக்கிறாளே"என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த ரூமுக்குள்  எட்டி பார்த்த டாக்டர் 'டாக்டர் சுகுமார் நீங்க இப்ப எப்படி Feel பண்றேங்க" எனக்கேட்டார்."I am o.k டாக்டர்"என்றான் சுகுமார். 'நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்.டிஸ்சார்ஜ் சம்மரி தருகிறேன். இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துல உங்களுக்கு என்ன மாதிரி பாய்சன் கொடுத்திருக்காங்கனு  என்னால் உங்களுக்கு சொல்ல முடியும்" என்று கூறினார். ஆஸ்பத்திரிக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டி விட்டு சுகுமாரும், நிரஞ்ஜனாவும் வீட்டுக்கு கிளம்பினார்கள். வீட்டுக்கு சென்றவுடன் நிரஞ்ஜனா சுகுமாரை பார்த்து "இப்போது எப்படி இருக்கிறது" என்றாள்."இப்பொழுது நன்றாக இருக்கிறேன்.ஆனால் கொஞ்சம் டயர்டாக இருக்கிறது"என்றான். "கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று நிரஞ்ஜனா ஒரு டம்ளர் நிறைய பாதாம்கீரை கொண்டு வந்து கொடுத்தாள். அதை குடித்த  சுகுமார் "என்ன விசேஷம்.பாதாம் கீர் பண்ணி இருக்கே" என்றான். "இன்று என்ன விசேஷம் என்றா  கேட்கிறீர்கள்.இன்றைய தேதி என்ன தெரியுமா" என்று கூறிவிட்டு தேதியையும்,மாதத்தையும் கூறினாள் நிரஞ்ஜனா.

"ஓ மை காட் இன்று நாம் கல்யாண தினம் அல்லவா . இதை  கூட மறந்துவிட்டு முட்டாளாக இருந்திருக்கிறேன்" என்றான் சுகுமார் தலையில் அடித்துக் கொண்டு.

"உங்கள் மயக்கத்தினால்  இந்த  நாளை நீங்கள் மறந்து விட்டீர்கள்"என்று கூறினாள் நிரஞ்ஜனா. "என்ன சொல்கிறாய் நீ" என்றான் சுகுமார். "இல்லை நீங்கள் நர்சிங் ஹோமில்  மயங்கி கிடந்ததால் மறந்து விட்டீர்கள் என்று கூறினேன்"என்றாள் நிரஞ்ஜனா

"சரி. நீங்கள் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிருங்கள்"என்று கூறி நிரஞ்ஜனா அந்த அறையை விட்டு அகன்றாள்.

பின்பு சுகுமார் ஜாஸ்மினுக்கு போன் செய்தான். ஜாஸ்மின் போன் தொடர்ந்து ரிங் ஆகி கொண்டே இருந்தது." சரி ஒரு வேளை அவள் பாத்ரூமில் இருக்கலாம்" என்று நினைத்துக் கொண்டு ஐந்து நிமிடம் கழித்து மறுபடியும் அவள் நம்பருக்கு போன் செய்தான்.அப்போதும் அவனுக்கு பதில் கிடைக்கவில்லை."சரி. நாளைக்கு காலையில் நரசிங் ஹோமில் பார்த்துக் கொள்ளலாம்" என்று நினைத்து அவன் அவன் தூங்க ஆரம்பித்தான்.அவளது போனில் அவனிடமிருந்து வந்த இரண்டு கால்களால் அவனுக்கு ஏதேனும் தொல்லை வரப்போகிறாதா?

நாளை பார்ப்போம்

(தொடரும்)

No comments:

Post a Comment