Wednesday, November 1, 2023

மசாலா மஜ்ஜிகே

 *மசாலா மஜ்ஜிகே.... (நீர்மோர்)* 👆👇

நீர்மோர் , மாங்காய், வெள்ளரி போட்ட கோசுமல்லி போட்ட  மசாலா மஜ்ஜிகே  வீட்டிற்கு வருபவர் களுக்கு தருவது, அவர்கள் அதை விரும்பி குடித்து பாராட்டி செல்வதும் ஒரு தனி அழகு தான்.

      மசாலா மஜ்ஜிகே செய்வது மிகவும் சுலபம். 

நாம் குடிப்பதற்கும், வீட்டிற்கு வருபவர் களுக்கு தரவும், ஆபிஸ், வெயிலில் வெளியே செல்லும் போது குடிக்க கொண்டு செல்லவும் குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்பலாம்.

       இது சுவை நிறைந்தது.


 *தேவையானவை* :

கெட்டி தயிர்
பச்சைமிளகாய், 1
இஞ்சி சிறு துண்டு
மாங்காய் சிறு துண்டு
வெள்ளரி சிறு துண்டு
கொத்துமல்லிதழை சிறிதளவு
கறிவேப்பிலை, புதினா சிறிதளவு.
வெந்தயப்பொடி...சிட்டிகை
சீரகம் சிட்டிகை
பெருங்காயத்தூள் சிட்டிகை.
உப்பு தேவையான அளவு.

       தயிர் உடன் மேற் கண்ட பொருட்களை எல்லாம் மிக்ஸியில் அடித்துதேவையான அளவு நீர் கலந்து வடிகட்டி 10 நிமிடம் fridge-ல் வைத்தும் குடிக்கலாம். 

fridge-ல் வைக்காமலும் குடிக்கலாம்.

      கோடைகாலத்திற்கு ஏற்ற, எனர்ஜி drink இது. மாங்காய், வெள்ளரி விருப்ப மில்லாதவர்கள் சேர்க்க தேவை யில்லை.

No comments:

Post a Comment