Tuesday, October 17, 2023

மாற்றான் தோட்டத்து மல்லிகை -11

 மாற்றான் தோட்டத்து மல்லிகை -11

மாலை இரண்டு மணிக்கு  சுகுமார், ஜீவா நர்சிங் ஹோமில் இருந்த டியூட்டி டாக்டரை போனில் அழைத்தான்.

"எனக்கு விஷம் கொடுத்தவர் யார் என்று ஓரளவுக்கு யூகித்திருக்கிறேன். இதை நான் போலீஸிடம் சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் என்னை அங்கே அட்மிட் செய்யும் பொழுது நீங்கள் என் போலீசுக்கு தெரிவிக்கவில்லை என்று உங்களுக்கு ஏதேனும் பிராப்ளம் வருமா" என்று கேட்டான். அதற்கு அந்த டாக்டர் "டாக்டர். நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தல்லாகுளம் எஸ்.பி என்னுடைய சித்தப்பா தான். அவர் பெயர் சற்குணம். அவரிடம் நானே விவரத்தை கூறி உங்களை தொடர்பு கொள்ள செய்கிறேன்" என்று கூறினார்.

அடுத்து ஒரு மணி நேரத்தில் சற்குணம் சுகுமார் வேலை செய்து கொண்டிருக்கும் நர்சிங்ஹோமுக்கு வந்தார். ரிசப்ஷனிஸ்டை பார்த்து "டாக்டர் சுகுமாரை பார்க்க வேண்டும்" என்று கூறினார். என்றுமில்லாத திருநாளாக காலை கொஞ்சம் போலீசும், மாலை மற்றொரு போலீசும் வருவது கண்டு கொஞ்சம் ஆச்சரியமடைந்தாள் ரிசப்னனிஷ்ட் வனிதா. பின்பு அவள் எஸ்.பி ஐ டாக்டர் சுகுமாரின் ரூமுக்கு அழைத்துச் சென்றாள். உள்ளே சென்றதும் சற்குணம் "நான் சூப்பிரெண்டண்ட் ஆப் போலீஸ் சற்குணம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சுகுமார் "சார்,வாருங்கள்"என்று கூறி தனக்கும் ஜாஸ்மினுக்கும் உள்ள நெருக்கமான உறவை உறவு குறைத்துக் கூறி, தனக்கு யாரோ விஷம் வைத்ததையும் கூறினான். சற்குணம் அவனிடம் "நேரடியாகவே நீங்கள் யாரையாவது சந்தேகப்படுகிறார்களா" என்று கேட்டார். அதற்கு சுகுமாரன் "இங்கே டாக்டர் ஜோசப் குருவில்லா  என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு டாக்டர் ஜாஸ்மின் மீது ஒரு கண். நான் இதற்கு குறுக்கே இருக்கிறேன் என்ற அனாவசிய  சந்தேகத்தில் அவர் எனக்கு விஷம் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். நேற்று அவரே எனக்கு காபி கொண்டு வந்து கொடுத்தார். அதில் தான் விஷம் கலந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். அத்தோடு இல்லாமல் பார்மசியில் தாலியம் கலந்த மருந்துகளை யார் வாங்கினார்கள் என்று ரெஜிஸ்டரை செக் செய்தேன். மூன்று நாட்களுக்கு முன் டாக்டர் குருவில்லா அந்த மருந்தை வாங்கியது ரெஜிஸ்ட்டரில் பதிவாகி இருக்கிறது" என்றான். இதைக் கேட்ட சற்குணம் "தேங்க்யூ டாக்டர் சுகுமார். என்னுடைய வேலையை சுலுபமாக்கி விட்டீர்கள்" என்று கூறி "இனி நான் ஆக வேண்டியது பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்" என்று கூறினார் . சற்குணம் பின்பு ஜோசப் குருவில்லாவை தேடிச் சென்றார்.இதற்குள் ஒரு போலீஸ் ஆபிசர் யாரையோ தேடுவதைப்பார்த்து  சந்தேகப்பட்ட ஜோசப் குருவில்லா கடகடவென பார்க்கிங் லாட்டிற்கு சென்று, தன்னுடைய மோட்டார் சைக்கிளை ஆன் செய்து அதில் ஏறி கிளம்ப தயாரானான். ஆனால் அவன் போதாத காலம்  சில வண்டிகள் எதிரும் புதிரும் நிற்க வைக்கப்பட்டு இருந்தால், அவனால் அவ்வளவு  சுலபமாக வெளியில் செல்ல முடியவில்லை. அதற்குள் அவனைத் தேடிக் கொண்டு வந்த சற்குணம் அவன் வெளியே தப்பி சென்று விட்டதை அறிந்து பார்க்கிங்  லாட்டுக்கு சென்று, சுகுமார் அடையாளம் காட்ட, அவனை பிடித்தார். முதலில் அவன் ஒன்றையும் ஒத்துக் கொள்ளவில்லை. சற்குணத்திடம் அவன் "டாக்டர் சுகுமார் ஏற்கனவே கல்யாணமானவர். அவர் ஜாஸ்மினுடன் தகாத உறவு வைத்துக் கொண்டிருந்தார். அதை நான் பலமுறை கண்டித்து இருக்கிறேன்.அதனால் அவர் என் மீது வீண் பழி போடுகிறார். மற்றபடி நான் அவருக்கு விஷம் கொடுக்கவில்லை. எனக்கு ஒன்றுமே தெரியாது" என்று சாதித்தான். இதைக் கேட்ட சற்குணம் "தாலியம் கலந்த மருந்தை நீங்கள் எதற்கு பார்மசிலிருந்து வாங்கினீர்கள்" என்று கேட்டார் . அதற்கு அவனால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அவனை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற எஸ். பி, கேட்கிற விதத்தில் அவனை கேட்க ஆரம்பித்ததும், வேறு வழி இல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்டான். அவனை ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க கட்டளையிட்டார் சற்குணம்."எனக்கு இரண்டு நிமிடம் டைம் கொடுங்கள்" என்று கூறிவிட்டு பாக்கெட்டில் ரெடியாக இருந்த பொட்டாசியம் சயினெட் பவுடரை எடுத்து ஒரு துளி நாக்கில் தடவிக் கொண்டான்.அடுத்த நிமிடத்தில் டாக்டர் குருவில்லா நாக்கில் நுரை  தள்ள போலீஸ் ஸ்டேஷனில் மரணத்தை தழுவினான். இந்த முறை டாக்டர் சுகுமார் தப்பித்து விட்டதால் அடுத்த முறை அவருக்கு பொட்டாசியம் சயனைடு  விஷயத்தை கொடுக்க அவன் வாங்கி வைத்திருந்த விஷம்,  கடைசியில் அவனையே காவு  வாங்கிவிட்டது

(தொடரும்)

No comments:

Post a Comment