Tuesday, October 17, 2023

மாற்றான் தோட்டத்து மல்லிகை -6

 மாற்றான் தோட்டத்து மல்லிகை -6

By N Krishnamurthy 

போகிற வழியெல்லாம்  சுகுமாருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக ஆரம்பித்தது.சுகுமார் "எனக்கு உடம்பை என்னமோ செய்கிறது" என்று கூறினான்.

வீட்டை ஆடைந்ததும் அவனை கைத்தாங்கலாக அழைத்துச்சென்று, அவனைத் தொட்டுப் பார்த்த ஜாஸ்மின் "என்ன இப்படி ஜுரம் அடிக்கிறது" என்றாள். "கொஞ்சம் சோபாவில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.நான் நான் காபி போட்டு கொண்டு வருகிறேன். அத்துடன் ஒரு ஆஸ்பிரின் மாத்திரையும் எடுத்து வருகிறேன்" என்றாள்.

ஜாஸ்மினை பார்த்து  சுகுமார் ஈனஸ்வரத்தில்"என்னுடைய சிம்டம்ஸை எல்லாம் பார்க்கும்போது ஏதோ சீரியஸ்  ஃபுட் பாய்சன் ஆகி இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னை உடனடியாக அருகில் உள்ள நர்சிங் ஹோமில் அட்மிட் செய்து, குடலை வாஷ் பண்ண சொல். போதும்" என்றான். 

ஜாஸ்மின் மீண்டும் அவனை காரில் ஏற்றிக்கொண்டு, அடுத்த தெருவில் இருந்த ஒரு நர்சிங் ஹோமிற்கு  சென்று, டூட்டி டாக்டரை பார்த்து விஷயத்தை சொன்னாள்.சுகுமாரை ஸ்டெச்சரில் படுக்கவைத்து அழைத்து வந்தனர் ட்யூட்டியில் இருந்த பணியாளர்கள். டூட்டி டாக்டர் உடனடியாக அவனுக்கு முதல் உதவியை அளித்து, அவன் குடலை கழுவ gastric suctioning செய்ய ஏற்பாடு செய்தபின் ஜாஸ்மினிடம் " நல்லவேளை சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்த்தீர்கள். இன்னும் 15 நிமிடம் தாண்டி இருந்தால் இவர் உயிருக்கு ஆபத்தாக போயிருக்கும். அனேகமாக ஏதோ ஸ்லோ பாய்சனை அவருக்கு கொடுத்துவிட்டு இருக்கிறார்கள்.

நீங்களும் ஒரு டாக்டர் என்பதால் நான் இதை போலீஸ் கேஸ் ஆக்க விரும்பவில்லை.

இவர் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் நான் போலீசில் சொல்ல வேண்டி இருக்கும்.

இப்போது நீங்கள் இங்கே இருப்பதில் ஏதும்  அர்த்தம் இல்லை.

நீங்கள் உங்களுடைய போன் நெம்பரையும், நீங்கள் பணிபுரியும் நர்சிங் ஹோமின் பெயரையும் கொடுங்கள்.  தேவைப்பட்டால் நான் போனில்  கூப்பிடுகிறேன். இனி இவரை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று ஆறுதல் கூறினார். அதன்பின் ஜாஸ்மின் அவரிடம் ஒரு நம்பரை  எழுதிக் கொடுத்து "இது இவரோட மனைவி  நம்பர்.தயவுசெய்து நீங்கள் அவரை கூப்பிட்டு விஷயத்தை சொல்லி விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டாள். டாக்டர்" சரி அப்படியே செய்கிறேன்" என்று கூறினார்.

ஜாஸ்மின் தன் காரில் வீடு திரும்பினாள். அவளுக்கு அங்கேயே இருந்து,சுகுமாரை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று மனதில் ஆசை இருந்தாலும், சுகுமாரின் மனைவி வரும்போது தான் அங்கு இருப்பது நன்றாக இருக்காது, வேண்டாத பிரச்சனைகளை கிளப்பும், என்று நினைத்து, டாக்டர் தன்னை வீட்டுக்குப் போக சொன்ன உடன் கிளம்பி விட்டாள்.

சுகுமார் பிழைப்பானா?

இது போலீஸ் கேஸ் ஆகிவிடுமா?

சுகுமாரை கொல்ல,யார்தான் அவனுக்கு ஸ்லோ பாய்சன் தந்திருக்க முடியும்?

நிச்சயம் ஜாஸ்மினாக இருக்காது. அவளுக்கு மோடிவ் இல்லை.

"கொலையும் செய்வாள் பத்தினி" என்பதற்கேற்ப இது நிரஞ்ஜனாவின் வேலையாக இருக்குமோ? 

அல்லது ஏதேனும் மூன்றாம் நபர் இதை செய்திருப்பாரோ?

நினைக்க,நினைக்க,

எனக்கு தலை சுற்றுகிறது 

 (தொடரும்)

No comments:

Post a Comment