மாற்றான் தோட்டத்து மல்லிகை -3
By N Krishna Murthy
அன்று நிரஞ்ஜனாவுக்கு அவளது தங்கை ஷோபனா போன் செய்திருந்தாள். அடுத்த சனிக்கிழமை அவளுடைய இரண்டாவது மகள், அபூர்வாவுக்கு, பிறந்த நாள் வருவதால் வருவதால், அவளும், சுதாகரனும் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.
ஷோபனா ஒரு பெண் நல மருத்துவர். திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
அவள் நிரஞ்ஜனாவை விட இரண்டு வயதே சிறியவள்.நிரஞ்சனாவும், அவளும் அக்கா, தங்கை என்று சொல்வதை விட மிக நெருங்கிய தோழிகள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இருவருக்கும் அன்னியோன்யம் உண்டு.
இது குறித்து சுதாகரிடம் நிரஞ்ஜனா கூறியபோது சுதாகர் "சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் எனக்கு இரண்டு முக்கிய ஆபரேஷன்கள் இருக்கின்றன.நிச்சயம் என்னால் வர முடியவில்லை.நீ குழந்தைகளை அழைத்து கொண்டு போய்விட்டு வா.
அபூர்வாவுக்கு என் வாழ்த்துக்களை சொல்லு. அவளுக்கு
நல்ல பரிசாக கொண்டு போய் கொடு" என்று கூறினான். அவனுடைய உள் மனம் இந்த இரண்டு நாளும் ஜாஸ்மினுடன்அதிக நேரம் செலவிடலாம் என்று குதூகலமிட்டது. நிரஞ்ஜனாவும் ஓரளவுக்கு அவன் இதைத்தான் சொல்வான் என்று எதிர்பார்த்தாள்.
சனிக்கிழமை காலை 7:00 மணிக்கு, தன் இரு குழந்தைகளுடன்,
வைகை எக்ஸ்பிரஸை பிடித்த நிரஞ்ஜனா, ஒன்பது கால் மணிக்கு திருச்சி ஜங்ஷனில் இறங்கினாள். ஜங்ஷனுக்கு ஷோபனா தன் காரை அனுப்பி இருந்ததாள்.
15 நிமிடங்களில் நிரஞ்ஜனா தில்லை நகர் எய்த் கிராஸிலிருந்த ஷோபனாவின் வீட்டை அடைந்தாள். வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்த ஷோபனா,அவர்கள் வண்டியை விட்டு இறங்கியதும், பரிக்ஷித்தையும், பரிமளாவையும் பாசத்தோடு அணைத்துக் கொண்டாள். பின்பு நிரஞ்ஜனாவை பார்த்து " என்ன நிரா.இப்படி எளச்சு போய் இருக்க"என்றாள். அதைக் கேட்ட நிரஞ்ஜனி"ஷோபி. வழக்கமாக சொல்லும் இந்த டயலாக்கை இன்றைக்காக மாற்றி சொல்லக்கூடாதா" என்று கேட்டாள். இதைக் கேட்ட ஷோபனா கலகலவென்று சிரித்தாள். இருவரும் வீட்டின் உள்ளே சென்றார்கள்.மாலை 4 மணிக்கு ஆரம்பித்த அபூர்வாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏழு மணி வரை மிக விமர்சையாக போனது. இரவு சாப்பாடு முடிந்ததும்,இரண்டு சகோதரிகளும் பேசிக் கொண்டிருந்தார்கள். எட்டு மணிக்கு மேல் குழந்தைகள் தூங்க சென்று விட்டார்கள். நிரஞ்ஜனாவை பார்த்து ஷோபனா' என்ன நிரா. என்னதான் நீ இன்றைய கொண்டாட்டங்களிள் கலந்து கொண்டிருந்தாலும், உனக்குள் ஏதோ ஒரு சோகம் இருப்பது மாதிரி எனக்கு தோன்றுகிறது. நான் நினைப்பது தவறாக கூட இருக்கலாம்" என்று கூறினாள். "அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்று கூறிய நிரஞ்சனா கண்ணில் இருந்து எட்டிப்பார்க்கும் கண்ணீரை தன் தங்கை பார்க்க கூடாது என்று வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் முகத்தை தன் கையால் திருப்பிய ஷோபனா "ஏன் நிரா அழற விஷயத்தை சொல்லு .உடம்புக்கு ஏதாவது ப்ராபளமா "
என்றாள். இதற்காக காத்துக் கொண்டிருந்த நிரஞ்ஜனா நடப்பது எல்லாவற்றையும் ஷோபனாவிடம் கூறினாள். இதைக் கேட்ட ஷோபனா அதிர்ச்சி அடைந்தாள்.
"என்னால் இதை நம்பவே முடியவில்லை. சுதாகர் பெரிய மனுஷன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவரும் ஒரு சராசரி ஆண் பிளையாக இப்படி இருப்பார் என்று நான் எண்ணிப் பார்க்கவே இல்லை" என்று கூறினாள். பின்பு அவள் நிரஞ்ஜனாவிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியில் ஷோபனா நிரஞ்ஜனாவிடம் "எதற்கும் கவலைப்படாதே .எந்த காலத்திலும் விவாகரத்து வேண்டும் என்று நினைக்காதே. எப்படியும் சுகுமார் திருந்தி விடுவார் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினாள்.
இருவரும் படுக்கச் சென்றார்கள். இருவருக்குமே அன்று இரவு தூக்கம் வரவில்லை.ஷோபனா, தான் எந்த விதத்திலாவது நிரஞ்சனாவுக்கு உதவ முடியுமா என்று நெடுநேரம் சிந்தித்து கொண்டு இருந்தாள்.
மறுநாள் ஞாயிறு மாலை சென்னையில் இருந்து வரும் வைகை எக்ஸ்பிரஸ் பிடித்து மதுரைக்குச் சென்றாள் நிரஞ்ஜனா. அவள் வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டி இருந்தது. செல்போனில் சுதாகரை தொடர்பு கொண்டாள் நிரஞ்சனா. சுதாகர் நிரஞ்சனாவிடம் "எனக்கு இங்கு நர்சிங் ஹோமில் கொஞ்சம் வேலை இருக்கிறது. வர வழக்கம் போல் லேட்டாகும்.சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து இருக்கேன். எனக்கு சாப்பாடு வேண்டாம்" என்று கூறினான். அவனுக்கு அப்படி என்ன வேலை என்று நிரஞ்ஜனாவுக்கு புரிந்திருந்தது.
(தொடரும்)
No comments:
Post a Comment