Wednesday, October 4, 2023

குருணை பாத்

 *கர்நாடக👆 பிராமின் சமையல் குருணை பாத்* 👇👆

அரிசியை மிக்சியில் வைப்பர் மோட்ல ஓடவிட்டு குருணையா உடைச்சிட்டு, வாணலில லைட்டா வறுத்துட்டு குக்கர்ல நல்லெண்ணெய் விட்டு கடுகு, ஜீரகம், உ.பருப்பு, க.பருப்பு, கருவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங் காயம் தூவி தாளிச்சிட்டு அரிசி குருணையை போட்டு ஒரு நிமிஷம் நல்லா வதக்கிட்டு, எவ்ளோ அரிசி போட்டிங்களோ அதுக்கு 1:2½ தண்ணி விட்டு, தேவையான உப்பு போட்டு கலக்கிட்டு, 2 அ 3 விசில் விட்டு இறக்குங்க! 

ஒரு கைப்பிடி தேங்காய் துருவலைப் போட்டு, கொஞ்சம் கொத்த மல்லி தூவி 2 ஸ்பூன் நெய் விட்டு புரட்டி விட்டு குக்கரை மூடிருங்க! 

ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பார்த்தால் கமகமவென மணக்கும் அரிசிக் குருணை பாத் ரெடி!

பிசிபெளே பகாளா பாத் மாதிரி இது *ஒரு கர்நாடக பிராமின் style Dish  !* 

வெங்காயம், கேரட், பீன்ஸ், பட்டாணிலாம் போட்டு வெஜிடபுள் ரைஸ் பாத் ஆகவும் செய்யலாம்!

No comments:

Post a Comment