*✳️♍பூண்டு, காய்கறி சேர்த்து சுவையான சூப்🌐⛔*
*தேவையான பொருட்கள்*
1. பூண்டு 6-7
2. இஞ்சி 1
3. வெங்காயம் 1
4. கேரட், முட்டைக்
கோஸ், பச்சை
பட்டாணி, சோளம், பீன்ஸ் 1 கப்
5. கார்ன்ஃப்ளார் மாவு 1 டீஸ்பூன்
6. மிளகு 1 டீஸ்பூன்
7. உப்பு தேவைக்கேற்ப
8. வெண்ணெய் 1 டீஸ்பூன்
*செய்முறை*
# ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளையும் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
# காய்கறிகள் சிறிது மென்மையாகும் வரை அனைத்தையும் வதக்க வேண்டும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து பூண்டு மற்றும் மிளகு சேர்க்கவும்.
# எல்லாம் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும். மற்றொரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார் மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிடவும்.
# கலவை நன்கு கொதி வந்ததும் சூப்பில் இந்தக் கலவையைச் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். அதனுடன், சூடாக வறுக்கப்பட்ட ரொட்டித் துண்டுகள் சேர்த்து பரிமாறவும்🟣🔵
No comments:
Post a Comment