மாற்றான் தோட்டத்து மல்லிகை -9
தான் செய்யப் போகும் காரியத்திற்கு இன்னும் கொஞ்சம் சரக்கு ஏற்றிக் கொண்டால் தான் நன்றாக இருக்கும் என்று ராபர்ட் நினைத்தான்.
எட்டு மணி ஆனபோது,வெளியே சென்ற ராபர்ட் பக்கத்திலிருந்த டாஸ்மாக் கடையில் ஒரு குவார்ட்டர் விஸ்கி வாங்கிக் கொண்டு வந்தான். வீட்டுக்கு வந்ததும் அதை,அந்த ராவில், ராவாக குடித்தான்.
இரவு 10:30 மணி அளவில் கார் பார்க்கிங்கில் சென்று ஆள் நடமாட்டம் இல்லை என்று உறுதி செய்து கொண்ட ராபர்ட், திரும்பி வந்து கார் சாவியை எடுத்துக்கொண்டு, ஜாஸ்மினை தூக்கிக்கொண்டு, கார் பார்க்கிங்கை அடைந்து
அவளை(அதை)காரின் பின்சீட்டில் உட்கார வைத்து, காரை கிளப்பினான். கார் தல்லாகுளத்தில் இருந்த ஜாஸ்மின் வீட்டை விட்டு மெதுவாக ஓட ஆரம்பித்தது. அடுத்த டிராபிக் ஜங்ஷனில் ரெட் லைட் எரிந்து கொண்டிருந்தால், காரை நிறுத்த வேண்டி இருந்தது. க்ரீன் சிக்னல் விழுந்ததும் வண்டியை மெதுவாக கிளப்பினான் ராபர்ட். கொஞ்ச தூரம் சென்ற உடனே, ரோட்டை மரித்து செக்கிங் செய்து கொண்டு இருந்த டிராபிக் டீம் ராபர்ட்டை பார்த்து வண்டியை ஓரம் கட்ட சொன்னார்கள். ராபர்ட் மெதுவாக இடது கை பக்கம் திரும்பி ஓரம் கட்டுவது போல் நடித்து, பின்பு வேகமாக காரை ஓட்ட ஆரம்பித்தான். அவன் இவ்வாறு செய்தவுடன் சந்தேகம் எழுந்த டிராபிக் இன்ஸ்பெக்டர் உடனடியாக அடுத்த ட்ராபிக் ஜங்ஷனில் இருந்த போலிசுக்கு ஒயர்லெஸ் மூலம் தகவல் தர, அடுத்த ஜங்ஷனில் ராபர்ட் தடுத்து நிறுத்தப்பட்டான். இதற்குள் அவனைத் தடுத்து நிறுத்திய முதல் ஜங்ஷன் இன்ஸ்பெக்டர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தார்.கார் கதவை திறந்து ராபர்ட்டை வெளியே இழுத்தார். தன்னிடமிருந்து கருவியை அவன் வாயருகில் வைத்து ஊதச்சொன்னார். அவன் நன்றாக போதையில் இருப்பதை அந்த கருவி காட்டிக்கொடுத்தது. "குடித்துவிட்டு வண்டி ஓட்டக்கூடாது என்று தெரியாதா" என்றார் போலிஸ்.
"தெரியும் சார். குடித்திருக்கிறேன். அதனால் வண்டியை ஓட்டுவதாக இல்லை. திடீரென்று என் மனைவிக்கு உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. அவள் பின் சீட்டில் மயக்கமாக இருக்கிறாள்.அவளை நர்சிங் ஹோமிற்கு கூட்டிச்செல்கிறேன். அதனால்தான் வண்டியை ஓட்ட வேண்டிய நிர்பந்தம்" என்றான். அவன் கூறியதை சிறிதளவு நம்பிய அந்த இன்ஸ்பெக்டர், வண்டியின் பின் சீட்டிற்கு சென்று "என்னம்மா உங்களுக்கு உடம்பு சரியில்லையா" என்று கேட்டார் .பதில் வராமல் போகவே அவர் கதவை திறந்தார். ஜாஸ்மின் தலை வெளியே சாய்ந்தது. இதற்குள் ராபர்ட் ஓட ஆரம்பித்தான். அவனை இன்னொரு டிராபிக் கான்ஸ்டேபிள் துரத்த ஆரம்பித்தார். அதற்குள் எதில் வேகமாக வந்த லாரி ராபர்ட் மேல் மோதியது. ராபர்ட் அதே இடத்தில் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு ஒரு நொடியில் துடி துடித்து இறந்தான்.
அங்கு கிடுகிடுவென கூட்டம் கூடிவிட்டது. போலீசார் ஜாஸ்மின் உடலை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு, அவள் உடலை ராஜாஜி அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார்கள். ராபர்ட் உடலும் அனுப்பி வைக்கப்பட்டது.வாழ்க்கையில் ஜோடியாக இருந்து,பின்னர் சிறிது காலம் பிரிந்திருந்த இருவரும், இப்போது மீண்டும் ஜோடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.அடுத்த நாள், காரின் நெம்பரை வைத்து, அவள் பிரபல இருதய நர்சிங் ஹோமில் வேலை செய்து கொண்டு இருந்த டாக்டர் ஜாஸ்மின் என்று போலீஸ் தெரிந்து கொண்டது(தொடரும்)
--------------------------------------------------------------
இன்று ஞாயிற்றுக்கிழமை.
இலவச இணைப்பாக கீழே
மாற்றான் தோட்டத்து மல்லிகை - 10
------------------------------------------------------------
மாற்றான் தோட்டத்து மல்லிகை-10
மறுநாள் காலை, வழக்கம்போல, சுகுமார் நர்சிங் ஹோமுக்கு சென்று விட்டான். காலை ஒன்பதரை மணிக்கு அவன் அனுமதிக்கபட்டிருந்த நர்சிங் ஹோமிலிருந்து டூட்டி டாக்டர் அவனை தொடர்பு கொண்டார். "டாக்டர் சுகுமார். நீங்கள் சாப்பிட்ட உணவில் நேற்று யாரோ
*Thalium* *
கலந்து இருக்கிறார்கள். நல்லவேளை சரியான சமயத்தில் எங்களிடம் வந்ததால் காப்பாற்றப்பட்டிருக்கிறீர்கள்" என்று கூறினார். சுகுமாருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. யார் தனக்கு தாலியம் கொடுத்திருக்க முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தான். எதற்கும் ஜாஸ்மின் வரட்டும் ஆலோசித்துப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டான்.ரிசப்ஷனிஸ்ட் வனிதாவிடம் சுகுமார் "டாக்டர் ஜாஸ்மின் இன்னும் வரவில்லையா" என்று கேட்டான்.
" இல்லை டாக்டர். இன்னும் வரவில்லை"என்றாள் வனிதா. அவன் தன்னுடைய ரூமுக்கு திரும்பிச் சென்றதும் வனிதா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.நல்லா இருந்த இந்த மனுஷன் ஸ்டெப்னியை தேடி அலைகிறாரே என்று நினைத்துக் கொண்டாள்
அந்த சமயத்தில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டேபிளுடன் உள்ளே நுழைந்தார்கள். ரிசப்ஷனிஸ்டிடம் சென்று" சீப் டாக்டரை பார்க்க வேண்டும்" என்று கேட்டார்கள் ."சீப் டாக்டர் இன்று லீவில் இருக்கிறார்.நீங்கள் வேண்டுமானால் டாக்டர் சுகுமாரை பார்க்கலாம்" என்று கூறினாள் வனிதா. இருவரும் சுகுமார் ரூமுக்கு சென்று கதவைத் தட்ட, சுகுமார் கமின் என்று சொன்னான்.உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் " ஐ அம் ஃப்ரம் தல்லாகுளம் கிரைம் பிரான்ச். உங்க ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர் ஜாஸ்மின் நேற்று இரவு கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதுவிமில்லாமல் ஜாஸ்மின் உடலை அப்புறப்படுத்த வேண்டி ஒருவன் காரை ஓட்டிக் கொண்டு வந்த போது அவன் மீது லாரி மோதி, அவனும் இறந்து விட்டான். ஜாஸ்மினைப்பற்றி விவரம்வேண்டும்" என்று சொன்னார்.தன் தலை மீது கை வைத்துக் கொண்டு சுகுமார் "மை காட். ஜாஸ்மின் செத்துவிட்டாளா. ஐயோ பாவம் "என்று இடிந்து போய் உட்கார்ந்தான். இன்ஸ்பெக்டர் "டாக்டர் ஜாஸ்மின் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்திருக்கிறார். அவருக்கு விரோதிகள் யாரும் உண்டா"என்று கேட்டார்.தனக்கும் ஜாஸ்மினுக்கும் இருந்த உறவை தவிர ஜாஸ்மினின் மற்ற எல்லா விவரங்களையும் இன்ஸ்பெக்டரிடம் சுகுமார் கூறினான்.
அப்போது அறைக்குள் நுழைந்த டாக்டர் குருவில்லா "என்ன டாக்டர் சுகுமார். உங்க க்ளோஸ் பிரண்ட் டாக்டர் ஜாஸ்மின் இறந்து போய்விட்டார்களாமே" என்று கூறினான். க்ளோஸ் என்ற வார்த்தையை அழுத்தம் கொடுத்து சொன்னான். அப்பொழுது தான் இன்ஸ்பெக்டரையும், கான்ஸ்டபிளையும் பார்த்த மாதிரி" ஐ அம் வெரி சாரி. நான் அப்புறம் வருகிறேன்" என்று கூறிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தான். இன்ஸ்பெக்டர் ஏதோ க்ளூ கிடைத்த சந்தோஷத்தில் சுகுமாரை பார்த்து "நீங்கள் நேற்று மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை எங்க இருந்தீர்கள் என்று கூற முடியுமா" என்று கேட்டார். அதைக் கேட்ட சுகுமார் "உங்கள் கேள்வியின் அர்த்தம் எனக்கு நன்றாக புரிகிறது. இந்தக் கொலையை நான் செய்திருப்பேனோ என்று உங்களுக்கு சந்தேகம் வருகிறது. நேற்று மாலை ஐந்தரை மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை ஜீவா நர்சிங் ஹோமில் படுத்து கிடந்தேன். ஐந்து மணிக்கு என்னை அங்கே கொண்டு போய் சேர்த்ததே டாக்டர் ஜாஸ்மின் தான். நீங்கள் வேண்டுமானால் ஜீவா நர்சிங் ஹோமில் விசாரித்துக் கொள்ளலாம்" என்றான் சுகுமார். அதற்கு இன்ஸ்பெக்டர் "நாங்கள் விசாரிப்பதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இப்பொழுது வந்து விட்டு போனவர் யார்" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்."அவர் பெயர் டாக்டர் ஜோசப் குருவில்லா" என்றான். என்றான் சுகுமார்.
கடைசியில் சுகுமார் "ஜாஸ்மின் கணவனை விட்டு பிரிந்து இருந்திருக்கிறாள். அவர் கணவன் பெயர் ராபர்ட் என்று அறிகிறேன். அவன் ஒரு மொடாக்குடியன்.அவள் உடலை எடுத்துக் கொண்டு சென்ற ஆள் ஒருவேளை ராபர்ட்டாக கூட இருக்கலாம்" என்று கூறினான்.
*-Thallium-201 is a radiopharmaceutical agent used in the diagnosis of coronary artery disease and parathyroid hyperactivity.
(தொடரும்)
No comments:
Post a Comment